2016 கலை கண்காட்சியில் (ஆர்ட் ஃபேர்), BMW #17 ஆர்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது
published on பிப்ரவரி 01, 2016 04:17 pm by nabeel
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதுடெல்லியில் நடைபெற்ற 2016 இந்திய கலைக் கண்காட்சியில் (இந்தியா ஆர்ட் ஃபேர்), BMW மூலம் #10 ஆர்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் இது போன்ற 17 “ஓடும் சிற்பங்கள்” (ரோலிங் ஸ்கால்ப்ச்சர்ஸ்) இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 1990 ஆம் ஆண்டு சீஸர் மேன்ரிக்யூ மூலம் பெயிண்ட் தீட்டப்பட்ட இது, அந்த பட்டியலில் 10வது கார் ஆகும். கலை கண்காட்சியில் இருந்த இந்த 1990 BMW 730i ஆர்ட் காரை, BMW குரூப் இந்தியாவின் தலைவரான பிலிப் வான் சார் திறந்து வைத்தார். 2016 ஜனவரி 31 ஆம் தேதி (நேற்று) வரை, கண்காட்சியில் இது வைக்கப்பட்டிருந்தது. மிரட்டும் தோற்றத்துடன் கூடிய இந்த கார், தொழிற்நுட்பம் மற்றும் இயற்கை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சேர்க்கையாக காணப்படுகிறது. தினந்தோறும் பயன்படுத்தும் கருவிகளைப் போல, நம் வாழ்க்கையின் சுற்றுபுறத்தை எடுத்துக்காட்டுவதில் கார்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நம்பிய சீஸர் மேன்ரிக்யூ கூறுகையில், “இதனால் தான், இது எந்த தடையுமின்றி காற்றை கீழித்து ஊடுருவி செல்லும் தன்மை கொண்டது என்ற உணர்வை அளிக்கும் வகையில், இக்காரை இந்த முறையில் வடிவமைக்கலாம் என்று நான் நினைத்தேன்” என்றார்.
இதை குறித்து கார்தேக்கோவில் நீங்கள் படிக்கும் போதே, கலைநயம் கொண்ட வெளிபுறத்தை உடைய இந்த காரின் உள்ளகம் எப்படி இருக்குமோ என்பதை அறிய உங்களுக்கு அதிக விருப்பம் ஏற்படலாம். பெட்ரோல் விரும்பிகளை பொறுத்த வரை, இந்த 1990 BMW 730i காருக்கு ஒரு 3.0-லிட்டர், இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் ஆற்றலை அளிக்கிறது. இந்த ஆற்றலகம் மூலம் 188bhp ஆற்றலை பெற்று, இந்த காரின் அதிகபட்ச வேகமான மணிக்கு 222 கி.மீ. வேகத்தை எட்ட உதவுகிறது. இது போன்ற ‘ஓடும் சிற்பங்கள்’ ஆக மாற்ற கலைஞர்களால் எடுக்கப்பட்ட மற்ற 16 கார்கள் பின்வருமாறு: BMW 3.0 CSL(#1&2), 320 குரூப் 5, M1, 635CSi, M3 (#7&8), 535i, Z1, 525i, 3 சீரிஸ் ரேஸ் கார், 850 CSi, V12 LMR, H2R மற்றும் M3 GT2.
இந்த கண்காட்சியின் போது திரு.பிலிப் வான் சார் கூறுகையில், “BMW இந்தியாவின் துவக்கத்தில் இருந்தே, நாட்டின் கலை மற்றும் கலாச்சார உலகிற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக செயல்படுகிறது. BMW ஆர்ட் கார்கள் என்பது ஒரு தவிர்க்க முடியாத கூறு மற்றும் நமது கலாச்சார ஒருங்கிணைப்பிற்கான ஒரு மைய மேடை ஆக உள்ளன. ஆட்டோமொபைல்ஸ், டெக்னாலஜி, டிசைன் மற்றும் கலை ஆகியவை இணைய பெற்ற இவை, ஒரு தனித்தன்மை வாய்ந்த தயாரிப்புகள் ஆகும். ‘ஓடும் சிற்பங்களில்’ இடம்பெற்றுள்ள கலை உணர்வு வெளிப்பாடுகளால், உலகமெங்கும் உள்ள படைப்பாளி மனங்களின் கற்பனைக்கும் சவால்விடும் வகையில், BMW குரூப்-பின் முன்னோடியான திறனை இது குறிப்பதாக உள்ளது. இந்திய கலை கண்காட்சியில் உள்ள சிறந்த இந்திய கலைப் படைப்புகளுக்கு இடையே, சீஸர் மேன்ரிக்யூவின் 10வது BMW ஆர்ட் காரை வெளியிடுவதில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful