BMW 1-சீரிஸ் காம்பாக்ட் சேடன் கான்செப்ட் கார் வெளியிடப்பட்டது [தெளிவான இமேஜ் கேலரி இணைக்கப்பட்டுள்ளது]
பிஎன்டபில்யூ 1 சீரிஸ் க்காக நவ 23, 2015 11:34 am அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
தற்போது சீனாவில் நடந்து கொண்டிருக்கும் 2015 கான்கூ மோட்டார் ஷோவில், BMW நிறுவனம் தனது புதிய 1-சீரிஸ் காம்பாக்ட் சேடன் கான்செப்ட் காரை வெளியிட்டது. சீனாவின் வாகன சந்தையை, சர்வதேச கார் நிறுவனங்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தையாகக் கருதுவதால், BMW நிறுவனம் தனது கான்செப்ட் காரை அங்கேயே வெளியிட திட்டமிட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை. BMW ஜெர்மன் ஆட்டோ தயாரிப்பாளர்களின் காம்பாக்ட் சேடன் கான்செப்ட் கார், விரைவிலேயே ஆடி A3 மற்றும் மெர்சிடிஸ் CLA ஆகியவற்றுடன் போட்டிக் களத்தில் இறங்கத் தயாராகிவிடும். BMW நிறுவனம், இந்த காரின் விற்பனையை 2017 ஆம் ஆண்டில் தொடங்கும் எனவும், மேலும், இதன் உற்பத்தி சென்னையில் உள்ள BMW தொழிற்சாலையில் நடைபெறும் என்றும் தெரிகிறது.
பல சந்தர்ப்பங்களில் சாலையில் நடந்த சோதனை ஓட்டத்தின் போதே, BMW -வின் இந்த காம்பாக்ட் சேடன் காரின் தயாரிப்பு சிறப்பம்சங்கள் முழுவதும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டுவிட்டன என்று கூறலாம். தனது புதிய காருக்கு “BMW 1சீரிஸ் சேடன்” என இந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. புதிய BMW 1சீரிஸ் சேடன் கார் இந்நிறுவனத்தின் முதல் FWD சேடன் வகை காராக இருக்கும் என்று யூகிக்கப்படுவதால், இதன் தொழில்நுட்ப அடித்தளம் BMW நிறுவனத்தின் பிரத்தியேகமான UKL அடிப்படையில் இருக்கும் என அறியப்படுகிறது.
BMW 1சீரிஸ் சேடன் கார், BMW நிறுவனத்தின் பாரம்பரிய வடிவமைப்புத் தத்துவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டாலும், இதன் வீல் பேஸ் சற்றே சிறிதாக உள்ளது. உட்புறத்தில் பார்க்கும் போது, பல வித சொகுசு வசதிகளான, 8.8 அங்குல ஃப்ரீஸ்டாண்டிங் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் டிஸ்ப்ளே, டச்-சென்சிடிவ் கண்ட்ரோல், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, நப்பா லெதர் சீட்ஸ், அழகிய கிளாஸ் ரூஃப், மற்றும் ஆரஞ்சு வண்ண விளக்குகள் ஆகிய அனைத்தையும் பெற்று நவீனமாகவும், ஆடம்பரமாகவும் காட்சியளிக்கிறது.
புதிய BMW காம்பாக்ட் சேடன் காரின் செயல்பாட்டு திறன் பற்றிய விவரகுறிப்பு தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இன்றுவரை வெளிவரவில்லை என்றாலும், இந்த நிறுவனத்தின் 2-சீரிஸ் ஆக்டிவ் டூர்ரர் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 3 மற்றும் 4 சிலிண்டர் இஞ்ஜினே இதிலும் பொருத்தப்படும் என்று யூகிக்கப்படுகிறது. இந்த யூகத்தின் முக்கிய காரணம், இந்த புதிய மாடல் UKL தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் என்று தெரியவந்துள்ளதால், தற்போதுள்ள UKL தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ள 2-சீரிஸ் ஆக்டிவ் டூர்ரர் மற்றும் பல மாடல்களில் உள்ள 3 மற்றும் 4 சிலிண்டர் இஞ்ஜின் வகையே இதிலும் பொருத்தப்படும் என்று தெரிகிறது. மேலும், இதன் உயர்தர மாடல்கள் xட்ரைவ் சிஸ்டத்துடன் செயல்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக உள்ளன. ஆனால், இதன் ஸ்டாண்டர்ட் மாடல் FWD (ஃப்ரண்ட் வீல் ட்ரைவ்) அமைப்பில் செயல்படும் என்று அறியப்படுகிறது.
இதையும் படியுங்கள்