• English
  • Login / Register

செவர்லே தனது கச்சிதமான செடான் வகை காரான பீட் கார்களை 2017 ஆம்ஆண்டு அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது.

published on ஆகஸ்ட் 10, 2015 09:35 am by manish for செவ்ரோலேட் பீட்

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்: செவர்லே நிறுவனம் தனது மிகவும் பிரபலாமான பீட் மாடல் காரை   ஒரு புதிய செடான் வகை  காராக உருவாக்கி வருகிறது. இந்த அடுத்த தலைமுறைக்கான பீட் கார்கள்   இந்திய சந்தையை குறி வைத்து  உருவாக்கப்பட்டு வருகிறது.  இந்த கார்கள் தற்போதய பீட் கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்குமே தவிர செவர்லே நிறுவனத்தின் மற்றொரு அறிமுகமாக உள்ள புதிய ஸ்பார்க் கார்களை போல் இருக்காது.

புதிய ஸ்பார்க் கார்கள் தயாரிப்பதில் உள்ள  சில விலை சம்மந்தமான சிக்கல்களால் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்  பட மாட்டாது என்று ஜி எம் நிறுவனம் தெளிவு படுத்தி உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் பேசும் போது இந்த கார்கள்  சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது என்றும் வளந்த நாடுகளின் கார் சந்தையை குறி வைத்தே இந்த கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தியா போன்ற சிக்கனத்தை எதிர் பார்க்கும் சந்தைக்கு  இந்த கார்கள் ஏற்றது இல்லை என்றும்  கூறினார்.

இப்போது தயாரிப்பில் உள்ள கச்சிதமான செடான் கார்கள், அடுத்த தலைமுறை பீட் கார்களைப் போன்ற வடிவமைப்பை கொண்டதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த கார்களின் நீளம் 4 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ள ஸ்பார்க் கார்களின் அம்சங்கள்  அறிமுகமாக உள்ள இரண்டு மாடல் பீட் கார்களிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.  என்னென்ன சிறப்பம்சங்கள் என்று குறிப்பிட்டு சொல்ல இன்னும் தேவையான விவரங்கள் நம்மிடம் இல்லை.

இந்த பீட் செடான் வகை கார்கள் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் மற்றும் பெட்ரோல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே பீட் கார்களில் இருந்த 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் ஈகொடேக் மோட்டார் பொருத்தப்பட்ட என்ஜின் இப்போது மாற்றப்பட்டு உள்ளது.   புதிய ஸ்பார்க் கார்களில் மூன்று சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும் ஈகொடேக் மோட்டார் பொருத்தப்பட்ட 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினே பயன்படுதப்படுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 
பீட் செடான் மற்றும்  பீட் சிறிய ரக கார் இரண்டுமே 2017 ஆம்  ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

was this article helpful ?

Write your Comment on Chevrolet பீட்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience