• English
  • Login / Register

BMW 3 Series Gran Limousine M ஸ்போர்ட் புரோ எடிஷன் அறிமுகம், விலை ரூ.62.60 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

published on மே 09, 2024 07:17 pm by rohit for பிஎன்டபில்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசைன்

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய வேரியன்ட் ஒரு பிளாக்-அவுட் கிரில் மற்றும் ரியர் டிஃப்பியூசருடன் வருகின்றது. இது பிஎம்டபிள்யூ லைஅப்பின் டாப் வரிசையில் இருக்கும்.

BMW 3 Series Gran Limousine M Sport Pro Edition launched

  • இந்த செடான் இப்போது மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: 330 Li M Sport, 320 Ld M ஸ்போர்ட் மற்றும் M ஸ்போர்ட் புரோ எடிஷன்.

  • பிஎம்டபிள்யூ செடானின் விலை ரூ.60.60 லட்சம் முதல் ரூ.62.60 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.

  • புதிய டாப்-ஸ்பெக் வேரியன்ட் ஸ்டாண்டர்டான மாடலில் உள்ள அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகின்றது.

  • புதிய வேரியன்ட்டின் கேபினில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே உள்ளது: அது ஒரு பிளாக்-அவுட் ஹெட்லைனர் ஆகும்.

  • டூயல் கர்வ்டு டிஸ்பிளேக்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ADAS ஆகியவை இந்த காரில் உள்ளன.

இந்தியாவில் கடந்த 2023 -ம் ஆண்டு ஜனவரி மாதம் BMW 3 சீரிஸ் கிரான் லிமோசின் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இது இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது: 330 Li M ஸ்போர்ட் மற்றும் 320 Ld M ஸ்போர்ட். BMW இப்போது புதிய ரேஞ்ச்-டாப்பிங் M ஸ்போர்ட் புரோ எடிஷனை இதன் வேரியன்ட் வரிசையில் சேர்த்துள்ளது. இதன் விலை ரூ. 62.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை விவரங்களுடன் புதிய வேரியன்ட் விவரங்களை இங்கே பார்க்கலாம்:

வேரியன்ட்

விலை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா)

330 Li M ஸ்போர்ட்

ரூ.60.60 லட்சம்

320 Ld M ஸ்போர்ட்

ரூ.62 லட்சம்

M ஸ்போர்ட் புரோ எடிஷன் (புதியது)

ரூ.62.60 லட்சம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எம் ஸ்போர்ட் புரோ எடிஷன், செடானின் பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது, மேலும் 3 சீரிஸ் கிரான் லிமோசினின் என்ட்ரி லெவல் வேரியன்ட்டை விட சரியாக ரூ.2 லட்சம் அதிகம்.

ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே

இது என்ட்ரி லெவல் 330 Li M ஸ்போர்ட் வேரியன்ட்டின் அதே டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது. அதன் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:

விவரங்கள்

2-லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

பவர்

258 PS

டார்க்

400 Nm

டிரான்ஸ்மிஷன்

8-ஸ்பீடு AT

இது ரியர்-வீல் டிரைவ் (RWD) செட்டப் கொண்டது. மேலும் 0-100 கிமீ/மணி வேகத்தை 6.2 வினாடிகளில் கடக்கும். இகோ புரோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோட்களையும் கொண்டுள்ளது.

வடிவமைப்பில் நுட்பமான அப்டேட்கள் உள்ளன

BMW 3 Series Gran Limousine M Sport Pro Edition front

3 சீரிஸ் கிரான் லிமோசினின் புதிய டாப்-ஸ்பெக் எம் ஸ்போர்ட் புரோ பதிப்பை சில பிளாக்-அவுட் எலமென்ட்களுடன் BMW வழங்குகிறது. அதன் கிரில் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. நிமற்றும் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்கள் ஸ்மோக்ட் எஃபெக்டுடன் வருகின்றன. அவை ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொடுக்கும். செடானின் வெளிப்புறத்தில் வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை, அதன் பின்புற டிஃப்பியூசருக்கு ஒரு கிளாஸி பிளாக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளதை தவிர.

இது நான்கு எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: மினரல் ஒயிட், கார்பன் பிளாக், போர்டிமாவோ ப்ளூ மற்றும் ஸ்கைஸ்க்ரேப்பர் மெட்டாலிக்.

மேலும் படிக்க: லேண்ட் ரோவர் டிஃபென்டர் செடோனா எடிஷன் வெளியிடப்பட்டது. இப்போது சக்திவாய்ந்த டீசல் இன்ஜினையும் பெறுகிறது

கேபின் மற்றும் வசதிகள்

M ஸ்போர்ட் புரோ பதிப்பில் உட்புறத்தில் உள்ள ஒரே ஒரு மாற்றம் புதிய பிளாக்-அவுட் ஹெட்லைனர்  மட்டுமே. என்ட்ரி லெவல் 330 Li M ஸ்போர்ட் பெட்ரோல் வேரியன்ட்டில் அதே டூயல்-டோன் கேபின் தீம் உள்ளது.

BMW 3 Series Gran Limousine M Sport Pro Edition cabin

BMW ஆனது செடானின் உபகரணங்களில் எதையும் மாற்றவில்லை. ஆகவே ஸ்டாண்டர்டான மாடலின் அதே வசதிகளுடன் புதிய டாப்-ஸ்பெக் வேரியன்ட் கிடைக்கும். கர்வ்டு டூயல் டிஸ்பிளேக்கள் (12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் 14.9-இன்ச் டச்ஸ்கிரீன்), 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகிய வசதிகள் உள்ளன.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (DSC) மற்றும் டிரைவர் அட்டென்டிவ்னெஸ் அலெர்ட் மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட் ஆகியவை அடங்கிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) உடன் கிடைக்கும்.

போட்டியாளர்கள்

BMW 3 Series Gran Limousine M Sport Pro Edition rear

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிஷன் ஆனது ஆடி A4 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் போன்ற இதன் ஸ்டாண்டர்டான வெர்ஷன் போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க: 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on BMW 3 சீரிஸ் Gran Limousine

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கூபே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience