இரண்டே நாட்களில் 4600 மாருதி சுசுகி பலேனோ கார்கள் புக்கிங் ஆகியுள்ளன!
published on அக்டோபர் 29, 2015 03:27 pm by raunak for மாருதி பாலினோ 2015-2022
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமான மாருதி சுசுகியின் பலேனோ கார்கள் 4600 முன்பதிவை (புக்கிங்) இரண்டே நாட்களில் எட்டியுள்ள தகவலை மாருதி வெளியிட்டுள்ளது. முதலில் தங்களது புதிய நெக்ஸா அவுட்லெட் மூலம் எஸ் - க்ராஸ் கார்களைத் தான் மாருதி நிறுவனம் விற்பனை செய்யத்தொடங்கியது. ஆனால் அந்த கார் எதிர் பார்த்த அளவு வாடிக்கையாளரை கவரத் தவறியுள்ள நிலையில் இந்த புதிய பலேனோ கார்கள் ஏராளமான வாடிக்கையாளர்களை தங்களது புதிய நெக்ஸா அவுட்லெட்களுக்கு படை எடுக்க வைத்துள்ளது. முதல் தினத்தன்று தங்களது நாடு முழுக்க உள்ள 80 நெக்ஸா டீலர்ஷிப் மூலம் 600 கார்கள் புக்கிங் ஆகியுள்ளது என்றும் சுமார் 1500 வாடிக்கையாளர்கள் வந்து விசாரித்து சென்றிருப்பதாகவும் மாருதி தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் புக்கிங் ஆன கார்களின் எண்ணிக்கை 4, 600 என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதை நிச்சயம் தவற விட மாட்டீர்கள் - ஒப்பிடுங்கள் : மாருதி சுசுகி பலேனோ vs எளிட் i 20 vs ஜாஸ் vs போலோ vs புன்டோ ஈவோ
பலேனோ கார்கள் இந்தியாவில் மட்டும் தான் தயாராகின்றன. மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் 100 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் பிறப்பிடமான ஜப்பான் நாட்டிற்கு இங்கே இருந்து பலேனோ கார்கள் ஏற்றுமதியாகும் என்பது சுவாரசியமான செய்தி. மேலும் மாருதி சுசுகி நிறுவனம் இந்திய செயல்பாடுகளைத் தொடங்கி முப்பது ஆண்டுகளில் ஜப்பானுக்கு இந்தியாவில் தயாரித்து காரை ஏற்றுமதி செய்வது இதுவே முதல் முறை ஆகும். பலேனோ கார்களைக் கொண்டு தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்த பிரிவைச் சேர்ந்த எளிட் i20 கார்களை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதே மாருதி சுசுகியின் நோக்கமாகும். தற்போது மாதத்திற்கு பத்தாயிரம் எளிட் i20 கார்கள் விற்பனையாகின்றன. எளிட் i20 கார்களைத் தவிர ஹோண்டா ஜாஸ், வோல்க்ஸ்வேகன் போலோ மற்றும் பியட் புன்டோ ஈவோ கார்களுடனும் இந்த புதிய பலேனோ போட்டியிடும்.
போதும் போதும் எனும் அளவுக்கு சிறப்பம்சங்களை அடுக்கி உள்ளது தான் பலேனோ கார்கள் தற்போது பெற்றுள்ள ஆரம்ப நிலை வரவேற்பிற்கு காரணம் என்று எண்ண தோன்றுகிறது. இந்த பிரிவு கார்களிலும் இதற்கு அடுத்த செடான் பிரிவு கார்களில் கூட இல்லாத பல அம்சங்கள் இந்த பலேனோ கார்களில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ABS மற்றும் EBD யுடன் கூடிய முன்புற இரட்டை ஏயர் பேக் ( காற்று பைகள் ) இந்த பிரிவு கார்களில் முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை.
பரிந்துரைக்கப்படுகிறது :
0 out of 0 found this helpful