ஆடி நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் 3.14% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது .
published on ஜனவரி 13, 2016 01:12 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆடி நிறுவனம், கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் மொத்தம் 11,192 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2014 ஆம் ஆண்டு மொத்த விற்பனையான 10,201 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 3.14% கூடுதல் விற்பனை வளர்ச்சியாகும். விற்பனையை பொறுத்தவரை ஆடி கார்களுக்கு பிரதான போட்டியாளராக திகழ்வது ஜெர்மன் நாட்டு மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு சொகுசு கார் பிரிவில் இந்திய சந்தையில் அதிகப்படியான கார்களை விற்று ஆடி முதலிடத்தைப் பிடித்திருந்தது. அதனை பின்னுக்கு தள்ளி கடந்த 2015 ஆம் வருடத்தில் பென்ஸ் முதல் இடத்தைப் பிடித்து மிக அதிகப்படியான 32% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்தது.
“ சொகுசு கார் ஆர்வலர்களின் விருப்பத் தேர்வாக என்றுமே ஆடி கார்கள் இருந்து வந்துள்ளன. கடந்த 2015 வருடமும் எங்களது விற்பனை வளர்ச்சியையே அடைந்துள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சொகுசு கார்கள் வாங்கும் அனுபத்தை அளிக்க வேண்டும் என்ற எங்களது குறிக்கோளை முன்னிறுத்தி எங்கள் பயணத்தை தொடருவோம் " என்று ஆடி இந்தியாவின் தலைவர் ஜோ கிங் கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு தங்களது விற்பனை மேலும் உயரும் என்றும், மீண்டும் 2014 ஆம் ஆண்டைப் போலவே பென்ஸ் தயாரிப்புக்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து விடுவோம் என்றும் ஆடி நிறுவனம் உறுதியாக நம்புகிறது. “ அதி நவீன தொழில்நுட்பம், நேர்த்தியான தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய கார்களை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தும் வேலைகளில் நாங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம் 2016 ஆம் ஆண்டு மட்டுமல்ல, அதைத் தொடர்ந்தும் எங்கள் விற்பனை வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கும் என்று மிக உறுதியாக நம்புகிறோம் " என்று கிங் மேலும் அவர் கூறினார்.
2015 ஆம் ஆண்டில் R8 LMX மற்றும் TT கூபே உட்பட மொத்தம் 10 கார்களை ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இவைகளைத் தவிர S5 ஸ்போர்ட்பேக் மற்றும் புதிய Q7 கார்களும் களத்தில் இறக்கி விடப்பட்டன. அடுத்த மாதம் நடக்க உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் கார் ஆர்வலர்களை பரவசப்படுத்தும் விதத்தில் மூன்று புதிய கார்களை காட்சிக்கு வைக்க ஆடி தயாராக உள்ளது. அந்த மூன்றிலும் குறிப்பாக , மிகவும் எதிர்பார்க்கப்படுவது ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய R8 கார்களாகும். இந்த கார் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சி படுத்தப்பட்டு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful