Q2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது!
published on பிப்ரவரி 16, 2016 04:36 pm by raunak for ஆடி க்யூ2
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
வரும் 2017ல் A3-யின் விலையை ஒத்த விலையோடு, நம் நாட்டில் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம்
அடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட்ப ரீதியாக பார்த்தால், இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் தரப்பில், கிராஸ்ஓவருக்கான டீஸர் படங்கள் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த முறை வெளியிடப்பட்ட டீஸரை கொண்டு, உண்மையான வாகனத்தை கண்டறியவே முடியவில்லை. சர்வதேச அளவில், Q3-க்கு அடுத்தப்படியாக இது அமையும். பெரும்பாலும் 2016 ஜெனீவா மோட்டார் ஷோவில், இந்த காரின் பொது அரங்கேற்றம் நடைபெறலாம் என்று உறுதியாக நம்பப்படும் நிலையில், அதற்கு முன்னதாக ஆன்லைனில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்தாண்டின் பிற்பகுதியில் ஆடி Q2, ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்காக வைக்கப்படலாம். அதே நேரத்தில் வரும் 2017 ஆம் ஆண்டை ஒட்டி, இந்திய சந்தையில் இந்த காரின் அறிமுகம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த வடிவமைப்பை பார்த்தால், ஆடியின் SUV லைன்அப்-பை ஒத்ததாக (அப்படி தானே இருக்கும்) உள்ளது. இந்த டீஸரின் மூலம் எதுவுமே வெளியாகவில்லை என்றாலும், இந்த அடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரின் நுட்பமான ஹெட் மற்றும் டெயில்லெம்ப்களின் குறிப்புகளை நமக்கு அளிக்கிறது. இந்த டீஸர் படத்தின் மூலம் மேட்ரீக்ஸ் LED-களுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட A6-யை ஒத்துப் போகும் அதன் LED டேடைம் ரன்னிங் லைட் காட்டப்படுகிறது. டெயில்லெம்ப்களின் கிராஃபிக்ஸிலும் அதே ஒத்த தன்மையை தான் காண முடிகிறது. மேலும், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த Q7 மற்றும் புதுப்பிக்கப்பட்ட Q3 ஆகியவற்றில் காணக் கிடைக்கும், ஆடியின் புதிய ஒற்றை-பிரேம் கிரில் இதில் அமைந்திருக்க வாய்ப்புள்ளது.
என்ஜின் தேர்வுகளை பொறுத்த வரை, TDI-க்கு நிகராகவும், அதனுடன் TFSI டர்போசார்ஜ்டு டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களை கொண்டதாகவும் இது காணப்படும். இந்தியாவிற்கான தயாரிப்பைக் குறித்து பார்க்கும் போது, இந்த வாகனத் தயாரிப்பாளர் மூலம் ஆரம்ப-நிலை சேடனான A3-ன் என்ஜின் தேர்வுகளை இதில் பகிர்ந்து அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் வகையில் 1.8-லிட்டர் 40 TFSI-யும், டீசல் வகையில் 2.0-லிட்டர் 35 TDI-யும் அமையப் பெறலாம். டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில், 6 மற்றும் 7-ஸ்பீடு S-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் உள்ளிட்டவற்றை கொண்டு, Q3-யைப் போல Q2-வின் துவக்க வகையில் ஒரு 6-ஸ்பீடு மேனுவல் அமைப்பு அளிக்கப்படலாம். மேலும், இதில் குவான்ட்ரோ ஆல்-வீல் டிரைவ் வசதியும், இது தவிர தரமான முன்பக்க வீல் டிரைவ் செட்அப்-பும் கொண்டு அளிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க : ஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது
0 out of 0 found this helpful