• English
  • Login / Register

ரூ.35.90 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட BMW 3-சீரிஸ் அறிமுகம்

published on ஜனவரி 28, 2016 04:08 pm by அபிஜித் for பிஎன்டபில்யூ 3 series 2014-2019

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

எக்ஸிக்யூட்டிவ் சேடனான 3-சீரிஸின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ரூ.35.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) விலை நிர்ணயத்தில் BMW நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிலும் இதே கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்த காரில் 4 டீசல் வகைகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஒரு பெட்ரோல் பதிப்பும் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே 3-சீரிஸை விட சிறப்பாக விற்பனையாகி வரும் ஆடி A4 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் ஆகியவை உடன் இந்த 3-சீரிஸ் போட்டியிட உள்ளது.

இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை குறித்து பார்க்கும் போது, புதிய LED ஹெட்லெம்ப்களுடன் கூடிய LED DRL-களுடன் முழுமையான LED டெயில்லெம்ப்கள் ஆகியவை தவிர, இந்த கார் பெரும்பாலும் அப்படியே தான் உள்ளது. மேலும் இதில் ஒரு ஜோடி புதிய அலாய் வீல்களை பெற்றுள்ளது. இந்த 3-சீரிஸின் உள்புறத்தில், புதிய தலைக்கு மேலான டிஸ்ப்ளே மற்றும் 3D கிராஃபிக்ஸ் உடன் கூடிய ஒரு புதிய நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை காணப்படுகிறது

.
இது குறித்து BMW குரூப் இந்தியா தலைவர் திரு.பிலிப் வான் சார் கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நவீன ஸ்போர்ட்ஸ் சேடன் பிரிவில் இந்த BMW 3 சீரிஸ் நிறுவப்பட்டு, உலகில் மிக பரவலாக விற்பனையாகி வரும் பிரிமியம் வாகனமாக உள்ளது. இந்த BMW 3 சீரிஸில் காணப்படும் அதன் ஸ்போர்ட்ஸ் தன்மையின் மூலம் மற்ற எல்லா மாடல்களை காட்டிலும் BMW பிராண்டின் இதயம் என்பதற்கு சிறந்த மாதிரியாக விளங்குகிறது. இந்த புதிய BMW 3 சீரிஸ், அதன் ஸ்போர்ட்ஸ் டிசைன், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் ஒப்பிட முடியாத செயல்பாடு ஆகியவை மூலம் இந்த பாரம்பரிய பெருமைக்கு தொடர்ந்து தலைமை வகிக்கும். இதன் தினந்தோறும் பயன்பாடு, சக்திவாய்ந்த பண்புகள் மற்றும் கவர்ச்சிகரமான டிசைன் ஆகியவை மூலம் இந்த புதிய BMW 3 சீரிஸ், இந்திய ஆடம்பர கார் பிரிவிற்கு ஒரு புதிய இலக்கை நிர்ணயிக்கும். எங்களின் புரிந்துணர்வு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஆபூர்வமான நெகிழ்வு தன்மை மற்றும் செலவீனம் ஆகியவை, BMW 360º திட்டம் மூலம் இன்னும் விரிவாக அளிக்கப்படும்” என்றார்.

இதில் அதே 2.0-லிட்டர் இரட்டை டர்போ டீசல் மோட்டாரை கொண்டு, 1750 rpms என்ற குறித்த அளவிற்கு முன்னதாகவே ஆரோக்கியமான 190 bhp ஆற்றலையும், 400 Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. ஒரு 8-ஸ்பீடு ZF கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ள இந்த 3-சீரிஸ், 7.2 விநாடிகளில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை அடைவதோடு, அதிகபட்சமாக மணிக்கு 230 கி.மீ வேகம் வரை செல்ல முடிகிறது. 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதன் பெட்ரோல் வகைகள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் வகைகளின் அனைத்து இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை விவரங்கள் பின்வருமாறு:

BMW 320d பிரஸ்டீஜ்

ரூ.35, 90,000

BMW 320d ஸ்போர்ட் லைன் (நேவிகேஷன்)

ரூ.41, 50,000

BMW 320d ஆடம்பர லைன் (நேவிகேஷன்)

ரூ.41, 50,000

BMW 320d M ஸ்போர்ட்

ரூ.44, 50,000

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on BMW 3 சீரிஸ் 2014-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience