• English
  • Login / Register

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கபட்டுள்ள செவ்ரோலெட் கொலராடோ

published on பிப்ரவரி 05, 2016 11:15 am by bala subramaniam

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் செவ்ரோலெட் தனது மிடில் சைஸ் பிக்அப் டிரக்கான செவ்ரோலெட் கொலராடோவை காட்சிக்கு வைத்துள்ளது. இந்தியாவில் இந்த பிக்அப் டிரக்கை அறிமுகம் செய்வது பற்றி, இதுவரை இந்நிறுவனத்திடம் இருந்து எந்தத் தகவலும் உறுதியாக வரவில்லை என்றாலும், அழுத்தமான ஆரஞ்சு வண்ணத்துடன் கருப்பு நிற ஸ்டிரைக்களுடன் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் கொலராடோ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறந்த செயல்திறனோடு, பல்வேறு விதத்திலும் உபயோகப்படும் இந்த மிடில் சைஸ் டிரக், முழுமையான பெரிய டிரக் தேவைப்படாத வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாக உபயோகப்படும். 

பாரம்பரிய செவி டிரக்கின் மரபில் உருவாக்கப்பட்ட புதிய கொலராடோ, உலகளவில் மூன்று இஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரண்டு விதமான பெட்ரோல் இஞ்ஜின்களான,  2.5 லிட்டர் மற்றும் 3.6 லிட்டர் V6 மற்றும் 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் போன்றவை ஆப்ஷனில் உள்ளன. நான்கு சிலிண்டர் உடைய 2.5 லிட்டர் இஞ்ஜின் 193 hp என்ற அளவில் குதிரைத் திறனும், 253 Nm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது, சுமார் 90 சதவிகித அதிகபட்ச டார்க்கை, 2000 rpm முதல் 6200 rpm என்ற அளவு சுழற்சியில் உற்பத்தி செய்கிறது. 3.6 லிட்டர் இஞ்ஜின், அதிகபட்சமாக 302 hp சக்தியையும், அதிகபட்சமாக 366 Nm டார்க்கையும் தரவல்லதாக இருக்கிறது.

சமீபத்தில் இதன் இஞ்ஜின் வரிசையில், 3400 rpm அளவில் 181 hp திறனையும், 2000 rpm அளவில் 500 Nm டார்க்கையும் உருவாக்கும் 2.8 லிட்டர் டியூராமேக்ஸ் டீசல் இஞ்ஜின் இணைந்துள்ளது. அனைத்து மாடல்களும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.

பின்புற பம்பரில் கார்னர்ஸ்டெப் டிசைன், EZ லிப்ட் – அண்ட் – லோவர் டெய்ல் கேட், டூ – டயர் லோடிங், தளம் முழுவதும் உள்ள 13 ஸ்டாண்டர்ட் டை-டௌன் லொகேஷன்கள், பெட் ரைல் மற்றும் டெய்ல் கேட் பிரொடெக்டர்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக இணைக்கப்பட்டுள்ளன.  

மேலும் வாசிக்கஆட்டோ எக்ஸ்போவில், செவ்ரோலேட் கோர்வேட் ஸ்டிங்க்ரே காட்சிக்கு வைக்கப்பட்டது

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience