• English
  • Login / Register

அபார்த் பண்டோ EVO Vs VW போலோ GT TSI

published on ஆகஸ்ட் 10, 2015 09:50 am by அபிஜித்

  • 17 Views
  • 8 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: இந்திய ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற செயல்திறன் கொண்ட வாகனமாக போலோ GT TS-யை மட்டுமே எடுத்துக் கொள்ள முடிகிறது. அதில் காணப்படும் ஜெர்மன் டெக்னாலஜியின் கலைநயம் மற்றும் தரம் இதை விளங்க செய்கிறது. செயல்திறன் மற்றும் சவுகரிய பயணம் ஆகிய இரண்டையும் சரிசமமாக இவ்வாகனம் கொண்டுள்ளது. ஆனால் ஒரு ஹாட் ஹாட்ச்சின் அடிப்படை என்னவென்றால் இவை இரண்டும் சரிசமமாக இருப்பதல்ல. மாறாக அது உங்களுக்கு விறுவிறுப்பை அளிக்க வேண்டும். நீங்கள் அலுவலகத்திற்கு காரை ஓட்டி செல்ல, ஆக்ஸிலேட்டர் பெடலை ஒவ்வொரு முறை அழுத்தும் போதும், உங்களுக்கு உற்சாகத்தை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

ஹாட் ஹாட்ச் என்பது ஒருவிதமான மாயை, சீராக அமைந்தது, ஆனால் கட்டுப்படுத்த முடியாதது. பியட் சமீபத்தில் அபார்த் 595 காம்பெட்டிசியோன் உடன் அறிமுகப்படுத்திய அபார்த் பண்டோ EVO வை போல இருக்க வேண்டும். இங்கே இந்தியாவின் ஒரே ஹாட் ஹாட்ச் என்று எடுத்துக் கொள்ளப்பட்ட வோல்ஸ்வேகன் போலோ GT TSI உடன் இத்தாலிய தயாரிப்பு போட்டிக்கு வருகிறது. எனவே போலோ GT TSI தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளுமா? அல்லது அபார்த் தன் அம்சங்களின் மூலம் அதை கைப்பற்றுமா? என்று காண்போம்.

காட்சி போரில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?

புற பகுதிகளை பொறுத்த வரை, சாதாரணமாக வெளிபுறத்தை பார்ப்பதன் மூலம் ஒருவரால் சாதாரண போலோவிற்கும், GT TSI-க்கும் உள்ள வேறுபாட்டை அறிய முடியாது. நீங்கள் அதனை தீவிரமாக பின்தொடரும் நபராகவோ அல்லது ஒரு கார் ரசிகராகவோ அல்லது GT என்ற பேட்ஜ்ஜையோ பார்க்காத வரை அந்த வித்தியாசம் தெரியாது. மறுபுறம், அபார்த் பண்டோ EVO-வில் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் லோகோ, போனேட் மற்றும் டெயில்கேட் ஆகிய பகுதிகளில் அபார்த் இன்சைனியா காணப்படுகிறது. அபார்த் எழுத்துக்களுடன் கூடிய ஸ்போர்ட்டி முத்திரை, நடுவில் உட்கார்ந்த நிலையில் உள்ள ஸ்கார்பியன் படத்துடன் கூடிய வழக்கமாக இல்லாத டைமண்ட் கட் அலாய் வீல்கள், ORVM-ல் சிவப்பு/ ஆரஞ்சு நிறத்திலான டானிங் ஆகியவை கொண்டுள்ளது. மேலும் கிரில், முன்புற மற்றும் பின்புற பம்பர்களில், மற்ற இடங்களில் உள்ள அதே நிறம் பூசப்பட்டுள்ளது. புகை வெளியேற்றும் போது, உற்சாகப்படுத்தும் மெல்லிய சத்தம் ஏற்படுகிறது. இது GT TSI-இல் கிடையாது.

அபார்த்தின் உட்புற வடிவமைப்பை பொறுத்த வரை, பியட் வாகனங்களில் இருக்கும் பொதுவான உட்புற அமைப்பு மற்றும் இருக்கைகளையே கொண்டுள்ளது. ஆனால் அவை எல்லாம் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. சற்று வேறுபாட்டை காட்டும் வகையில், வாகன பெடல்கள் அலுமனிய நிறத்திலும், இருக்கைகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு தையல்கள், இன்ஸ்ட்ரூமென்டேஷன் கிளஸ்டரில் மஞ்சள் நிறத்தின் சாயல், ஸ்டீயரிங்கில் ஸ்கார்பியன் படம் ஆகியவை காணப்படுகின்றன. உட்புற வடிவமைப்பை, தரமான பண்டோவிடம் கடனாக பெற்று கொண்டாலும், போலோவின் சிறந்த தயாரிப்புடன் ஒப்பிடும் போது, தரம் ஒரு பிரச்சனையாக காணப்படலாம். ஆனால் இதெல்லாம் ஒரு சிறிய பேச்சோடு மாற கூடியது.

ஹோலிகன்!

அபார்த் பண்டோ EVO இயங்கும் 1.4 டி-ஜெட் மோட்டார் மூலம் 145 bhp சக்தியை பெற்று, 200 Nm டார்க் விட அதிகமாக அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுகிறது. மேற்கண்ட இவை அபார்த்திற்கு உள்ள குறைபாடுகளை மறைத்து, போட்டியாளருக்கு நிகரான நிலைக்கு கொண்டு வருகிறது. இந்த காரில் எலக்ட்ரிக் ஸ்டேபிள்லிட்டி கன்ட்ரோல் சுவிட்ச் எதுவும் இல்லாததால், காரை சருக்கலில் இருந்து எப்படி காப்பாற்றுவது என்பதில் பலத்த சந்தேகம் நமக்கு ஏற்படும்.

மற்றொருபுறம், GT TSI ஹாட் ஹாட்ச்சின் கடினமான சில குணநலன்கள் இல்லாவிட்டாலும், 10 வினாடிகளில் 0 விலிருந்து 100 கி.மீ. வேகத்தை எட்டும், உயர்தர காராக காட்சியளிக்கிறது. மேலும், நவீன 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கொண்ட போலோ அதிகபட்சமாக மணிக்கு 190 கி.மீ வேகத்தை எட்டுகிறது. ஆனால் பண்டோவில் சற்று அதிகமான மணிக்கு 200 கி.மீ வேகத்தை அதிகபட்சமாக எட்டுகிறது. இதில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்ட 9 வினாடிகளுக்கு குறைவாகவே எடுத்துக் கொள்கிறது.

விலை?

GT TSI–இன் விலை என்ன என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் அபார்த் பண்டோ EVO தகுந்த விலை கொண்ட தயாரிப்பாக இருக்கும் என்று பியட் அறிவித்துள்ளது. தகுந்த விலை என்று கூறும்போது, ஒரு செயல்திறன் மிகுந்த காரின் விலையை ரூ.10 லட்சத்திற்குள் அமையலாம் என்று தெரிகிறது. இது நிஜமானால், கணக்குப்படி இந்தியாவின் முதல் நிரந்தர ஹாட் ஹாட்ச்சாக இது மாறிவிடும். ஏனெனில் இங்கே எண்ணிக்கையை பற்றி தான் பேசுகிறோம்.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Abarth புண்டோ EVO

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience