சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

MG Astor காரின் 100 -வது ஆண்டு லிமிடெட் எடிஷனை விரிவான கேலரியில் பாருங்கள்

published on மே 22, 2024 05:54 pm by ansh for எம்ஜி ஆஸ்டர்

ஆஸ்டரின் பெரும்பாலான மாற்றங்கள் தோற்றத்துக்காக இருந்தாலும், அதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு கிரீன் கலர் தீம் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு தனித்துவமான வசதியாக கருதப்படுகிறது.

MG ஆஸ்டர் சமீபத்தில் ஹெக்டர், காமெட் EV மற்றும் ZS EV ஆகியவற்றுடன் 100-வது ஆண்டு லிமிடெட் எடிஷனின் வரிசையில் இணைந்துள்ளது. இந்த பிரத்யேக மாடல்கள் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கியுள்ளன. ஸ்பெஷல் எடிஷனான ஆஸ்டரை வாங்குவதைப் பற்றி நீங்கள் பரிசீலித்து அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த விரிவான கேலரி மூலம் அதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.

வெளிப்புறம்

ஸ்பெஷல் எடிஷனான ஆஸ்டர் "எவர்கிரீன்" நிறத்தில் வருகிறது, இது பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் மூலம் ஈர்க்கப்பட்டது அதன் நிறத்தை பிரதிபலிக்கிறது. இது ஒரு நேர்த்தியான பிளாக் ரூஃப் மற்றும் க்ரில் மற்றும் பம்பர் போன்ற மற்ற பிளாக் கலர் எலமென்ட்களை கொண்டுள்ளது. இவை ஸ்டாண்டர்டான குரோமுக்கு பதிலாக டார்க் குரோமில் நேர்த்தியாக ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

காரின் பக்கங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறைவானவை, ஆனால் மிகவும் ஸ்டைலாக இருக்கின்றன. ஆல்-பிளாக் நிற அலாய் வீல்கள், ORVM ஹவுசிங் மற்றும் ரூஃப் ரெய்ல்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.

பின்புறத்தில், டிசைனில் பெரிய அளவில் மாறாமல் எதுவும் மாறவில்லை. இதில் செய்யப்பட்ட ஒரே குறிப்பிடத்தக்க மாற்றம் டெயில்கேட்டில் '100-வது ஆண்டு' பேட்ஜிங் சேர்க்கப்பட்டுள்ளது மட்டுமே.

உட்புறம்

கேபினில் ஒரே மாதிரியான பிளாக் மற்றும் கிரே கலர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது டாஷ்போர்டு முழுவதும் பிளாக் கலரில் உள்ளது.

முன் மற்றும் பின்புற சீட்கள் பிளாக் மற்றும் கிரீன் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் முன் சீட்கள் ஹெட்ரெஸ்ட்களில் 100-வது ஆண்டு பேட்ஜ் உள்ளது.

மிக முக்கியமான மாற்றம் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் செய்யப்பட்டுள்ளது. இது இப்போது கிரீன் கலர் யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் காரின் தீமிற்கு ஏற்ப பட்டன்களையும் பெறுகிறது.

பவர்டிரெய்ன்

MG ஆஸ்டர் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது: 1.5-லிட்டர் பெட்ரோல் யூனிட் (110 PS மற்றும் 144 Nm) 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆப்ஷனுடன் வருகிறது, மேலும் 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (140 PS மற்றும் 220 Nm) 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளது. 100-வது ஆண்டு எடிஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது.

வசதிகள்

எஸ்யூவியின் ஷார்ப் ப்ரோ வேரியன்ட்டின் அடிப்படையில், ஸ்பெஷல் எடிஷனில் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ரியர் ஏசி வென்ட்களுடன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் வசதிகளுடன் வருகிறது. 6-வே பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளை இந்தக் கார் பெறுகிறது.

மேலும் பார்க்க: முதல் முறையாக கேமராவில் சிக்கிய Tata Curvv காரின் இன்டீரியர் விவரங்கள்

பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.

விலை

இந்த ஸ்பெஷல் எடிஷன் ஆஸ்டரின் மிட்-ஸ்பெக் ஷார்ப் ப்ரோ வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் எடிஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷனின் விலை ரூ.14.81 லட்சம் முதல் ரூ.16.08 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. MG ஆஸ்டர் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க: ஆஸ்டர் ஆன் ரோடு விலை

a
வெளியிட்டவர்

ansh

  • 35 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது எம்ஜி ஆஸ்டர்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை