• English
    • Login / Register

    அறிமுகத்திற்கு முன்பே பலீனோ வாங்குவதைப் பற்றி முடிவெடுங்கள்

    raunak ஆல் அக்டோபர் 21, 2015 02:24 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 19 Views
    • 8 கருத்துகள்
    • ஒரு கருத்தை எழுதுக

    மாருதி சுசுகி நிறுவந்த்தின், ஹாட்ச்பேக் மாடல்களின் முன்னோடி என்று ஸ்விஃப்ட் காரை குறிப்பிட்டால், அது மிகையாகாது. மேலும், 2005 -ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட முதல் ஜென் ஸ்விஃப்ட் வெளியானதன் பின்பே, மக்களுக்கு பிரிமியம் ஹாட்ச்பேக் கார்களைப் பற்றிய பரீட்சயம் வந்தது. நமது நாட்டில் ஸ்விஃப்ட் வருவதிற்கு முன்பு வேறு சில சக்தி வாய்ந்த சொகுசான ஹாட்ச் மாடல்கள் சந்தையில் இருந்தாலும், ஸ்விஃப்ட்டின் கவர்ச்சிகரமான சிறப்பம்சங்கள் அவற்றில் இருந்து தனித்து விளங்கியது. எனவே, மக்களின் ஏகோபித்த பாராட்டையும் அபிமானத்தையும் பெற்றது. தற்போது, மக்களுக்கு காம்பாக்ட் SUV  மாடல்களின் மீது தனி ஆர்வம் உள்ளது போல, ஸ்விஃப்ட் வெளிவந்த காலகட்டத்தில், மக்கள் பிரிமியம் ஹாட்ச் மாடல்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

    இந்திய வாகன சந்தையில், ஹாட்ச் பேக் பிரிவிற்கே உரித்தான அம்சங்கள் அனைத்தும், முதல் முறையாக ஸ்விஃப்ட் காரில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், அதற்கு பிறகு பல விதமான புதிய அம்சங்கள் சந்தைக்கு வந்துவிட்டது. முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால், i20 காரில் வரும் கவர்ச்சிகரமான அம்சங்களைக் குறிப்பிடலாம். போட்டியாளர்கள் மிகுந்துள்ள இச்சூழ்நிலையில், ஹுண்டாயின் எலைட் i20 –யுடன் நேருக்கு நேர் நின்று போட்டி போட, மாருதிக்கு ஒரு சிறந்த ஹாட்ச் பேக் கார் தேவைப்பட்டதனால், பலீனோ என்ற பிரசித்தி பெற்ற சேடன் வகை காரின் பெயரில், ஒரு புதிய ஹாட்ச் பேக் காரை உருவாக்கியது. அதனை பிராங்க்பார்ட் மோட்டார் கண்காட்சியில் முதல் முதலாக காட்சிப் படுத்தியது. மாருதி நிறுவனம், இந்த காரை உலகில் மற்ற பாகங்களில் அறிமுகப்படுத்தும் முன்னரே, இந்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

    மாருதி சுசுகி பலீனோ USPs

    • வழக்கமாக வரும், ABS மற்றும் EBD  இணைக்கப்பட்ட முன்புறத்தில் உள்ள இரட்டை காற்று பைகள் அனைத்து மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன
    • இந்தியாவில் முதல் முறையாக 7 அங்குல ஸ்மார்ட் பிளே இன்ஃபோடைன்மெண்ட் அமைப்புடன் இணைந்த ஆப்பிள் CarPlay (அதிக விவரத்திற்கு ஆப்பிள் CarPlay பற்றி வாசிக்கவும்) பலீனோவில் பொருத்தப்பட்டுள்ளது.
    • இந்த பிரிவில் முதல் முறையாக மிகப் பிரகாசமான வெளிச்சத்தை வெளியேற்ற உதவும் HID அமைப்பு மற்றும் காலையிலும் பிரகாசமாக எரியும் LED பொருத்தப்பட்ட முன்புற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
    • பலீனோவின் கண்ணாடிகளுக்கு 85 சதவிகித UV கதிர்களை தடுக்கும் சக்தி உண்டு என்று, சுசுகி நிறுவனம் உறுதி கூறுகிறது.
    • இந்த பிரிவில் முதல் முறையாக, 4.2 அங்குலத்தில் TFT டிரைவர் இன்ஃபர்மேஷன் வண்ணத் திரை வருகிறது. நேரத்தைக் காட்டும் கடிகாரம் (அனலாக் டிசைன்), சராசரி FE, தனித்தன்மை வாய்ந்த டார்க் மற்றும் சக்திகளின் அளவை உடனுக்குடன் வெளிப்படுத்தும் இன்டிகேட்டர்கள், சராசரி வேகத்தை காட்டும் கருவி போன்ற பல கருவிகள், இந்த திரை வழியாக, ஓட்டுனருக்கு முக்கியமான விவரங்களைத் தெரியப்படுத்துகின்றன. 


    பலீனோவின் அம்சங்களைப் பார்க்கும் போது, இந்த கார் மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. நெக்ஸா பிரிமியம் டீலெர்ஷிப் மூலம் வெளியான முதல் கார் என்ற பெருமை Sக்ராஸ் காருக்கு பதில் பலீனோவிற்கு கிடைத்திருக்கலாம். நெக்ஸா வழியாக ரீடைல் செய்யப்படும் இரண்டாவது கார் பலீனோவாக இருக்கும். எனினும், இந்த காரில் உள்ள மிகப் பெரிய குறை என்னவென்றால், இதில் இஞ்ஜின் ஆப்ஷன்ஸ் எதுவும் இல்லை. இதன் இஞ்ஜின் லைன்-அப் முழுவதும் ஸ்விஃப்ட்டில் இருப்பதைப் போலவே உள்ளது. பலீனோ, உலகம் முழுவதும் சுசுகியின் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வெளிவரும். சியாஸ், S க்ராஸ் மற்றும் எர்ட்டிகா போன்ற கார்களில் உள்ள 1.3 மல்டி ஜெட் / DDiS இஞ்ஜினின் 90 PS வெர்ஷனைக் கூட, மாருதி இந்த காருக்கு கொடுக்கவில்லை. குறைந்த பட்சம், 90 PS வெர்ஷனையாவது கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் மனதில் எழுகிறது. 

    இத்தகைய ஆதங்கம் இருந்தாலும், ஒரு புத்தம் புதிய தொழில்நுட்பத்தில் பலீனோ தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த கார் ஸ்விஃப்ட்டை விட 100 கிலோ குறைவாக உள்ளது. நிச்சயமாக, இது ஒரு மிகப் பெரிய சாதனையாகும். இந்த கார், ஸ்விஃப்ட்டை விட அதிகமான சிறப்பம்ஸங்களுடன்; அதில் உள்ள அதே இஞ்ஜின் வகைகளுடன்; மற்றும் அதை விட அளவில் பெரியதாக இருந்த போதிலும், ஒரு டன் (1000 கிலோ) எடையை விட குறைவாக இருப்பதை நம்ப முடியவில்லை, ஆனால் இதுவே உண்மை. 

    மேற்சொன்ன சாதனைத் தவிர்த்து, பலீனோவில் ஆப்பிள் CarPlay, UV (புற ஊதா) கதிர்களைக் குறைக்கும் கண்ணாடிகள்; பெரிய MID திரை; மற்றும் பலவிதமான கூடுதல் அம்ஸங்களை பொருத்தியதற்காக மாருதி நிறுவனம் ஏகோபித்த பாராட்டை பெறுகிறது. இறுதியாக, நாம் இதன் விலைப் பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும். மாருதி நிறுவனம் இதன் விலையை மட்டும் சரியாக நிர்ணயித்துவிட்டால், நிச்சயமாக ஏனைய நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். விலைக் குறிப்புகளைப் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும். அதுவரை காத்திருங்கள்.

    பின் குறிப்பு: பலீனோ என்ற சொல்லுக்கு இத்தாலியில் ‘ஒளிச்சுடர்’ என்று அர்த்தம்- என்று சுசுகி நிறுவனம் குறிப்பிடுகிறது.

    மாருதி சுசுகி பலீனோ: ஃபர்ஸ்ட் ட்ரைவ் வீடியோ

    தவறாமல் வாசிக்க:

    • மாருதி சுசுகி பலீனோ: ஃபர்ஸ்ட் ட்ரைவ் 
    • மாருதி நிறுவனத்திடம் ஒரு கேள்வி: பலீனோவில் ஏன் 90 PS பொறுத்தபடவில்லை?
    • மாருதி பலீனோ பிரத்தியேக புகைபடங்கள்: அசத்தலான புகைப்பட கேலரி
    was this article helpful ?

    Write your Comment on Maruti பாலினோ 2015-2022

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience