• English
  • Login / Register

BMW நிறுவனம் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது 13 மாடல் கார்களை காட்சிக்கு வைக்க உள்ளது

published on ஜனவரி 28, 2016 01:29 pm by manish for பிஎன்டபில்யூ 3 series 2014-2019

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான BMW நிறுவனத்தினர் வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது 13 தயாரிப்புக்களை காட்சிக்கு வைக்க உள்ளனர். BMW நிறுவனம் தங்களது முற்றிலும் புதிய 3 - சீரிஸ் கார்களை நேற்று அறிமுகம் செய்தது. இந்த காரும் காட்சிக்கு வைக்கப்படும் 13 கார்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிய வருகிறது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கிரேடர் நொய்டா பகுதியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது. 

 இந்த கண்காட்சியில் BMW நிறுவனத்தின் மிகவும் முக்கிய காராக 7 - சீரிஸ் கார்கள் இருக்கும் என்று தெரிய வருகிறது.  ஜாகுவார் நிறுவனத்தின் XJL,   ஆடி நிறுவனத்தின் A8L மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ்  - S க்ளாஸ்  கார்களுக்கு கடும் சவாலாக  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

The all New BMW X

BMW நிறுவனம் சமீபத்தில் இந்த ஆட்டோ எக்ஸ்போவிற்கான தங்களது தீம் (theme) என்னவென்பதை விளக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது .' சொகுசு கார்களின் எதிர்காலம்' என்று அந்த தீமிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.   சொகுசு கார் பிரிவை 7 - சீரிஸ் கார்கள் நிரப்பும் அதே வேளை,  பயன்பாட்டு வாகனங்கள் (UV)  பிரிவை முற்றிலும் புதிய BMW X – 1 நிரப்பும் என்று தெரிகிறது. 

BMW நிறுவனம் தனது வழக்கமான பாணியை உடைத்து புதிய UKL மாடுலர் ப்லேட்பார்மின்  அடிப்டையில் இந்த முற்றிலும் புதிய கச்சிதமான SUV பிரிவு வாகனமான  BMW X1 வாகனங்களை FWD  அம்சத்துடன் உருவாக்கி உள்ளது.   ஆடி Q3 மற்றும் பென்ஸ் GLA வாகனங்களுக்கு போட்டியாக இந்த X1 கார்களை இந்நிறுவனம் களமிறக்கி உள்ளது. இதன் விலை ரூ. 28  லட்சங்களை ஓட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

BMW நிறுவனம் முற்றிலும் - புதிய X1 கார்களைப் போல காம்பேக்ட் செடான் பிரிவிலும் தங்களது வழக்கமான பாணியை உடைத்து , UKL மாடுலர் ப்லேட்பார்மின்  அடிப்டையில் FWD அம்சத்துடன் கூடிய ஒரு காரை காட்சிக்கு வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இதை எல்லாம் பார்க்கும் போது ஆட்டோ எக்ஸ்போவில் BMW நிறுவனத்தின் அரங்கு அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் வரவேற்பையும் பெரும் என்றே நினைக்க தோன்றுகிறது. 

2016 ஆட்டோ எக்ஸ்போவில் இடம் பெற போகும் BMW மாடல் வாகனங்கள் என்னென்ன என்பதை கீழே கொடுத்துள்ளோம். 

1.  முற்றிலும் புதிய பிஎம்டபுள்யு 7-சீரிஸ்  
2.  முற்றிலும் புதிய  பிஎம்டபுள்யு X1 
3.  முற்றிலும் புதிய  பிஎம்டபுள்யு 3-சீரிஸ்  
4.  பிஎம்டபுள்யு 5-சீரிஸ்  
5.  பிஎம்டபுள்யு 6-சீரிஸ்  
6.  பிஎம்டபுள்யு க்ரான் டுரிஸ்மோ 
7.  பிஎம்டபுள்யு i8 
8.  பிஎம்டபுள்யு Z4 
9.  பிஎம்டபுள்யு X5 
10. பிஎம்டபுள்யு X3 
11. பிஎம்டபுள்யு X6M 
12. பிஎம்டபுள்யு M6 
13. பிஎம்டபுள்யு M4 

பரிந்துரைக்கப்படுகிறது 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on BMW 3 சீரிஸ் 2014-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience