பாரத் NCAP: பாதுகாப்பான கார்களுக்கான புதிய முயற்சி பற்றிய கார் தயாரிப்பாளர்களின் கருத்துகள்
published on ஆகஸ்ட் 24, 2023 02:37 pm by rohit
- 66 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த பட்டியலில் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய கார் தயாரிப்பாளர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் பாரத் NCAP எனப்படும் நாட்டின் சொந்த விபத்து சோதனை மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு அமைப்பை உருவாக்கியது. ஒரு தன்னார்வ திட்டமாக, அனைத்து விலை வரம்புகளிலும் தங்கள் கார்களின் பாதுகாப்பை மேம்படுத்த கார் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளில், பல கார் தயாரிப்பாளர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். BNCAP -ன் அறிமுகம் பற்றி சிறந்த பிராண்டுகளின் கருத்துகளைப் பற்றிய கருத்துகள் இங்கே:
மாருதி
இதுகுறித்து மாருதி சுஸூகி இந்தியாவின் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான செயல் அதிகாரி ராகுல் பார்தி கூறுகையில், இந்தியாவில் வெளியிடப்படும் எந்த காராக இருந்தாலும் அது அரசு நிர்ணயித்த கட்டாய பாதுகாப்பு தரத்தை பின்பற்றுகிறது. கூடுதல் பாதுகாப்புத் தகவலை தேடும் நுகர்வோருக்கு, பாரத் NCAP அமைப்பு என்பது, ஒரு வாடிக்கையாளருக்கு அதிகாரப்பூர்வ மற்றும் துல்லியமான தகவல்களை அளிக்கும் " என தெரிவித்திருக்கிறார்.
"அரசாங்கத்தின் இந்த முயற்சியை மாருதி வரவேற்கிறது மற்றும் பாரத் NCAP சோதனைக்கு குறைந்தபட்சம் மூன்று மாடல்களை முதல் லாட்டிலேயே வழங்கும்" என்று அவர் கூறினார்.
எந்த மூன்று மாருதி கார்கள் ரேட்டிங்கிற்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் அவை கிராண்ட் விட்டாரா மற்றும் பிரெஸ்ஸா எஸ்யூவிகளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
டாடா
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் MD (மேலாண்மை இயக்குநர்) ஷைலேஷ் சந்திரா, "டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் வாகனப் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லான பாரத் NCAPயின் அறிமுகத்தைக் காண்பதில் பெருமிதம் அடைகிறது. பாதுகாப்பு எப்போதும் எங்கள் DNA -வின் மையமாக உள்ளது, மேலும் இந்த முயற்சி எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வாகனங்களை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புடன் முழுமையாக ஒத்துப்போகிறது. என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மேலும், "அதிக பாதுகாப்பு அளவுகோல்களை அமைப்பதில் அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் வாகனத் துறையின் கூட்டு முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். டாடா மோட்டார்ஸ், அதிநவீன அம்சங்களை வழங்கும் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிக உயர்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வாகனங்களில் புதுமையை புகுத்தவும் அதிநவீன வசதிகளை கொடுக்கவும் எப்போதும் தயாராக உள்ளது." என்றார்.
டாடா அதன் பன்ச் மற்றும் நெக்ஸான் போன்ற விலை குறைந்த மாடல்களில் இப்போதும் இரண்டு ஏர்பேக்குகளுக்கு மேல் கொடுக்கவில்லை என்றாலும் , பழைய GNCAP க்ராஷ் டெஸ்ட் நெறிமுறைகளின்படி 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகளை அவர்கள் பெற்றுள்ளனர்.
மஹிந்திரா
மஹிந்திரா அன்ட் மஹிந்திராவின் வாகன பிரிவு CEO (தலைமை செயல் அதிகாரி) வீஜே நாக்ரா கூறுகையில், ", பாதுகாப்பு என்பது எப்போதும் எங்களது முதன்மையான முன்னுரிமையாகும். எங்கள் தயாரிப்புகள் தொடர்ந்து ஐந்து நட்சத்திரங்கள் மற்றும் நான்கு நட்சத்திர குளோபல் NCAP ரேட்டிங்கை பெறுவதில் தெளிவாக உள்ளன. பாரத் NCAP -யின் துவக்கமானது MoRTH -ன் பாராட்டத்தக்க முயற்சியாகும், மேலும் இது இந்தியாவில் வாகனப் பாதுகாப்பின் தரத்தை மேலும் உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
மஹிந்திராவின் கடைசி இரண்டு புதிய எஸ்யூவி -களான XUV700 மற்றும் ஸ்கார்பியோ N ஆகிய இரண்டு கார்களும் GNCAP -லிருந்து 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகளை பெற்றன.
ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் எம்டி மற்றும் CEO வான, அன்சூ கிம் -ன் இதை பற்றி என்ன தெரிவித்தார் என்பதை அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டது, “அரசாங்கத்தின் BNCAP பாதுகாப்பு முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவின் இந்த முயற்சி பாதுகாப்பு தரத்தை உயர்த்தும், நுகர்வோருக்கு முக்கிய தகவல்களுடன் அதிகாரம் அளிக்கும், மேலும் இந்திய சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றும் என்று நம்புகிறேன். ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில், எங்கள் முழுமையான கார் தயாரிப்பு வரிசையிலும் மிக உயர்ந்த பாதுகாப்பை கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”
விற்பனையில் இரண்டாவது மிகவும் பிரபலமான பிராண்டாக உள்ள ஹீண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ், வென்யூ மற்றும் கிரெட்டா போன்ற அதன் இந்தியா சார்ந்த தயாரிப்புகளுக்கு இன்னும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெறவில்லை .
தொடர்புடையவை: பாரத் NCAP சிறந்த பாதுகாப்பிற்காக கிராஷ் டெஸ்ட் அளவுருக்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்கனவே கொண்டுள்ளது
டொயோட்டா
“பாரத்-NCAP ஐ அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் இது சரியான திசையில் முன்னேற்றத்திற்கான ஒரு படி என்று உறுதியாக நம்புகிறோம். நுகர்வோர் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த தரத்தை கவனித்து, பாதுகாப்பான வாகனங்களை தேடும் நேரத்தில் இந்த முடிவு வந்துள்ளது, இது வாங்கும் முடிவை உறுதியாக எடுக்க வைக்கும். நுகர்வோருக்கு கூடுதலான அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், வழங்கப்படும் பல்வேறு கார் தயாரிப்புகளின் ஒப்பீட்டு பாதுகாப்பு அம்சங்களை அறிந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம் அதிக விழிப்புணர்வையும் மேலும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வர இது உதவும்.
TKM -ஐ பொறுத்த வரையில், மனித உயிர்கள் மிக முக்கியமானது மற்றும் பாதுகாப்பு என்பது பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல. எங்களின் கார்கள் எல்லா வகையிலும் மிக உயர்ந்த தரத்தை அடைவதை உறுதி செய்ய நாங்கள் எப்போதும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். முன்னோக்கிப் பார்க்கையில், மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட பாதுகாப்பான கார்களைத் தயாரிப்பது மற்றும் பாதுகாப்புக் தகவல் அளிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட முழுமையான அணுகுமுறையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம், ”என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் இந்தியத் தலைவரும் நிர்வாக துணைத் தலைவருமான விக்ரம் குலாட்டி கருத்து தெரிவித்தார்.
கியா
கியா இந்தியாவின் ஒரு அறிக்கையில், தலைமை விற்பனை மற்றும் வணிக அதிகாரி மியுங்-சிக் சோன், "BNCAP என்பது கார்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மேம்பட்ட சாலை பாதுகாப்பு இயக்கமாகும். ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு கூறுகளை உள்ளடக்கிய, பாதுகாப்பிற்கான தொலைநோக்கு அணுகுமுறைக்காக இந்திய அரசாங்கத்தை நாங்கள் முழு மனதுடன் பாராட்டுகிறோம் மற்றும் அவற்றுக்கு ஏற்றுக் கொள்வோம். இந்திய அரசாங்கத்தின் ஆத்மநிர்பர் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு, இந்தியாவுக்கு வெளியே வாகனங்களை சோதிப்பதன் தேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகள் ஆகியவற்றை இது நீக்குகிறது. இது இந்தியாவிலிருந்து வரும் தயாரிப்புகளின் உலகளாவிய நற்பெயரை பெரிய அளவில் நல்ல மதிப்பீடுகளுடன் உலகிற்கு உயர்த்தும்.”
பாரத் NCAP மூலம் ஒரு காரை கிராஷ் டெஸ்டிங் செய்ய சுமார் 60 இலட்சம் ரூபாய் செலவாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதையும் அவர் இங்கு குறிப்பிடுகிறார், இது சர்வதேச அளவில் சோதனை செய்யப்படுவதற்கான மதிப்பான சுமார் 2.5 கோடி ரூபாய் உடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது .
மேலும் படிக்க: பாரத் NCAP vs குளோபல் NCAP: ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள்
ஸ்கோடா
“இந்திய அரசாங்கம் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கார் பாதுகாப்பை மேம்படுத்தும் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை நாங்கள் பாராட்டுகிறோம். BNCAP -ன் அறிமுகம் சரியான திசையில் முன்னேற்றத்திற்கான ஒரு படியாகும். பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான அம்சம் மற்றும் ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு அம்சங்களாகும், காரின் அமைப்புடன் சேர்ந்து ஓட்டுநரையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஸ்கோடா என்பது ஒரு குடும்பத்துக்கான பிராண்ட், மேலும் அனைத்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான முன்னுரிமை. இந்திய சந்தையில் பிராண்டை மேலும் வளர்க்க ஸ்கோடா தொடர்ந்து பாதுகாப்பில் கவனம் செலுத்தும்,” என்று ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் பெட்ர் சோல்க் கூறினார்.
ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்கள் குளோபல் NCAP -யின் கிராஷ் டெஸ்ட்டில் கூடுதலான ரேட்டிங்கை பெற்றுள்ளதால், ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் தற்போது இந்தியாவில் கூடுதலான பாதுகாப்பு தரமதிப்பீடு பெற்ற கார்களை முன்னிலைப்படுத்துகிறது.
ரெனால்ட்
“இந்திய அரசாங்கத்தின் பாரத் NCAP -ன் அறிமுகம் சரியான நேரத்தில் செய்யப்பட்ட மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும், அதன் குடிமக்களை பாதுகாப்பதிலும் சாலை பாதுகாப்பை முன்னேற்றுவதிலும் அதன் அர்ப்பணிப்பை காட்டுகிறது. ரெனால்ட் இந்தியா இந்த முயற்சியை முழு மனதுடன் ஆதரிக்கிறது மற்றும் விபத்துகளைக் குறைப்பதற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்வதற்கும் எங்கள் நிபுணத்துவத்தை பங்களிக்க எதிர்நோக்குகியுள்ளோம்" என்று ரெனால்ட் இந்தியா ஆபரேஷன்ஸ் நாட்டின் CEO மற்றும் MD வெங்கட்ராம் மாமில்லபல்லே கருத்து தெரிவித்துள்ளார்.
பாரத் NCAP பற்றிய விரைவான கண்ணோட்டம்
2023 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் பாரத் NCAP, முன்பக்க ஆஃப்செட், பக்கவாட்டு இம்பாக்ட் மற்றும் சைடு போல் இம்பாக்ட் உள்ளிட்ட குளோபல் NCAPயின் கிட்டத்தட்ட அதே அளவீடுகளில் கார்களை சோதிக்கும். ரேட்டிங் சிஸ்டம், கார் தேர்வுக்கான அளவுகோல் மற்றும் வாகனத்தின் வகை பற்றிய அனைத்து விவரங்களையும் எங்கள் முக்கிய கட்டுரையில் விவரித்துள்ளோம்.
0 out of 0 found this helpful