• English
  • Login / Register

2016 ஆட்டோ எக்ஸ்போ: ட்ரையல்ப்ளேஸரை, செவ்ரோலேட் காட்சிக்கு வைக்கிறது

published on பிப்ரவரி 04, 2016 02:43 pm by nabeel for செவ்ரோலேட் ட்ரையல்

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தற்போது நடைபெற்று வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில், தனது இந்திய முன்னணி தயாரிப்பான ட்ரையல்ப்ளேஸரை, செவ்ரோலேட் நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரூ.26.4 லட்சம் என்ற விலை நிர்ணயத்தில் இந்த SUV அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ட்ரையல்ப்ளேஸர் வாகனம், பிரிமியம் SUV சந்தையில் கேப்டிவா-விற்கு அடுத்தப்படியாக, செவ்ரோலேட் நிறுவனத்தின் இரண்டாவது முயற்சி ஆகும். நம் நாட்டிற்கு ஆரம்பக் கட்டத்தில் CBU வழியாக இந்த கார் கொண்டு வரப்படுகிறது. இந்த காரின் ஒரே ஒரு வகை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரு 2WD என்பது கவலை அளிக்கிறது. இதில் இரட்டை-முன்பக்க ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ABS+EBD ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த மிகப்பெரிய வாகனத்திற்கு, இதன் வகையிலேயே முன்னணி வகிக்கும் ஒரு டுராமேக்ஸ் 2.8-லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் ஆற்றலை அளித்து, அதன்மூலம் 3,600rpm-ல் 197bhp ஆற்றலையும், 2,000rpm-ல் 500Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. இந்த மோட்டார் ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிரிவிலேயே மிகப்பெரிதாக உள்ள இந்த காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை முறையே 4,878mm, 1,902mm மற்றும் 1,847mm என்ற அளவில் அமைகின்றன. இதற்கு 2,068 கிலோ எடையை எடுத்துச் செல்லும் திறனும், 231mm என்ற பெரிய அளவிலான கிரவுண்டு கிளியரன்ஸூம் கொண்டுள்ளது.

ஒரு வழக்கமான செவ்ரோலேட்டின் டிசைனை, இந்த SUV-யில் காண முடிகிறது. இதில் வழக்கமான செவ்ரோலேட் இரட்டை-போர்ட் கிரில் உடன் கூடிய ஸ்விப்ட் பேக் பிரோஜக்டர் ஹெட்லெம்ப்கள் மற்றும் ஃபேக்லெம்ப், பாலிஷ் செய்யப்பட்ட கிரோம் ஆகியவற்றை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் சுற்றிலும் மூடப்பட்ட LED டெயில்லெம்ப் கிளெஸ்டர் மற்றும் சில கிரோம் அசென்ட்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது. பக்கவாட்டில் பெரிய விண்டோக்கள், ஒரு சுற்றிலும் மூடப்பட்ட பின்பக்க விண்டு ஸ்கிரீன் மற்றும் அண்டர்ஸ்டேட்டு வீல் ஆர்ச்சுகள் ஆகியவை காணப்படுகின்றன.

ட்ரையல்ப்ளேஸரின் உட்புறத்தில், செவ்ரோலேட்டின் மைலிங்க் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில், இன்-பில்ட் சாட்டிலைட் நேவிகேஷன், கனேக்ட்டிவிட்டி தேர்வுகள் மற்றும் சென்ஸர் உடன் கூடிய ரிவெர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை காணப்படுகின்றன. டொயோட்டா ஃபார்ச்யூனர், மிட்சுபிஷி பஜேரா ஸ்போர்ட், ஹூண்டாய் சாண்டா பி, இசுசு MU 7, ஹோண்டா CR-V மற்றும் ஃபோர்டு எண்டோவர் ஆகியவை உடன் போட்டியிட உள்ளது. நீங்கள் ஒரு 4x4 SUV-க்காக எதிர்பார்க்கிறவர் என்றால், இந்த ட்ரையல்ப்ளேஸர் மூலம் ஏமாற்றம் தான் கிடைக்கும். ஏனெனில் இது ஒரு 4x2 என்ற செட்அப்-பில் மட்டுமே வருகிறது. ஆனால் எண்டோவர், ஃபார்ச்யூனர் மற்றும் பஜேரா ஆகியவை, ஒரு 4x4 தேர்வை பெற்று போட்டியிட தயாராக உள்ளன.

மேலும் வாசிக்க 

was this article helpful ?

Write your Comment on Chevrolet ட்ரையல்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience