• login / register

இந்தியாவில் உள்ள சிறந்த பிரிமியம் ஹேட்ச்கள் – ஓர் கண்ணோட்டம்

ஹோண்டா ஜாஸ் 2018-2020 க்கு modified on dec 22, 2015 12:42 pm by manish

  • 9 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

கடந்த சில ஆண்டுகளாக இந்திய வாகன சந்தை, பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவினால் பரபரப்பாக இயங்கி வருகிறது. எதனால் இப்படியானது என்பதை கண்டறிவதில் பெரிய கஷ்டம் எதுவுமில்லை! குறிப்பாக, நகர வீதிகளில் திட்டுமிட்டு பயணிப்பதில் எளிமை, மனதில் நிலைக்கூடிய இதமான பயண அனுபவத்தை அளிப்பது, சிறிய வகை ராக்கெட்களை போல சத்தம் எழுப்பி செல்லும் தன்மை ஆகிய அம்சங்களைப் பெற்று நமது வாழ்வில் இவை நிலைத்து நிற்கின்றன. இந்த ஆண்டு அறிமுகங்களில், இப்பிரிவில் பல மேம்பாடுகளோடு கூடிய வாகனங்கள் வெளியிடப்பட்டதை காணலாம். ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் i20 மற்றும் மாருதி சுசுகி பெலினோ ஆகிய இம்மூன்று பிரிமியம் ஹேட்ச்பேக்குகளும் பெரிய புயலை கிளப்பி எப்படி சந்தையை பிடித்தன என்பதை கண்டறிவது மிக எளிதாகும். எனவே இந்த கவர்ச்சிகரமான அறிவுசார்ந்த ஆட்டோமோட்டிவ் விருந்தாக அமையும் இவ்வாகனங்களை குறித்த ஒரு கண்ணோட்டத்தை இங்கே காண்போம்.

ஹோண்டா ஜாஸ்

இதில் உள்ள நடைமுறை தன்மையை வைத்து பார்த்தால், ஹோண்டா ஜாஸின் அருகே வேறு எந்த வாகனமும் நெருங்கி வந்து போட்டியிட முடியாது. A-பில்லர் பேனல்களில் உள்ள கட்அவுட்களின் மூலம் கவர்ச்சிகரமான தோற்றத்தை பெறுவதோடு, ஒட்டுமொத்தமாக காற்றோட்டம் மிகுந்த உணர்வை அளிப்பது இந்த காரின் சிறப்பு தன்மை ஆகும். பெலினோ அல்லது எலைட் i20 ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், இந்த காரில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அவ்வளவு சிறப்பானதாக இருப்பதில்லை. ஆனால் இதில் உள்ள டச் AC கன்ட்ரோல்கள் மற்றும் மற்ற சாதனங்களின் மூலம் மேற்கூறிய குறைகள் மறைக்கப்படுகிறது. இது தவிர, ஜாஸில் ஒரு 100PS 1.5-லிட்டர் டீசல் மில் மற்றும் ஒரு 90PS 1.2-லிட்டர் பெட்ரோல் ஆற்றலகம் ஆகியவற்றை பெற்று, இந்த பிரிவிலேயே அதிக சக்திவாய்ந்த யூனிட்களை கொண்டதாக திகழ்கிறது. மேலும் இப்பிரிவிலேயே முதல் முறையாக இந்த காரில் மேஜிக் சீட்கள் பெற்றுள்ளதோடு, இப்பிரிவிலேயே சிறந்த எரிபொருள் சிக்கனமாக லிட்டருக்கு 27.3 கி.மீ அளிப்பதாக உறுதி அளிக்கப்படுகிறது.

ஹூண்டாய் எலைட் i20

இதன் வடிவமைப்பை பொறுத்த வரை குறிப்பிடத்தக்க வாகனமாக இருப்பதால், இந்தியாவில் தற்போது கிடைக்கும் பிரிமியம் ஹேட்ச்பேக் வாகனங்களிலேயே சிறந்த தோற்றத்தை கொண்ட ஒரு வாகனம் என்றால் அது ஹூண்டாய் எலைட்  i20 என்று நான் நினைக்கிறேன், என்ற கூற்று வெளியிடப்படுகிறது. ஜாஸில் காணும் ஒரிகமி-இஸ்க்யூ டிசைன் அல்லது பெலினோவின் ஃபுலோயிங் லிக்விட் டிசைன் ஆகியவை உடன் ஒப்பிட்டால், i20-ல் காணும் ப்ளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 டிசைன் அதிக கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த பிரிமியம் ஹேட்ச்பேக்கில் ஒரு 90PS 1.4 லிட்டர் டீசல் மில் மற்றும் ஒரு 82PS 1.2-லிட்டர் பெட்ரோல் யூனிட் ஆகியவற்றை கொண்டிருப்பதால், ஜாஸை விட தாழ்ந்ததாக தெரிந்தாலும், மாருதி பெலினோவில் உள்ள ஆற்றலக தேர்வுகளை விட மிஞ்சியதாகவே காணப்படுகிறது. மற்ற இரு வாகனங்களோடு ஒப்பிட்டால், இதன் உட்புற அமைப்பு அவ்வளவு பிரகாசமானதாக தெரிவதில்லை என்றாலும், பின்பக்க AC திறப்பிகள் இருப்பதன் மூலம் இந்த காருக்கு நிச்சயம் சில புள்ளிகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மாருதி சுசுகி பெலினோ

சமீபகாலத்தில் பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவிற்குள் நுழைந்த கார் பெலினோ. இந்த காரில் மிகவும் மேம்பட்ட உட்புற அமைப்பு அம்சங்கள் உள்ளன என்பதை வெளிப்படுத்தும் வகையில், உங்கள் ஐபோன் உடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை இணைக்க உதவும் ஆப்பிளின் கார்ப்ளே காணப்படுகிறது. மேலும் இக்காரில் GPS நேவிகேஷன் மற்றும் ஒரு டிஜிட்டல் MID ஆகியவற்றை கொண்டுள்ளது. எலைட் i20-ல் நாம் காண கிடைக்கும் பின்பக்க AC திறப்பி அமைந்துள்ள இடத்தில், பெலினோவில் ஒரு 12V சார்ஜரை காண முடிகிறது. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, பெலினோவில் ஒரு தேர்வாக, 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது ஒரு 1.3-லிட்டர் டீசல் ஆற்றலகத்தை கொண்டு முறையே 84PS மற்றும் 75PS வெளியிட்டு, மாருதி சுசுகி ஸ்விஃப்ட்டின் தன்மைகளை பகிர்ந்து கொள்கிறது. ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை விட, இந்த கார் 100 கிலோ எடைக்குறைவாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்

Write your Comment மீது ஹோண்டா ஜாஸ் 2018-2020

Read Full News
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?