BMW 5 சீரிஸ் LWB காரின் விவரங்களை 10 படங்களில் பார்க்கலாம்
published on ஜூலை 25, 2024 03:34 pm by samarth for பிஎன்டபில்யூ 5 சீரிஸ்
- 32 Views
- ஒரு கருத்தை எழுதுக
BMW நிறுவனம் இந்தியாவில் இந்த சொகுசு செடான் காரை ஒரே ஒரு வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷனில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
8 -வது தலைமுறை BMW 5 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் இது முதன்முறையாக இங்கு நீண்ட வீல்பேஸ் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. இது 530Li M ஸ்போர்ட் என்ற ஒரே ஒரு வேரியன்ட்டில் கிடைக்கிறது. புதிய BMW செடானின் விவரங்களை 10 படங்களில் இங்கே பார்க்கலாம்:
BMW 530Li காரின் முன்பக்கத்தில் BMW -ன் பிரபலமான கிட்னி கிரில் இல்லுமினேஷன் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது காருக்கு ஒரு அதிநவீன தோற்றத்தை அளிக்கிறது. மற்றும் கூடுதலாக இது நேர்த்தியான ஸ்வீப்ட் பேக் LED ஹெட்லைட் செட்டப்பையும் கொண்டுள்ளது. ஸ்போர்ட்டியான பம்பர் மற்றும் முன்பக்கத்தில் உள்ள ஷார்ப்பான கட்ஸ் மற்றும் ஃபோல்டுகள் இந்த காருக்கு ஒரு ஆக்ரோஷமான தோற்றத்தைக் கொடுக்கின்றன.
புதிய 5 சீரிஸின் பக்கவாட்டு தோற்றம் ஒரு சிறிய மினிமலிஸ்டிக் கொண்டுள்ளது. 3105 மிமீ நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் மற்றும் சாய்வான கூரை ஆகியவை முக்கிய ஹைலைட்ஸ் ஆகும். நெருக்கமான கவனித்தால் புதிய செடானின் சி-பில்லரில் இருக்கும் “5” என்ற பிராண்டிங்கை பார்க்க முடியும்.
இது 18-இன்ச் சில்வர்-ஃபினிஷ்டு அலாய் வீல்களுடன் ஸ்டாண்டர்டாக வருகிறது. மேலும் 19-இன்ச் டூயல்-டோன் M-ஸ்பெசிஃபைடு அலாய் வீல்களுக்கு ஆப்ஷனலாக அப்டேட் செய்து கொள்ளலாம்.
பின்புறத்தில் இது ஒரு தெளிவான தோற்றத்தை கொண்டுள்ளது. ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்ஸ் அதன் அதிநவீனமான தோற்றத்தை கொடுக்கின்றன. அதே சமயம் டிஃப்பியூசர் எஃபெக்ட் கொண்ட பின்பக்க பம்பர்கள் அதற்கு ஆக்ரோஷமான நிலைப்பாட்டை அளிக்கிறது.
புதிய 5 சீரிஸின் உட்புறத்தில் டூயல் டோன் கேபின் தீம் ஒன்றை BMW தேர்வு செய்துள்ளது. இது டாஷ்போர்டு-இன்டெகிரேட்டட் ஏசி வென்ட்கள் மினிமலிஸ்டிக் தோற்றத்தில் உள்ளள. இன்ட்டீரிர்மற்றும் வீகன் பொருள்களால் ஆனது. நவீன பிஎம்டபிள்யூ ஆஃபர்களில் காணப்படும் கர்வ்டு டூயல் டிஸ்பிளேக்கள் இருப்பதை நீங்கள் இங்கே கவனிக்கலாம்.
BMW ஆனது 5 சீரிஸின் இன்ட்டீரியரில் டூயல் இன்டெகிரேட்டட் டிஸ்பிளேக்கள் உள்ளன. 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கர்வ்டு 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்ற BMW மாடல்களிலும் இருப்பதை போன்றே உள்ளது.
BMW செடான் போவர்ஸ் & வில்கின்ஸ் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் பின்புற டோர் பேட்களில் த்ரீ-டோன் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்புற கேபினில் 3 பயணிகளுக்கும் அட்ஜெஸ்ட்டபிள்ஹெட்ரெஸ்ட், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஸ்டோரேஜ் இடத்தை உள்ளடக்கிய ஃபோல்டபிள் ரியர் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றைக் காணலாம்.
4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் செட்டப் உள்ளது, தனிப்பட்ட கன்ட்ரோல்கள் கொண்ட ஏசி வென்ட்கள் பின்பக்கத்தில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பவர்டிரெய்ன்
புதிய-ஜென் 5 சீரிஸ் ஒரே ஒரு 258 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது. இது மைல்டு-ஹைபிரிட் டெக்னாலஜியுடன் கூடிய 8-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் LWB காரின் ரூ.72.90 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) விலையில் ஒற்றை வேரியன்ட்டில் கிடைக்கிறது. இது ஆடி A6 மற்றும் வால்வோ S90 கார்களுக்கு போட்டியாக உள்ளது. மேலும் வரவிருக்கும் புதிய ஜெனரேஷன் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காருக்கும் போட்டியாக இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.
மேலும் படிக்க: 5 சீரிஸ் ஆட்டோமெட்டிக்