இன்டீரியர் விவரங்களுடன் வெளியானது 2024 Nissan X-Trail காரின் டீஸர், பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகிய வசதிகள் இருப்பது உறுதியாகியுள்ளது
published on ஜூலை 12, 2024 05:01 pm by samarth for நிசான் எக்ஸ்-டிர ையல்
- 70 Views
- ஒரு கருத்தை எழுதுக
சமீபத்தில் வெளியான டீஸர் ஃபிளாக்ஷிப் நிஸான் எஸ்யூவியில் ஆல் பிளாக் கேபின் தீம் இருப்பதை காட்டுகிறது. மேலும் இது இந்தியாவில் 3-வரிசை அமைப்பில் வழங்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
-
நிஸான் நிறுவனம் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு எக்ஸ்-டிரெயில் மோனிகரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரவுள்ளது.
-
எஸ்யூவி -யில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது 8-படி CVT ஆட்டோமெட்டிக் மற்றும் 12V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
உலகளவில் இது 2 வீல் டிரைவ் (2WD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) டிரைவ் டிரெய்ன் இரண்டிலும் கிடைக்கிறது.
-
2024 X-Trail எஸ்யூவி -யானது ஆனது இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம்.
நான்காவது தலைமுறை நிஸான் எக்ஸ்-டிரெயில் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜப்பானிய நிறுவனம் ஏற்கனவே ஃபிளாக்ஷிப் எஸ்யூவியின் டீஸர்களை வெளியிட தொடங்கியுள்ளது. அதன் சமீபத்திய டீசரில் நிஸான் எஸ்யூவி -யின் இன்ட்டீரியரை பற்றிய ஒரு பார்வையை காட்டியுள்ளது. அதே நேரத்தில் புதிய எக்ஸ்-டிரெயிலில் இருக்கும் சில பிரீமியம் வசதிகளையும் காட்டுகிறது. சுவாரஸ்யமாக ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ‘எக்ஸ்-டிரெயில்’ என்ற பெயரை கொண்ட கார் இந்தியாவில் மீண்டும் வரவுள்ளது. இந்த முழு அளவிலான எஸ்யூவி -யின் டீஸரிலிருந்து நமக்கு தெரிந்த விவரங்கள் இங்கே:
நிஸான் இந்தியா (@nissan_india) ஷேர் செய்த ஒரு பதிவு
என்ன தெரிய வருகிறது?
டீசரின் மிகப்பெரிய சிறப்பம்சங்கள் ஃபுளோட்டிங் டைப் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (இரண்டும் 12.3-இன்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது). எஸ்யூவி ஆனது 2-டோன் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் கேபின் தீமை கொண்டிருக்கும் என்பதையும் நாம் கவனிக்கலாம்.
வரவிருக்கும் நிஸான் ஃபிளாக்ஷிப் எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃப் இருப்பதையும் டீஸர் காட்டுகிறது. ஸ்டோரேஜ் உடன் கூடிய ஸ்பிளிட் டைப் ஓப்பனிங் ஆர்ம்ரெஸ்ட், டிரைவ் மோட் பட்டன், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், கப் ஹோல்டர்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் கியர் லீவர் (அநேகமாக 8-ஸ்டெப் CVT ஆட்டோமெட்டிக் இருக்கலாம்). டீசரில் காட்டப்பட்டுள்ளபடி புதிய நிஸான் எக்ஸ்-டிரெயில் இந்தியாவில் 3-வரிசை அமைப்பில் வழங்கப்படும்.
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் தவிர இது 10-ஸ்பீக்கர் பிரீமியம் போஸ் மியூசிக் சிஸ்டம், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் மெமரி ஃபங்ஷனுடன் கூடிய கூடிய ஹீட்டட் மற்றும் பவர்டு முன் இருக்கைகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் ஃபிரன்ட் கொலிஷன் வார்னிங் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெய்ன்
நிஸான் வரவிருக்கும் 2024 இந்தியா-ஸ்பெக் எக்ஸ்-டிரெயில் பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை. உலகளாவிய சந்தையில் கிடைக்கும் காரின் விவரங்கள் இங்கே.
பவர்டிரெயின்கள் |
இ-பவர் (ஹைபிரிட்) |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
|
டிரைவ்டிரெய்ன் |
2WD |
AWD |
2WD |
பவர் |
204 PS |
213 PS |
163 PS |
டார்க் |
300 Nm |
525 Nm வரை |
300 Nm |
அதிகபட்ச வேகம் |
மணிக்கு 170 கி.மீ |
மணிக்கு 180 கி.மீ |
மணிக்கு 200 கி.மீ |
மணிக்கு 0-100 கி.மீ |
8 வினாடிகள் |
7 வினாடிகள் |
9.6 வினாடிகள் |
மேலும் படிக்க: 2024 ஜூலை மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் அனைத்து கார்களின் விவரங்கள்
நிஸான் எஸ்யூவி சர்வதேச சந்தைகளில் 2 வீல் டிரைவ் (2WD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷனை கொண்டுள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
நிஸான் மூன்று வரிசை X-Trail எஸ்யூவி -யை இந்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம். இது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், ஸ்கோடா கோடியாக், மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுடன் போட்டியிடலாம்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
0 out of 0 found this helpful