மாருதி பலேனோ சிஎன்ஜி -யைவிட கூடுதலாக 5 அம்சங்களைப் பெறும் டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி
published on ஏப்ரல் 24, 2023 07:14 pm by stuti for டாடா ஆல்டரோஸ் 2020-2023
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா சிஎன்ஜி ஹேட்ச்பேக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன மற்றும் அடுத்த மாதம் டெலிவரியும் தொடங்கப்படும்.
டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜியை ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் காட்சிப்படுத்தியது சமீபத்தில் அதற்கான ஆர்டர் புத்தகங்களைத் திறந்துள்ளது, இது விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதைக் குறிக்கிறது. மாருதி பலேனோ சிஎன்ஜி மற்றும் டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி எக்ஸ்டென்ஷன் ஆகியவற்றுடன் இந்த ப்ரீமியம் சிஎன்ஜி ஹேட்ச்பேக் நேருக்கு நேர் போட்டியிடுகிறது. எனவே இவை இரண்டிலும் என்ன கிடைக்கிறது என பார்ப்போம்:
சன்ரூஃப்
சன்ரூஃப் என்ற மிகப்பெரிய அம்சத்துடன் ஆரம்பிக்கலாம். ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முன்னோட்டமிடப்பட்ட ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி கூடுதல் அம்சத்துடன் வரும் என்பதை டாடா சமீபத்தில் ஒரு டீஸர் மூலம் உறுதிப்படுத்தியது. சிஎன்ஜி ஹேட்ச்பேக் அறிமுகப்படுத்தப்பட்டதும், அதன் பிரிவில் இந்த அம்சத்தை வழங்கும் ஒரே மாடலாக இது மாறும்.
மேலும் படிக்க: இந்த ஏப்ரலில் ரூ. 35,000 வரை பலன்களுடன் டாடா காரை வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள்
ஆல்ட்ரோசின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களின் அம்சப்படியலில் சன்ரூஃபையும் டாடா சேர்க்கக்கூடும், ஹூண்டாய் i20 க்குப் பிறகு அதன் பிரிவில் சன்ரூஃப் உடன் வரும் இரண்டாவது மாடலாக இது இருக்கும்.
இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம்
சிஎன்ஜி யால்-இயங்கும் காரின் குறை என்னவென்றால், ஒரு பெரிய சிஎன்ஜி சிலிண்டரின் காரணமாக பூட் ஸ்பேசை இழப்பதாகும். ஆனால் டாடா இரட்டை சிலிண்டர் அமைப்பை கொடுப்பதன் மூலமாக இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை உருவாக்கியுள்ளது, அங்கு ஒரு பெரிய சிஎன்ஜி டேங்கிற்கு பதிலாக, பூட் பெட்க்கு கீழே சமமான இரண்டு சிறிய டேங்குகள் வைக்கப்படும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் சாமான்களை எளிதாக சேமிக்க பூட் ஸ்பேஸ் கிடைக்கும்.
சிஎன்ஜி மோட் -ல் டேரக்ட் ஸ்டார்ட்
பெரும்பாலான சிஎன்ஜி யால்-இயங்கும் கார்கள் , பலேனோ மற்றும் கிளான்ஸா சிஎன்ஜி உட்பட முதலில் பெட்ரோலை பயன்படுத்தியே ஸ்டார்ட் ஆகி, பின்னர் சிஎன்ஜி க்கு மாறுகின்றன, ஆல்ட்ரோஸ் போன்ற டாடாவின் சிஎன்ஜி மாடல்கள் நேரடியாக சிஎன்ஜி -யை பயன்படுத்தி ஸ்டார்ட் ஆக் அனுமதிக்கும் அம்சத்தைப் பெறுகின்றன. இது ஒரு சிறிய வசதியாக இருக்கலாம், ஆனால் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிஎன்ஜி மாடல்களை வழங்கி வரும் மாருதியிடம் இருந்து விடுபட்ட ஒன்று.
மழையை உணரும் வைப்பர்கள்
டாடா ஆல்ட்ரோஸ் , XZ மற்றும் அதற்கு மேல் உள்ள ஹையர் ஸ்பெக் கார் வேரியன்ட்கள், மழையை உணரக்கூடிய வைப்பர் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வருகின்றன. இந்த அம்சம் நிரம்பிய கார் வேரியன்ட்கள் புதிய சிஎன்ஜி ஆப்ஷனுடன் கிடைக்கும் என்பதால், போட்டியாளர்களைப் போலல்லாமல், ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி மட்டுமே அதன் பிரிவில் அதை வழங்குகிறது. இந்த அம்சம், பெயரில் குறிப்பிட்டிருப்பது போல, டிரைவரிடமிருந்து எந்த இன்புட்டும் இல்லாமல் மழை தொடங்கும் போது தானாகவே வைப்பர்களை இயக்குகிறது, மேலும் இது மாருதி மற்றும் டொயோட்டா-பேட்ஜ் போட்டியாளர்களில் இது வழங்கப்படாது.
க்ரூஸ் கன்ட்ரோல்
டாடா தனது ஹேட்ச்பேக்கை சிஎன்ஜி பவர்டிரெய்னுடன் வழங்குவதன் மூலம் கிடைக்கும் மற்றொரு நன்மை என்னவென்றால், ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி க்ரூஸ் கன்ட்ரோலுடன் வரும், இது நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கான பயனுள்ள அம்சமாகும். பலேனோ மற்றும் க்ளான்ஸாவும் இந்த அம்சத்தைக் கொண்டிருந்தாலும், எந்த மாடலும் அதன் சிஎன்ஜி வேரியன்ட்களில் இதைப் பெறவில்லை, ஏனெனில் இரண்டும் அவற்றின் நடுத்தர அளவு கார் வேரியன்ட்களில் மட்டுமே சிஎன்ஜி பவர்டிரெய்னை வழங்குகின்றன.
டாடா நான்கு வேரியன்ட்களில் சிஎன்ஜி ஆல்ட்ரோஸ் ஐ வழங்குகிறது: XE, XM+, XZ மற்றும் XZ+ S, மற்றும் இந்த கார் வேரியன்ட்களில் ஸ்டாண்டர்டு ஆல்ட்ரோஸ் ஐ விட சுமார் ஒரு லட்சம் ரூபாய் கூடுதல் பிரீமியம் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலைகள் ரூ.6.45 லட்சம் முதல் ரூ.10.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும்.
மேலும் படிக்கவும்: டாடா ஆல்ட்ரோஸ் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful