இந்தியாவில் புதிய சீகல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் டிரேட்மார்க்கை பதிவு செய்த BYD நிறுவனம்
shreyash ஆல் ஆகஸ்ட் 18, 2023 05:44 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
சீகல் என்பது BYD -யின் மிகச்சிறிய ஹேட்ச்பேக் கார் ஆகும், மேலும் இது சிட்ரோன் eC3 -க்கு போட்டியாக இருக்கும்.
- BYD சீகல் என்பது ஒரு என்ட்ரி-லெவல் மின்சார ஹேட்ச்பேக் ஆகும், இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
- இதன் முன்பதிவு சீனாவில் ஏற்கனவே தொடங்கியுள்ளது, ப்ரீ சேல்ஸ் விலையானது 78,800 RMB முதல் 95,800 RMB வரை (தோராயமாக ரூ. 9 லட்சம் முதல் ரூ. 11 லட்சம்) வரை இருக்கும்.
- சீகல் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெற்றுள்ளது - 30kWh மற்றும் 38 kWh - இதன் மூலமாக அதிகபட்சமாக 405கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும் .
- இது 2024 -ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
இந்தியாவில் BYDசீகல், என்ற பிராண்டின் புதிய மிகச்சிறியமின்சார ஹேட்ச்பேக் -க்கான வர்த்தக பெயரை பதிவு செய்துள்ளது. சீகல் BYD நிறுவனத்தின் மிகச்சிறிய மின்சார வாகனம் ஆகும், மேலும் இது ஆட்டோ ஷாங்காய் 2023 மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது அதில் என்ன வசதிகள் கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்:
தோற்றம் எப்படி இருக்கிறது?
சீகல் ஒரு 5-டோர் மின்சார ஹேட்ச்பேக் ஆகும், இது ஷார்ப்பான விவரங்களுடன் டால்பாய் வடிவமைப்பை கொண்டுள்ளது. ஹெட்லைட் ஷார்ப்பாகவும், பம்பரின் வடிவமைப்பு ஆக்ரோஷமாகவும் தெரிகிறது. பக்கவாட்டில் இருந்து பார்த்தால், இது உயரமான ஜன்னல் மற்றும் ரூஃப்-இன்டெகிரேட்டட் ஸ்பாய்லர் மூலம் ஓரளவு ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொண்டுள்ளது. பின்புறத்தில், கனெக்டட் எல்ஈடி டெயில் லேம்ப்கள் அதற்கு மெருகூட்டி கண்ணைக் கவர்கின்றன.
மேலும் பார்க்கவும்: BYD யின் $1 பில்லியன் இந்திய முதலீட்டு திட்டம் நிராகரிக்கப்பட்டது: நடந்தது என்ன
அம்சங்கள்
இது ஒரு என்ட்ரி-லெவல் காராக இருந்தாலும், MG Comet EV -யில் இருப்பதை போன்ற உயர்தரமான உட்புறத்தைக் கொண்டுள்ளது. BYD சீகலின் உட்புற வடிவமைப்பு BYD Atto 3 -லிருந்து குறிப்பிடத்தக்க விஷயங்களை பெறுகிறது. அதே மாதிரியான ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டு கட்டமைப்பை பெறுகிறது. சீகல் ஒரு பெரிய டச் ஸ்கிரீனை கொண்டுள்ளது, இதை போர்ட்ரெயிட் மற்றும் லேண்ட்ஸ்கேப் ஆகவும் பயன்படுத்தலாம் . மேலும் ஒரு சிறிய டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவையும் கிடைக்கும்..
பேட்டரி பேக் & ரேஞ்ச்
காரில் இருக்கும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், சீகல் : 30kWh மற்றும் 38kWh என இரண்டு பேட்டரி பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது.முதலாவது 74PS மின்சார மோட்டாருடன் இணைக்கப்படலாம், அதே சமயம் இரண்டாவது 305 கிமீ மற்றும் 405 கிமீ ரேஞ்ச் உடன் 100PS மின்சார மோட்டாரை கொண்டிருக்கும்.
மேலும் பார்க்கவும்: 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வரவிருக்கும் 10 கார்கள்
BYD நிறுவனம் சீ லயன் டிரேட்மார்க்கையும் பதிவு செய்துள்ளது
இந்தியாவில் மின்சார வாகன (EV) விற்பனையின் எதிர்காலத்தை கணித்துள்ள, BYD நிறுவனம் "சீ லயன்" பிரீமியம் காருக்கான டிரேட்மார்க்கையும் பதிவு செய்துள்ளது. இந்த மாடலின் முன்மாதிரிகள் இந்தியாவிற்கு வெளியே தென்பட்டன, மேலும் பிராண்டின் வரிசையில் இருக்கும் Atto 3 -க்கு மேல் நிலைநிறுத்தப்படும்.
204PS மற்றும் 310Nm உற்பத்தி செய்யும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட Atto 3 (ஒரு 60.48kWh அலகு) -ல் உள்ள அதே பேட்டரி பேக்கை இது பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உரிமை கோரப்பட்ட ஓட்டுநர் வரம்பு 521 கிமீ வரை இருக்கலாம். இது ஒரு பெரிய பேட்டரி பேக் மற்றும் அதிக வரம்புடன் கூடிய ஆல்-வீல் டிரைவ் டிரெய்னையும் கொண்டிருக்கக்கூடும்.
எதிர்பார்க்கப்படும் சீகல் & சீ லயன் அறிமுகம்
BYD சீகல் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் 2024 -ம் ஆண்டில் இந்தியாவிற்கு வரலாம். சீனாவில் அதன் ப்ரீ சேல்ஸ் விலை 78,800 RMB முதல் 95,800 RMB வரை (தோராயமாக ரூ. 9 லட்சம் முதல் ரூ. 11 லட்சம் வரை) இருக்கும். இந்தியாவில், எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் விலை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG Comet EV , Tata Tiago EV மற்றும் Citroen eC3 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் . மறுபுறம், ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் போன்றவற்றுக்கு மாற்றாக, சீ லயன் ரூ. 35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் பின்னால் அறிமுகப்படுத்தப்படலாம்.