சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

Mahindra Thar Roxx மற்றும் Maruti Jimny மற்றும் Force Gurkha 5-door: ஆஃப் ரோடு திறன்கள் ஒப்பீடு

modified on ஆகஸ்ட் 16, 2024 07:05 pm by shreyash

கூர்க்காவை தவிர தார் ராக்ஸ் மற்றும் ஜிம்னி இரண்டுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வுடன் வருகின்றன.

நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பின்னர் மஹிந்திரா தார் ராக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காரில் கிடைக்கும் வசதிகள், பவர்டிரெயின் மற்றும் இதர விவரங்கள் வெளியாகியுள்ளன. தார் ராக்ஸ் ஒரு ஆஃப்ரோடராக இருப்பதால் மாருதி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் ஆகிய கார்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த மாடல்கள் ஒவ்வொன்றிலும் ஆஃப்ரோடு விவரங்களை இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.

காரின் ஆஃப் ரோடு திறன் விவரங்கள்

விவரங்கள்

மஹிந்திரா தார் ராக்ஸ்

மாருதி ஜிம்னி

ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர்

அப்ரோச் ஆங்கிள்

41.7 டிகிரி

36 டிகிரி

39 டிகிரி

டிபார்ச்சர் ஆங்கிள்

36.1 டிகிரி

46 டிகிரி

37 டிகிரி

பிரேக் ஓவர் ஆங்கிள்

23.9 டிகிரி

24 டிகிரி

28 டிகிரி

வாட்டர் வேடிங் கெபாசிட்டி

650 மி.மீ

விவரம் இல்லை

700 மி.மீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்

விவரம் இல்லை

210 மி.மீ

233 மி.மீ

  • இங்குள்ள அனைத்து ஆஃப்ரோடு எஸ்யூவி -களில் தார் ராக்ஸ் மிக உயர்ந்த அணுகுமுறைக் கோணத்தை ( அப்ரோச் ஆங்கிள் ) கொண்டுள்ளது. ஜிம்னி டிபார்ச்சர் ஆங்கிளையும் மற்றும் கூர்க்கா 5-டோர் அதிக பிரேக்ஓவர் ஆங்கிளையும் கொண்டுள்ளது.

  • கூர்க்கா 5-டோர் இங்கு அதிகபட்சமாக 700 மிமீ வாட்டர்-வேடிங் திறனை கொண்டுள்ளது. இது தார் ராக்ஸை விட 50 மி.மீ அதிகம். இருப்பினும் மாருதி ஜிம்னியின் சரியான வாட்டர்-வேடிங் திறன் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

  • கூர்க்கா 5-டோர் ஜிம்னியை விட 23 மி.மீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸை வழங்குகிறது. மஹிந்திரா தனது பெரிய தாருக்கான கிரவுண்ட் கிளியரன்ஸ் விவரங்களை வழங்கவில்லை.

  • இங்கு மாருதி ஜிம்னி மற்றும் தார் ராக்ஸ் இரண்டும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கேஸ் கண்ட்ரோல் லீவர்களை பெறுகின்றன (2H, 4H மற்றும் 4L மோடுகளுக்கு இடையில் மாற்றுவதற்கு). அதேசமயம் இங்குள்ள கூர்க்கா 5-டோர் ESOF (எலக்ட்ரானிக்-ஷிப்ட்-ஆன்-ஃப்ளை) எலக்ட்ரிக் டிரான்ஸ்ஃபர் கேஸ் கன்ட்ரோலை கொண்டுள்ளது.

மேலும் பார்க்க: 5 டோர் மஹிந்திரா தார் ராக்ஸ் மற்றும் மஹிந்திரா தார்: விவரங்கள் ஒப்பீடு

பவர்டிரெய்ன்

மஹிந்திரா தார் ராக்ஸ்

மாருதி ஜிம்னி

ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர்

இன்ஜின்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

2.2 லிட்டர் டீசல்

1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் (N/A) பெட்ரோல்

2.6 லிட்டர் டீசல்

பவர்

162 PS (MT)/177 PS (AT)

152 PS (MT)/ 175 PS வரை (AT)

105 PS

140 PS

டார்க்

330 Nm (MT)/380 Nm (AT)

330 Nm (MT)/ 370 Nm வரை (AT)

134 Nm

320 Nm

டிரைவ் வகை

RWD

RWD/ 4WD*

4WD

4WD

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT^

6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT

5-ஸ்பீடு MT, 4-ஸ்பீடு AT

5-ஸ்பீடு MT

*RWD: ரியர்-வீல்-டிரைவ் / 4WD - ஃபோர்-வீல்-டிரைவ்

^AT: டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

  • இந்த ஒப்பீட்டில் RWD மற்றும் 4WD டிரைவ் ட்ரெய்ன்களின் ஆப்ஷன்களுடன் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இரண்டையும் பெறும் ஒரே கார் தார் ராக்ஸ் மட்டுமே.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட பவர்டிரெய்னை பொருட்படுத்தாமல் பார்த்தால் தார் ராக்ஸ் இங்கு மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி ஆகும். அதே சமயம் பெட்ரோலை மட்டுமே வழங்கும் ஜிம்னி குறைந்த பவர் அவுட்புட்டை கொண்ட மிகச் சிறிய இன்ஜினை கொண்டுள்ளது.

  • தார் ராக்ஸ் -ன் டீசல் மேனுவல் வேரியன்டை பற்றி பார்க்கையில் இது கூர்க்கா 5-டோருடன் ஒப்பிடும்போது 35 PS பவரை கூடுதலாக கொடுக்கிறது. மற்றும் 50 Nm அதிக டார்க் அவுட்புட்டை வழங்குகிறது. தார் ராக்ஸ் டீசல் 6-ஸ்பீடு AT -ன் ஆப்ஷனையும் பெறுகிறது, அதே நேரத்தில் கூர்கா 5-டோர் காரில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும்.

  • தார் ராக்ஸ் -ன் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்டை பொறுத்தவரையில் இது ஜிம்னியின் பெட்ரோல் மேனுவல் வேரியன்டை விட 57 PS அதிக பவரையும் 196 Nm அளவுக்கு அதிக டார்க்கையும் கொடுக்கிறது. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களை ஒப்பிடும் போது இந்த வித்தியாசம் அதிகமாகிறது. தார் ராக்ஸ் ஜிம்னியை விட 72 PS அதிக பவரை கொண்டுள்ளது.

  • தார் ராக்ஸ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டரை பயன்படுத்துகிறது. அதேசமயம் ஜிம்னி 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

விலை ஒப்பீடு

மஹிந்திரா தார் ராக்ஸ் (அறிமுகம்)

மாருதி ஜிம்னி

ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர்

ரூ 12.99 முதல் ரூ 20.49 லட்சம் (RWD வகைகளுக்கு மட்டும்)

ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம்

ரூ.18 லட்சம்

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா -வுக்கானவை ஆகும்

மாருதி ஜிம்னி இங்கு மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் ஆஃப் ரோடு எஸ்யூவி ஆகும். அதே சமயம் தார் ராக்ஸ் காரின் ஹையர் ஸ்பெக் வேரியன்ட்கள் ரூ.20 லட்சத்தை தாண்டிவிட்டன. மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ்ஸின் 4WD டீசல் வேரியன்ட்களுக்கான விலை விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை. ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் ரூ.18 லட்சம் விலையில் ஒரே ஒரு புல்லி லோடட் டிரிமில் மட்டுமே கிடைக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மாருதி ஜிம்னி ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

shreyash

  • 77 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை