ஆட்டோ எக்ஸ்போவில், செவ்ரோலேட் கோர்வேட் ஸ்டிங்க்ரே காட்சிக்கு வைக்கப்பட்டது
published on பிப்ரவரி 04, 2016 07:22 pm by saad for செவ்ரோலேட் கார்விட்டி
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆட்டோ எக்ஸ்போவின் இந்த பதிப்பில் ஜெனரல் மோட்டார்ஸின் தயாரிப்புகளின் வரிசையில், அமெரிக்காவில் முன்னணி வகிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்திறன் மிகுந்த காரான செவ்ரோலேட் கோர்வேட் உட்பட பல சுவாரஸ்யமான மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நம் மனதில் விருப்பத்தை ஏற்படுத்தி அதை அடையவிடாமல் ஏங்க வைப்பது (டென்டேலிஸிங்) மற்றும் ரேஸில் நிரூபிக்கப்பட்ட தொழிற்நுட்பம் (ரேஸ்-ப்ரூவன் டெக்னாலஜி) ஆகியவற்றின் கலவையாக அமையும் வகையில் திட்டமிட்ட வடிவமைப்பை இந்த கார் கொண்டுள்ளதால், நிச்சயமாகவே இது கண்காட்சியில் கவர்ந்திழுக்கும் ஒரு தயாரிப்பு என்று நாம் சொல்லியே ஆக வேண்டும். இந்த மாடலை இந்திய நேயர்களுக்கு காட்டுவதற்கு GM நிறுவனத்திற்கு விருப்பம் இருந்தாலும், தயாரிப்பாளர் தரப்பில் கோர்வேட் காரில், அதாவது குறைந்தபட்சம் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த காரில் ஒரு வலது கை டிரைவிங் பதிப்பை அறிமுகம் செய்ய விருப்பம் இல்லாமல் போனது துரதிஷ்டவசமானது.
இந்த காருக்கு, ஜெனரல் மோட்டார்ஸின் 6.2-லிட்டர் LT1 இயல்பான உள்ளிழுப்பு கொண்ட V8 என்ஜின் ஆற்றலை அளித்து, SAE சர்வதேச அளவிலான சான்றிதழ் பெற்ற ஆற்றலான 455 hp (339 kW) மற்றும் முடுக்குவிசையாக 624 Nm-யை அளிக்கிறது. ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த சிறிய பிளாக் என்ஜினின் இந்த ஆற்றலகம், ஒரு 7-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கூடிய ஆக்டிவ் ரெவ் மேச் அல்லது ஒரு பெடல்-ஷிஃப்ட் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு கிடைக்கிறது. இந்த கோர்வேட் ஸ்டிங்க்ரே C7 மணிக்கு 0-வில் இருந்து 60 மைல் (மணிக்கு 0 வில் இருந்து 97 கி.மீ.) வேகத்தை அடைய, எந்தவிதமான கூடுதல் செயல்திறன் பேக்கேஜ்களும் தேவைப்படாமல் 4 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது என்பது இதில் கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்சியமான காரியம் ஆகும். மேலும் இதில் ஈக்கோ, வேதர், ஸ்போர்ட், டிராக் மற்றும் டூர் உள்ளிட்ட டிரைவிங் வரம்பின் மோடுகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதன் நவீன தலைமுறையைச் சேர்ந்த இந்த ரேர்-வீல் டிரைவ் சூப்பர்கார் மிகவும் எடைக் குறைவாக காணப்படுகிறது. ஏனெனில் காம்போசைட் ஃபென்டேர்கள், கார்பன் ஃபைபர் ஹூட் உடன் கூடிய கார்பன்-நேனோ கலவையில் உருவான அண்டர்பாடி பேனல்கள் உடன் டோர்கள் மற்றும் ரேர் குவாட்டர் பேனல்கள் போன்ற எடைக் குறைப்பு கூறுகள் காணப்படுகிறது. வெளித் தோற்றம் அசத்தலாக இருப்பது போலவே, உட்புற அமைப்பிலும் பயணிகளுக்கு ஒரு ஸ்போர்ட்டி மற்றும் பிரிமியம் உணர்வை அளிக்கிறது. அலுமினியம், கார்பன் ஃபைபர் மற்றும் லேதர் பொருட்களின் பயன்பாடு உடன், சீட்களில் எடைக் குறைவான மாங்கனீசு பிரேம்களின் உபயோகமும் சேர்ந்து, பயணிகளுக்கு ஒரு கம்பீரமான உணர்வை தருகிறது. அதே நேரத்தில் 8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் மற்றும் மைலிங்க் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் 8-இன்ச் கலர் டிஸ்ப்ளே, அதனுடன் செயல்திறன் டேட்டா ரெக்கார்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் வாகனத்தை ஓட்டும் போது தகவல்களை அளிப்பதோடு, உங்களை குதூகலத்தோடும் வைத்திருக்கும்.
2015 ஆம் ஆண்டில் 24 ஹவர்ஸ் ஆப் லே மேன்ஸ் போட்டியில் எட்டாவது முறையாக, இந்த கோர்வேட் ரேஸிங் அணி வெற்றிப் பெற்று போடியத்தில் ஏறியதால், அமெரிக்காவில் இந்த காருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்துள்ளது. இந்த காரை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர GM திட்டமிடும் என்று நாம் நம்புவோம். தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2016-னின் உடனுக்குடன் மற்றும் பிரத்யேகமான செய்திகளை தெரிந்து கொள்ள கார்தேக்கோ-வை படியுங்கள்.