• English
  • Login / Register

இந்த ஜூன் மாதம் ஹோண்டா கார்களில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக சேமிக்கலாம்

published on ஜூன் 05, 2024 06:23 pm by shreyash for ஹோண்டா சிட்டி

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் பதிப்புகள் இரண்டும் இந்த மாதம் அதிகமான தள்ளுபடியுடன் கிடைக்கும்.

  • ஹோண்டா சிட்டியில் ரூ.1.26 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

  • சிட்டி ஹைப்ரிட் காருக்கு ரூ.65,000 பணத் தள்ளுபடியுடன் கிடைக்கும்.

  • ஹோண்டா அமேஸில் ரூ.1.12 லட்சம் வரை பலன்களைப் பெறலாம்.

  • எலிவேட் ரூ. 55,000 வரை லிமிடெட் பீரியட் ஆஃபருடன் வருகிறது.

  • இந்த சலுகைகள் அனைத்தும் ஜூன் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்.

2024 ஜூன் மாதத்துக்கான தள்ளுபடித் தொகுப்பை ஹோண்டா  நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. மேலும் அதன் போர்ட்ஃபோலியோ முழுவதும் உள்ள அனைத்து மாடல்களும் - ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிட்டி ஹைப்ரிட், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவை நிறைய பலன்களுடன் கிடைக்கின்றன. சலுகைகளில் பணத் தள்ளுபடிகள், ஆப்ஷனலான இலவச ஆக்ஸசரீஸ்கள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும். மாடல் வாரியான சலுகை விவரங்கள் இதோ.

ஹோண்டாசிட்டி

சலுகைகள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ. 25,000 வரை

இலவச ஆக்ஸசரீஸ்கள் (ஆப்ஷனல்)

ரூ. 26,947 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ. 25,000 வரை

ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ. 6,000 வரை

லாயல்டி போனஸ்

ரூ. 4,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ. 8,000 வரை

ஸ்பெஷல் கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ. 20,000 வரை

எலகென்ட் எடிஷனுக்கான சிறப்பு நன்மை

ரூ. 36,500 வரை

அதிகபட்ச பலன்கள்

ரூ. 1.26 லட்சம் வரை

  • வாடிக்கையாளர்கள் பணத் தள்ளுபடி அல்லது ஹோண்டா சிட்டியுடன் இலவச ஆக்சஸரீஸ் ஆப்ஷனை தேர்வுசெய்யலாம். மேலே குறிப்பிட்டுள்ள தொகைகள் செடானின் டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட்களுக்கு (புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாமல்) மட்டுமே செல்லுபடியாகும்.

  • மற்ற அனைத்து வேரியன்ட்களுக்கும் பணத் தள்ளுபடி ரூ. 20,000 ஆகக் குறைகிறது. அதே நேரத்தில் ஆப்ஷனல் இலவச ஆக்சஸரீஸ் சலுகையும் ரூ.21,396 ஆகக் குறைகிறது. 

  • சிட்டியின் புதுப்பிக்கப்பட்ட ZX வேரியன்ட்கள் (சேர்க்கப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன்) ரூ. 10,000 பணத் தள்ளுபடியுடன் கிடைக்கும். மேலும் ரூ. 10,897 மதிப்புள்ள இலவச ஆக்ஸசரீஸ்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

  • அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஹோண்டா சிட்டியின் புதுப்பிக்கப்படாத ZX வேரியன்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். இது மற்ற அனைத்து வேரியன்ட்களுக்கும் ரூ.20,000 ஆகவும், புதுப்பிக்கப்பட்ட ZX வேரியன்ட்களுக்கு ரூ.10,000 ஆகவும் குறைகிறது.

  • ஹோண்டா சிட்டியின் எலிகண்ட் பதிப்பில் ரூ.36,500 வரை சிறப்பு தள்ளுபடியையும் வழங்குகிறது.

  • தற்போது ஹோண்டா சிட்டி -யின் விலை 12.08 லட்சம் முதல் 16.35 லட்சம் வரை இருக்கிறது.

 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்

2023 Honda City and City Hybrid

சலுகை

தொகை

பணத் தள்ளுபடி

ரூ.65,000

  • ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்டை ரூ.65,000 பணத் தள்ளுபடியுடன் மட்டுமே கிடைக்கும். இது அனைத்து வேரியன்ட்களிலும் செல்லுபடியாகும்.

  • சிட்டி ஹைப்ரிட் எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி அல்லது லாயல்டி போனஸ் போன்ற பிற பலன்களுடன் வழங்கப்படுவதில்லை.

  • இதன் விலை ரூ.19 லட்சம் முதல் ரூ.20.50 லட்சம் வரை இருக்கிறது.

மேலும் பார்க்க: Hyundai Verna S மற்றும் Honda City SV: எந்த காம்பாக்ட் செடான் காரை வாங்குவது?

ஹோண்டா அமேஸ்

சலுகைகள்

தொகை

பணத் தள்ளுபடி

ரூ. 30,000 வரை

இலவச ஆக்ஸசரீஸ்கள் (ஆப்ஷனல்) 

ரூ. 36,246 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000 வரை

ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ. 6,000 வரை

லாயல்டி போனஸ்

ரூ. 4,000 வரை

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ. 6,000 வரை

ஸ்பெஷல் கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ. 20,000 வரை

எலகென்ட் எடிஷனுக்கான ஸ்பெஷன் ஆஃபர்

ரூ. 30,000 வரை

அதிகபட்ச பலன்கள்

ரூ. 1.12 லட்சம் வரை

  • ஹோண்டா அமேஸ் உடன் வாடிக்கையாளர்கள் பணத் தள்ளுபடி அல்லது இலவச ஆக்ஸசரீஸ்கள் ஆப்ஷன் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

  • மேலே குறிப்பிட்டுள்ள பணத் தள்ளுபடி மற்றும் ஆப்ஷனல் இலவச ஆக்சஸரீஸ் சலுகை அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கிறது, பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட்டை தவிர.

  • பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட்டில் பணப் பலன் ரூ.20,000 ஆகவும், இலவச ஆக்சஸரீஸ் சலுகை ரூ.24,346 ஆகவும் குறைகிறது.

  • அமேஸின் எலைட் பதிப்பு ரூ.30,000 சிறப்பு தள்ளுபடியுடன் வருகிறது.

  • ஹோண்டா அமேஸின் விலை ரூ.7.20 லட்சம் முதல் ரூ.9.96 லட்சம் வரை இருக்கிறது.

ஹோண்டா எலிவேட்

Honda Elevate

சலுகை

தொகை

லிமிடெட் நேர கொண்டாட்ட சலுகை

ரூ.55,000

  • ஹோண்டா எலிவேட் 55,000 என்ற லிமிடெட் செலப்ரேஷன் தள்ளுபடியுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

  • எஸ்யூவி -யுடன் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் எதுவும் வழங்கப்படவில்லை.

  • ஹோண்டா எலிவேட் விலை ரூ.11.91 லட்சம் முதல் ரூ.16.51 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்புகள்

  • மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம். ஆகவே கூடுதலான விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ஹோண்டா டீலரை தொடர்பு கொள்ளவும்.

  • விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்கானவை ஆகும்

மேலும் படிக்க: ஹோண்டா சிட்டி  ஆன்ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Honda சிட்டி

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience