இந்தியாவில் வெளியானது Audi Q3 போல்ட் எடிஷன் கார். விலை ரூ.54.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- 166 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய லிமிடெட் ரன் மாடல் கிரில் மற்றும் ஆடி லோகோ உள்ளிட்ட சில எக்ஸ்ட்டீரியர் எலமென்ட்களில் பிளாக்டு-அவுட் ட்ரீட்மென்ட்டை பெறுகிறது.
-
ஆடி போல்ட் எடிஷனை ஸ்டாண்டர்டு Q3 மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் ஆகிய இரண்டிலும் கொடுக்கின்றது.
-
இதன் விலை ரூ.54.65 லட்சம் மற்றும் ரூ.55.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக இருக்கின்றன.
-
10.1-இன்ச் டச் ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட வழக்கமான மாடல்களில் உள்ள அதே வசதிகளை கொண்டுள்ளது.
-
ஸ்டாண்டர்டு வெர்ஷனில் உள்ள 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷனுடன் கிடைக்கும்.
ஆடி Q3 காரை வாங்க முடிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கவனத்தில் கொள்ள புதிய லிமிடெட் ரன் போல்ட் பதிப்பை அறிமுகமாகியுள்ளது. இது ஆடியின் என்ட்ரி லெவல் எஸ்யூவி -யின் ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்போர்ட்பேக் வேரியன்ட்களில் கிடைக்கிறது.
வேரியன்ட் வாரியான விலை விவரங்கள்
வேரியன்ட் |
விலை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) |
Q3 போல்ட் எடிஷன் |
ரூ.54.65 லட்சம் |
Q3 ஸ்போர்ட்பேக் போல்ட் எடிஷன் |
ரூ.55.71 லட்சம் |
ஸ்டாண்டர்டு Q3 -ன் போல்ட் எடிஷன் பிரீமியமாக ரூ. 1.48 லட்சம் ஆக உள்ளது. அதே நேரத்தில் Q3 ஸ்போர்ட்பேக் 1.49 லட்சம் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள்
ஆடி போல்டு எடுஷனை ‘பிளாக் ஸ்டைலிங்’ பேக்கேஜில் வழங்குகிறது. இது கிரில், வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMகள்) மற்றும் ரூஃப் ரெயில்களுக்கான கிளாஸி-பிளாக் பூச்சுடன் வருகிறது. Q3 மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் ஆகிய இரண்டின் போல்டு பதிப்பும் ஆடி லோகோவிற்கு முன்புறம் மற்றும் பின்புறம் மற்றும் ஜன்னல்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிளாக் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. Q3 மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் போல்ட் எடிஷன் அவற்றின் வழக்கமான உடன்பிறப்புகளில் வழங்கப்படும் அதே 18-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. Q3 ஸ்போர்ட்பேக் ஆனது S லைன் ஸ்போர்ட்டியான விவரங்கள் கொண்ட வெளிப்புறத் தொகுப்பைக் கொண்டுள்ளது.
கேபினில் எந்த வித்தியாசமும் இல்லை
லிமிடெட் பதிப்பான Q3 போல்ட் பதிப்பின் உட்புறத்தில் ஸ்டாண்டர்டு கார்களில் உள்ளவை அப்படியே இருக்கின்றன. 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் போன்ற ஹெட்லைனிங் என வசதிகள் அப்படியே இதிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆடி Q3 மற்றும் Q3 ஸ்போர்ட்பேக்கின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ரிவர்சிங் கேமரா மற்றும் பார்க் அசிஸ்ட் ஆகியவை இருக்கின்றன.
மேலும் படிக்க: BMW 3 Series Gran Limousine M ஸ்போர்ட் புரோ எடிஷன் அறிமுகம், விலை ரூ.62.60 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இன்ஜின் விவரங்கள்
ஸ்டாண்டர்டு ஆடி Q3 மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் போன்ற அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (190 PS/320 Nm) போல்ட் பதிப்பு உள்ளது. இது 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நான்கு சக்கரங்களையும் இயக்குகிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஆடி Q3 காரின் விலை ரூ. 43.81 லட்சத்தில் இருந்து ரூ. 54.65 லட்சமாக இருக்கின்றது. ஸ்போர்டியர் தோற்றம் கொண்ட இந்த ஆடி Q3 ஸ்போர்ட்பேக்கின் விலை ரூ.54.22 லட்சம் முதல் ரூ. 55.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. Q3 கார் மெர்சிடிஸ்-பென்ஸ் GLA மற்றும் BMW X1 ஆகியவற்றுடன் போட்டியிடும். அதைத் தவிர வால்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகிய இவி -களுக்கு மாற்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: ஆடி Q3 ஆட்டோமெட்டிக்