ஆடி A6 காருக்கான புதிய மேம்பாடுகள் ஆகஸ்ட் 20, 2015 அன்று வெளியிடப்படும் (அறிமுக திரைக்காட்சி)
ஆடி ஏ6 2015-2019 க்காக ஆகஸ்ட் 18, 2015 07:23 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆடி இந்தியா தனது 2015 A6 காருக்கான புதிய மேம்பாடுகளை இந்த மாதம் 20 ஆம் தேதி வெளியிடும். இந்த கார், அதிகாரபூர்வமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 2014 பாரிஸ் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது. இந்த புதுப்பிக்கப்படும் பணியில், உட்புறத்தில் எந்த விதமான இயந்திர மேம்பாடுகளையும் பெறாமல், வெளித்தோற்றத்தில் நவீனமான மாறுதல்களைப் பெற்று சந்தைக்கு வருகிறது. புதிதாக இணைக்கப்பட்ட அனைத்து மேம்பாடுகளையும் தாங்கிய 2015 A6, இப்போது உள்ள மாடலை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ், BMW 5 வரிசை கார்கள் மற்றும் ஜகுவார் XF போன்ற கார்களுடன், தற்போது நடந்து கொண்டு இருக்கும் போட்டி தொடரும்.
2015 A 6 இன் புதிய மாற்றங்களைப் பற்றி பேசும் போது, மீண்டும் மறுவடிவமைக்கப்பட்ட முட்டு தாங்கிகளையும் (பம்பர்), புதிய ஒற்றை சட்ட கம்பி வலை (சிங்கிள் ஃபிரேம் கிரில்) பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த காரை மேலும் கவர்ச்சியூட்ட, மேட்ரிக்ஸ் LED முகப்பு விளக்குகளும், புதிய பாணியில் வடிவமைக்கப்பட்ட LED பின்புற விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பக்கவாட்டுத் தோற்றத்தில், புதிய முறையிலான அலாய் சக்கரங்களைத் தவிர, வேறு எந்த மாற்றமும் இல்லை.
உட்புறத்தில் பார்க்கும் போது, 2015 A 6 காரில் புதிய அழகான இருக்கைகள் மற்றும் அப்ளிக் வேலைப்பாடுகளைத் தவிர, புதுப்பிக்கப்பட்ட ஆடியின் MMi இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பும் உட்புறத்தில் பொருத்தப்பட்டு, பயணத்தை இனிமையாக்குகின்றன. ஆடியின் A 6 சர்வதேச அளவிலான மேம்பாடுகளில், TFSI மற்றும் TDi இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் Q 3 கார் புதுப்பிக்கப்பட்ட போது நடந்தது போலவே, ஆடி தனது தற்போதைய இயக்க முறைககளையே பின்பற்றி உள்ளது (வேறு எந்த மாற்றமும் இல்லை). இந்நிறுவனம், 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் TDI டீசல் ரக இயந்திரங்களை அப்படியே தொடர்ந்து செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறது.
ஆடி A 6 காரின் 2.0 லிட்டர் 35 TFSI பெட்ரோல் இயந்திரம் 177 bhp குதிரை திறனில் 4000 – 6000 rpm செயல்திறனுடன்; 320 Nm முறுக்கு விசையும், அதிகபட்ச திருப்பத்தில், 1500 – 3900 rpm திறனையும் பெறுகிறது. இதன் 2.0 லிட்டர் 35 TDI இயந்திரம் 174 குதிரை திறனை 3750 – 4200 rpm அளவிலும் மற்றும் 380 முறுக்கு விசையை 1750 – 2500 rpm அளவிலும் தருகிறது. இந்த இரு வகை இயந்திரங்களும் முன் சக்கர இயக்கி அமைப்பில் (ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் லேஅவுட்) உள்ள பன்முக மின்னணு CVT உட்செலுத்தியுடன் (மல்டிட்ரானிக் CVT ட்ரான்ஸ்மிஷன்)
இணைக்கப்பட்டுள்ளன.