• English
  • Login / Register

புதிய ரெனால்ட் க்விட் காரின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்

published on செப் 10, 2015 11:42 am by manish for ரெனால்ட் க்விட் 2015-2019

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நகரத்தில் தற்போதைய பேச்சு, ரெனால்ட் க்விட் காரை பற்றி தான். சமீபத்தில் வெளியான சில தகவல்களை வெளியிட்டால், இந்த கார் மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்கலாம். ரெனால்ட் க்விட் காரின் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இன்னும் சில வாரங்களில், இந்த கார்  அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் கார், ஒரு 3-சிலிண்டர் 0.8-லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 57 bhp ஆற்றலை வெளியிடும் இந்த கார், 74 Nm முடுக்குவிசையை கொண்டு, 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்னர், ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் காரை, ஹாட்ச்பேக் பிரிவில் அறிமுகம் செய்யும்  என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய காருடன் ஒப்பிட்டால், அதில் சக்தி வாய்ந்த 1.0-லிட்டர் என்ஜின் இணைக்கப்பட்டிருக்கும்.

அதேபோல மாருதி ஆல்டோ 800, ஹூண்டாய் இயான் மற்றும் டாட்சன் கோ ஆகிய போட்டியாளர்களை மேற்கொள்ளும் வகையில், லிட்டருக்கு 25 கி.மீ (ARAI) மைலேஜ் அளித்து, க்விட் கார் எரிபொருள் சிக்கனத்தில் ஈடுபடும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எரிபொருள் சிக்கனம், இதன் தரத்தை உயர்த்துவதோடு, மாருதி ஸ்விஃப்ட் டிசையர் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஆகியவற்றின் டீசல் வகைகளின் மீதான விருப்பத்துடன் போட்டியிடும் என்று தெரிகிறது. கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற இந்த காரின் வெளியீட்டின் போது, ரெனால்ட் நிறுவனம் தெரிவித்த கருத்துகளில் இருந்து, மேற்கூறிய எரிபொருள் சிக்கனத்தில் தர முன்னணி வகிப்பது குறித்த வெளிப்பாடு உண்மை என்பது தெரிகிறது.

இந்த காரில் முதல் தரமான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. மேலும், இந்த பிரிவிலேயே அதிக பூட் ஸ்பேஸ் கொண்டதாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் கவர்ச்சிகரமாக தோன்றும் வகையில், இதற்கு சிறப்பான மேற்பூச்சு பணியை ரெனால்ட் நிறுவனம் செய்துள்ளது. இதன் SUV-யை போன்ற ஸ்டைல் மற்றும் தடித்த வடிவமைப்பு மூலம் தனித்தன்மை வாய்ந்ததாகவும், இதன் பிரிவில் தரமானதாகவும் அடையாளம் காட்டி கொள்ள முடிகிறது. இதற்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சத்தை ஒட்டி விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

was this article helpful ?

Write your Comment on Renault க்விட் 2015-2019

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • வாய்வே மொபிலிட்டி eva
    வாய்வே மொபிலிட்டி eva
    Rs.7 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience