பிஎஸ் 6 மஹிந்திரா பொலெரோ அறிமுகத்திற்கு முன்பு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது
மஹிந்திரா போலிரோ க்கு published on மார்ச் 17, 2020 04:43 pm by rohit
- 30 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
பிஎஸ் 6 பொலெரோ மாற்றம் செய்யப்பட்ட முன் பக்க அமைப்பைப் பெறுகிறது, இப்போது அது மோதுதல்-சோதனை செய்யப்பட்டு உள்ளது
-
பொலெரோ பவர்+ இலிருந்து அதே 1.5 லிட்டர் இயந்திரத்தை மஹிந்திரா வழங்கும்.
-
பிஎஸ்6 பொலெரோ, பொலெரோ பவர்+ ஐ காட்டிலும் ரூபாய் 80,000 வரை விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பொலெரோ பவர்+ விலை ரூபாய் 7.61 லட்சத்திலிருந்து ரூபாய் 8.99 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் டெல்லி) இருக்கும்.
-
இது "பொலெரோ பவர் +" க்கு பதிலாக இப்போது "பொலிரோ" என்று அழைக்கப்படலாம்.
-
வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்6 பொலெரோ டிசம்பர் 2019 இல் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. பொலேரோவின் பிஎஸ்6 பதிப்பைக் காட்சிப்படுத்தும் போது எடுக்கப்பட்ட இரண்டு படங்கள் இப்போது எங்களிடம் உள்ளது. அநேகமாக ஏப்ரல் 1 பிஎஸ்6 காலக்கெடுவுக்கு முன்னதாகவே, புதுப்பிக்கப்பட்ட இந்த வாகனம் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்4 பொலெரோ பவர் + ஐ இயக்கும் எம்ஹாக் டி70 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்திற்கு ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் ஏஆர்ஏஐ ஆல் பிஎஸ்6 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய அமைப்பில் 71பிஎஸ் மற்றும் 195என்எம் ஐ உருவாக்கும் இந்த இயந்திரத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, பிஎஸ்6 பொலெரோவை இயக்கும். இது 5-வேகக் கைமுறை பற்சக்கர பெட்டி பொருத்தப்பட்டு வருகிறது. ஆற்றல் மற்றும் முறுக்கு திறன் அளவுகள் மாறாமல் அப்படியே இருக்கும். பொலெரோ 2.5 லிட்டர் டீசல் இயந்திரத்தை வழங்கப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அந்த மாதிரியின் உற்பத்தி செப்டம்பர் 2019 இல் நிறுத்தப்பட்டது
மஹிந்திரா பொலெரோவை பிஎஸ்4 இலிருந்து பிஎஸ்6 ஆக மேம்படுத்தியது மட்டுமல்லாமல், ஒரு சில வடிவமைப்பு மாற்றங்களையும் செய்துள்ளது. அறிமுகமாகவிருக்கும் இதில், மாற்றம் செய்யப்பட்ட முன்பக்க பாதுகாப்பு சட்டகம் மற்றும் மோதுகைத் தாங்கியையும் பெறுகிறது. கார் தயாரிப்பு நிறுவனம் முகப்பு விளக்குகளில் சில குரோம் மற்றும் கருப்பு வண்ணங்களையும் சேர்த்துள்ளது. எஸ்யூவியின் வாகன முகப்பில் சிறிய அளவில் மட்டுமே மாற்றங்கள் இருக்கிறது. இந்த மேம்படுத்தலின் மூலம், பொலெரோ இப்போது மோதுதல்-சோதனையும் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் ஜூன் 2020 க்குள் அறிமுகம் செய்யப்படும்
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, மஹிந்திரா பொலிரோவில் ஓட்டுனர் பக்கவாட்டு காற்றுபை, வேக எச்சரிக்கை, முன்பக்க இருக்கை பட்டி அணிவதற்கான நினைவூட்டல், உட்புறத்திலிருந்து கதவைத் திறக்க பொதுவாகப் பூட்டும் அமைப்பிற்கான தானியங்கி முறை அமைப்பு, பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவக்கூடிய உணர்விகள் போன்றவற்றை வழங்குகிறது. தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு போன்ற சில புதுவிதமான அமைப்புகளை 2020 பொலிரோவில் சேர்ப்பதையும் காண முடிந்தது.
பொலிரோ பவர் + தற்போது எல்எக்ஸ், எஸ்எல்இ, எஸ்எல்எக்ஸ் மற்றும் இசட்எல்எக்ஸ் ஆகிய நான்கு வகைகளில் அளிக்கிறது. அவற்றின் விலை ரூபாய் 7.61 லட்சதிதிலிருந்து ரூபாய் 8.99 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் டெல்லி) இருக்கும். பிஎஸ்6 இயந்திர அறிமுகத்துடன், இதனுடைய விலை ரூபாய் 80,000 வரை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மஹிந்திரா பவர் + மோனிகர் என்ற பெயருக்குப் பதிலாக தற்போது புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவியை பொலிரோ என்று அழைக்கலாம்.
- Renew Mahindra Bolero Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful