• English
  • Login / Register

க்விட் வாங்க போகிறீர்களா? இதோ நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

published on செப் 14, 2015 09:42 am by manish for ரெனால்ட் க்விட் 2015-2019

  • 11 Views
  • 3 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் க்விட் காரை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில், அவை ஏமாற்றம் அளிப்பவையாக இல்லை. இந்த கார் ஒரு SUV-யின் ஸ்டைலையும், உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸையும் அளிப்பது வெளிப்படையாக தெரிந்த அம்சங்கள் ஆகும். இதிலும் குறிப்பாக நகர பகுதிகளிலும், தொல்லை தரும் குழிகள் மற்றும் வேகத்தடைகள் கொண்ட சிக்கல் பிடித்த சாலையிலும் செல்லும் போது அந்த காரை எளிதாக கையாள முடிகிறது. இது ஒரு SUV-யின் நிலைப்பாட்டை கொண்டிருப்பதால், ஓட்டுநருக்கு மிகச் சிறப்பான பார்வை திறன் கிடைக்கிறது.

வெளிப்புற அமைப்பு:

முன் பக்கத்தில் C-வடிவிலான கிரோம் சிக்னேச்சர் லைட்டிங் கிளெஸ்டரும், பின்பக்கத்தில் குறுகிய பூட் தொங்கியது போன்றும் இருப்பதை காணலாம். இவை க்விட் காருக்கு பலமான, வலுவான மற்றும் தாக்குவது போன்று உருவ அமைப்பை அளிக்க உறுதுணையாக உள்ளன.

பிரெஞ்சு வடிவமைப்பு அழகை வெளிக்காட்டி கவரும் வகையில், வெளிப்புற பூச்சு நேர்த்தியாக உள்ளது. செதுக்கப்பட்டது போன்ற தடித்த பக்கங்கள், மினிமலிஸ்ட்டிக்கலி ரேக்டு விண்ட்ஸ்கிரீன் மற்றும் இன்டிகிரேட்டு ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவற்றின் கூட்டு கலவை மூலம் க்விட் காரில் திரவத்தன்மை மற்றும் இயக்கம் உள்ளது போன்ற ஒரு உணர்வை பெற முடிகிறது.

க்விட்டின் உள்புற அம்சங்கள்:

ரெனால்ட் க்விட் மிக எளிதாக, அதேநேரத்தில் இளம் ஸ்டைலான அம்சங்களை பெற்றுள்ளது. RXT வகையின் டாஸ்போர்ட்டில், இப்பிரிவிலேயே முதல் முறையாக டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர்களின் மீதெங்கும் கிரோம் வரிகளை அள்ளி தெளித்தது போல காட்சியளிப்பது போன்ற அம்சங்கள் காணப்படுகிறது. இந்த 7-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, குரல் வழிகாட்டலுக்கு தகுந்தாற் போல பணியாற்றும் நேவிகேஷன் போன்ற செயல்பாடுகளை கொண்ட மீடியாNAV அம்சத்தை பெற்றுள்ளது.

RXE-யின் பொழுதுபோக்கு அமைப்பு தேர்விற்கு உட்பட்டது. ஆனால் மேற்கூறிய வகையில், வாய்ஸ் கைடன்ஸ், ப்ளூடூத் ஆடியோ ஸ்டீரிமிங் மற்றும் ஹேட்ஸ்-ப்ரீ டெலிபோனி, USB & AUX-இன்புட் போர்ட்ஸ் உள்ளிட்ட பல விதமான இன்புட் அம்சங்களின் வசதிகளை கொண்டுள்ளது. இந்த மீடியா சிஸ்டம், ஸ்பீடு சென்ஸிங் வால்யூம் கன்ட்ரோல்களையும் பெற்றுள்ளது.

RXL மற்றும் RXT வகைகளில் உள்ள சீட்கள், கருப்பு, சாம்பல் மற்றும் சிவப்பு ஸ்போர்ட்டி மெத்தைகளால் மூடப்பட்டுள்ளது. RXL-ல் இன்டென்ஸ் ரெட் என்று ரெனால்ட் அழைக்கும் நிறத்திலும், RXT-ல் சாம்பியன் ரெட் என்று அறியப்படும் நிறத்திலும் கிடைக்கிறது. ரெனால்ட்டின் “இர்கோ ஸ்மார்ட் கேபின்” மூலம் ஒரு நுட்பமான அனுபவத்தையும், உள்புற கட்டமைப்பின் தரத்தை கண்டு ஈர்க்கப்படும் வகையிலும் உள்ளது.

இதோடு, மிகச் சிறந்த ஓட்டுநர் நிலையை பெறும் வகையில், க்விட்டில் 4-வே அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் வசதி காணப்படுகிறது.

க்விட்டில், 3 ஜோடி கையுறை பெட்டிகள் உட்பட பல சிறியளவிலான பொருட்கள் வைப்பு இடங்கள் உள்ளன. நீண்டதூர பயணங்கள் செல்பவர்களுக்கு இந்த கார் மிகச் சிறந்த தேர்வாக அமையும். ஏனெனில் இந்த காரில் உள்ள 300 லிட்டர் பூட் ஸ்பேஸை, 1,115 லிட்டர் வரை விரிவுப்படுத்திக் கொள்ள முடியும். இதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் எப்போதும் தொடர்பில் இருக்க, க்விட்டில் மிகச் சிறப்பான மூடப்பட்ட பவர் சாக்கெட் காணப்படுகிறது.

3-சிலிண்டர் என்ஜின், 799cc, 54 bhp மூலம் இயங்கும் க்விட் கார், 72Nm முடுக்குவிசையை அளிக்கிறது. இந்த கார், ஈர்க்கக் கூடிய வகையில் 180mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கிறது. ஓட்டுநருக்கு வசதியாக ஒரு தேர்வுக்கு உட்பட்ட ஏர்பேக் அளிக்கப்படும் நிலையில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் அமைப்பு மட்டும் எல்லா வகைகளிலும் அளிக்கப்படுகிறது. ஆனால் அதன் ட்ரிம்ஸ் மட்டும் வேறுபடுகிறது. மற்றபடி, ஒரு சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், முன்புற டிஸ்க் பிரேக்குகள், மேலே நோக்கி செல்லும் ஸ்டாப் லெம்ப், ஒளியெழுப்பும் பார்க்கிங் பிரேக் எச்சரிக்கை அமைப்பு ஆகிய பாதுகாப்பு மற்றும் பத்திரத் தன்மைக்கு ஏற்ற அம்சங்கள் காணப்படுகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Renault க்விட் 2015-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience