BYD Seal காருக்கான முன்பதிவு தொடங்கியது: இந்தியா -வுக்கான காரின் விவ ரங்களும் வெளியிடப்பட்டன
பிஒய்டி சீல் க்காக பிப்ரவரி 28, 2024 05:47 pm அன்று சோனு ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
எலக்ட்ரிக் செடான் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடனும் மற்றும் ரியர்-வீல்-டிரைவ் (அ) ஆல்-வீல்-டிரைவ் தேர்வுடனும் வழங்கப்படும்.
-
இந்தியாவில் இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்: 61.4 kWh மற்றும் 82.5 kWh.
-
BYD சீல் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் போன்ற இரண்டு செட்-அப்களிலும் கிடைக்கும் WLTP கிளைம்டு ரேஞ்ச் 570 கி.மீ வரை இருக்கும்.
-
இந்தியாவில் இது மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படும்: டைனமிக் ரேஞ்ச் பிரீமியம் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மன்ஸ்.
-
இதற்கான ஆரம்ப விலை ரூ. 55 லட்சம் முதல் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BYD சீல் இந்தியாவில் மார்ச் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்க்கான ப்ரீ ஆர்டர்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சத்தை டோக்கன் தொகையை செலுத்தி எலக்ட்ரிக் செடானை முன்பதிவு செய்யலாம். மேலும் அதன் டெலிவரிகள் ஏப்ரல் 2024 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக சீலுக்கான விவரங்கள் வெளியாகியுள்ளன. அதை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
அளவுகள்
நீளம் |
4800 மிமீ |
அகலம் |
1875 மிமீ |
உயரம் |
1460 மிமீ |
வீல்பேஸ் |
2920 மிமீ |
பூட் ஸ்பேஸ் |
400 லிட்டர் |
ஃப்ரங்க் |
50 லிட்டர் |
டொயோட்டா கேம்ரியின் நீளத்தைப் போலவே ஒரு EV ஆக BYD சீல் 400 லிட்டர் பூட் ஸ்பேஸுடனும் கூடுதலாக ஒரு ஃப்ரங்க் (முன்புற ட்ரங்க்) ஸ்டோரேஜுடனும் வருகிறது.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்
இந்தியாவில் BYD சீல் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் இது வேரியன்ட் அடிப்படையில் வெவ்வேறு அளவிலான பெர்ஃபார்மன்ஸை வழங்குகிறது. அதன் விரிவான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
பேட்டரி பேக் |
61.4 kWh |
82.5 kWh |
82.5 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் |
சிங்கிள் |
சிங்கிள் |
டூயல் |
பவர் |
204 PS |
313 PS |
560 PS |
டார்க் |
310 Nm |
360 Nm |
670 Nm |
கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் (WLTC) |
460 கி.மீ |
570 கி.மீ |
520 கி.மீ |
0-100 கி.மீ/மணி |
7.5 நொடிகள் |
5.9 நொடிகள் |
3.8 நொடிகள் |
சீல் 150 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது. இதன் மூலம் அதன் பேட்டரி பேக்கை வெறும் 26 நிமிடங்களில் 30 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய உதவுகிறது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
BYD அட்டோ 3 எலக்ட்ரிக் SUVயில் நம் கண்களைக் கவர்ந்த சில வித்தியாசமான விவரங்களைக் கொண்ட BYD சீல் இந்தியாவில் கார் தயாரிப்பாளரின் மூன்றாவது காரக இருக்கும். சீலின் உள்ளே குறிப்பிடத்தக்க அம்சங்களில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஆதரிக்கும் சுழலும் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். கூடுதலாக இது இரண்டு வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் மெமரி செயல்பாடு கொண்ட 8-வழி பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஹீட் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: ஸ்கோடா இந்தியா Sub-4m SUV 2025ல் வரவுள்ளதாக உறுதி செய்யப்பட்டது
பயணிகளின் பாதுகாப்பிற்காக BYD சீல் 8 ஏர்பேக்குகள் EBD உடன் ABS ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் 360 டிகிரி கேமரா ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் என முழுமையான ADAS வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் லேன் கீப் அசிஸ்ட் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) வசதிகள் இதன் தனிச்சிறப்பாக உள்ளன. கூடுதலாக சீல் யூரோ NCAP மற்றும் ANCAP ஆகிய இரண்டிலிருந்தும் 5-ஸ்டார் க்ராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
BYD சீல் காரின் எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை ரூ. 55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது BMW i4 -க்கு விலை குறைவான போட்டியாக அமைகிறது. மேலும் இது ஹூண்டாய் அயோனிக் 5, கியா EV6 மற்றும் வோல்வோ C40 ரீசார்ஜ் போன்ற பிற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு மாற்றாக இருக்கக்கூடும்.