ஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது

published on பிப்ரவரி 12, 2016 12:41 pm by nabeel for ஆடி க்யூ2

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Audi Q2 Teaser

ஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, புதிய டீசர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. 2016 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த காரை உலகிற்கு அறிமுப்படுத்த, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு Q2 மாடல் Q1 என அழைக்கப்பட்டது. சென்ற வருடம் செப்டெம்பர் மாதம், Q2 மற்றும் Q4 என்ற தனது டிரேட்மார்க் பாட்ஜ்களை ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ஆடி, SUV Q2 என்று தனது தயாரிப்பிற்கு பெயர் சூட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசரில், Q7, Q5, மற்றும் Q3 ஆகிய மாடல்கள் தங்களின் நம்பர் பலகையுடன் அருகருகே நிறுத்திவைக்கப் பட்டுள்ளன, ஆனால் நான்காவது இடத்தில் எதுவும் நிறுத்தப்படாமல் இருக்கிறது. காலியாக இருக்கும் அந்த இடம், ரிசர்வ் செய்யப்பட்டு இருப்பதை, இந்த டீசர் சித்தரிக்கிறது.  

Q2 என்ற பெயரை, 2013 –ஆம் ஆண்டில் முதலில் உறுதிப்படுத்திய ஆடி நிறுவனம், கடந்த செப்டெம்பர் மாதம்தான் அதற்கு உரிமை வாங்கியுள்ளது. ஆடியின் க்ராஸ்லேன் கூபே மாடலில் கையாளப்பட்ட டிசைன் வடிவம், இந்த காரின் வடிவமைப்பிலும் கையாளப்பட்டுள்ளது. Q2 கார், டீசல் மற்றும் இ - டிரான் ஹைபிரிட் என்ற இரண்டு வகை இஞ்ஜின் வேரியண்ட்களில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  எனினும், இ - டிரான் ஹைபிரிட் வேரியண்ட், சிறிது இடைவெளிக்குப் பின் இரண்டாவதாக அறிமுகப்படுத்தப்படும் என்று தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல, ஆடி Q1 என்ற பெயரில் மேலும் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2017 -ஆம் ஆண்டு Q1 மாடலை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம். ஜெர்மானிய கார் தயாரிப்பாளரின் ஆலையில் இருந்து வெளிவரவுள்ள இந்த SUV கார், தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வோல்க்ஸ்வேகனின் MQB போலவும், அளவுகளில் A3 ஹாட்ச்பேக்கைப் போலவும் இருக்கும். 

ஆடியின் A8L செக்யூரிட்டி மாடல், 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வாகனங்களிலேயே மிகவும் விலையுயர்ந்த காராகத் திகழ்ந்ததால், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.  A8L செக்யூரிட்டி கார் குண்டு துளைக்காத, பாம் துளைக்காத மற்றும் இரசாயனத் தாக்குதல்கள் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டு, தனிச்சிறப்புடைய பாதுகாப்பு அம்சங்களில் சிறந்து விளங்குகிறது. மேலும், இதன் பூட் பகுதியில் துணை பேட்டரி மற்றும் கவசமிட்ட கம்யூனிக்கேஷன் பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வெளியுலக தொடர்புக்காக ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்ட இன்டர்காம் வசதியையும் A8L செக்யூரிட்டி கார் பெற்றுள்ளது. மேலும், எமர்ஜென்ஸி எக்சிட் சிஸ்டம், தீ அணைக்கும் அமைப்பு மற்றும் எமர்ஜென்ஸி ஃபிரெஷ் ஏர் சிஸ்டம் ஆகிய வசதிகளையும் இந்த கார் உரிமையாளர்கள் அனுபவிக்கலாம். V8 மற்றும் W12 ஆகிய இரண்டு வகை 4.0 லிட்டர் இஞ்ஜின் கட்டமைப்புகள் மூலம் இந்த கார் இயக்கப்படுகிறது. V8 இஞ்ஜின் 429 bhp என்ற அளவில் சக்தியையும்; W12 இஞ்ஜின் 493 bhp என்ற அளவில் சக்தியையும் உற்பத்தி செய்கிறன. A8L செக்யூரிட்டி காரின் மின்னணு மூலம் கட்டுப்படுத்தப்படுகிற அதிகபட்ச வேகம் (எலெக்ட்ரானிக்கலி லிமிடெட் டாப் ஸ்பீட்), மணிக்கு 210 கிலோ மீட்டர் என்ற அளவில் உள்ளது. 

இதையும் படியுங்கள் 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஆடி க்யூ2

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience