இந்தியாவில் அதிகமாக விற்பனயாகும் கார்களின் விற்பனையை க்விட் மற்றும் பலேனோ கார்கள் முடக்கியுள்ளது
published on டிசம்பர் 07, 2015 04:16 pm by manish for மாருதி பாலினோ 2015-2022
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
சிறப்பம்சங்கள்
- பலேனோ, நவம்பர் 2015 ல் அதிகமாக விற்பனையான முதல் பத்து கார்களின் பட்டியலில் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
- மாருதி நிறுவனத்தின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவு காரான இந்த பலேனோ கார்கள் தனது முக்கிய போட்டியான ஹயுண்டாய் எளிட் i20 கார்களின் விற்பனையை 22% குறைத்துள்ளது.
- மாருதி பலேனோ கார்கள் தங்களது பிரபலமான ஸ்விப்ட் ஹேட்ச்பேக் பிரிவு கார்களின் விற்பனையை கூட 34% குறைத்துள்ளது.
- மாருதி ஆல்டோ கார்கள் 9% விற்பனை வீழ்ச்சியை கண்டாலும் தனது பிரிவில் இன்னமும் முதலிடத்திலேயே உள்ளது. இந்த வீழ்ச்சிக்கு ரெனால்ட் க்விட் கார்களே காரணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மாருதி சுசுகி பலேனோ மட்டுமே சமீபத்தில் அறிமுகமான கார்களில் நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான முதல் பத்து கார்கள் அடங்கிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி நிறுவனத்தின் இந்த சமீபத்திய தயாரிப்பு, ஹேட்ச்பேக் பிரிவின் இரண்டு ஜாம்பவான்களின் விற்பனையை பெரிதும் பாதித்துள்ளது. அதில் ஒன்று மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார்கள் என்பது சுவையான ஒரு தகவல். மற்றொன்று ஸ்விப்ட் கார்களின் முக்கிய எதிரியான ஹயுண்டாய் நிறுவனத்தின் எளிட் i20 கார்களாகும். மாருதி ஆல்டோ அதன் பிரிவில் தொடர்ந்து விற்பனையில் முன்னிலை வகித்தாலும் அந்த பிரிவில் வந்துள்ள புதிய வரவுகளால் அதன் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரிவில் முதல் இடத்திலுள்ள ஆல்டோ கார்களின் விற்பனையும் கடந்த 2014 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த நவம்பர் மாதத்தில் 9% குறைந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கார்களின் அறிமுகம் தான் என்று சொல்லப்பட்டாலும் அதிக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒன்றைக்கூட இந்த க்விட் கார்கள் பிடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மாருதி சுசுகி நிறுனத்தின் சமீபத்திய ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவு வெளியீடான பலேனோ கார்கள் மாருதி நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன் நவம்பரில் 9,074 கார்கள் விற்பனை ஆகி, அதிக விற்பனையான கார்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதே சமயம் இந்த பலேனோ கார்களின் பிரதான போட்டியாளரான எளிட் i20 கார்கள் இந்த நவம்பரில் 8,264 கார்களே விற்பனை ஆகி உள்ளன. கடந்த 2014 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 22 % குறைவாகும். இன்னொருபுறம் இந்தியாவில் அதிக விற்பனை ஆகும் முதல் மூன்று கார்களில் ஒன்றாக இருந்து வந்த மாருதி ஸ்விப்ட் கார்கள் 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு 34% விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. விற்பனையான இந்த கார்களின் எண்ணிக்கை 11,859 ஆகும்.
மேலும் படிக்க