• English
  • Login / Register

விலை குறைவான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களுடன் 2024 Kia Seltos அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

published on ஏப்ரல் 01, 2024 07:19 pm by anonymous for க்யா Seltos

  • 79 Views
  • ஒரு கருத்தை எழுதுக

செல்டோஸிற்கான வசதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. லோவர் வேரியன்ட்கள் இப்போது அதிக வசதிகள் மற்றும் கலர் ஆப்ஷன்களை பெறுகின்றன.

Kia Seltos new variants launched

  • MY2024 கியா செல்டோஸில் பல அப்டேட்கள் உள்ளன. ஆனால் புதிய வசதிகள் எதுவும் இல்லை.

  • ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இப்போது HTK பிளஸ் வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விலை ரூ. 1.3 லட்சம் குறைவாக கிடைக்கிறது.

  • என்ட்ரி லெவல் HTE வேரியன்ட்களில் அதிக கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  • ஹையர் வேரியன்ட்களில் இருந்து HTK மற்றும் HTK பிளஸ் வேரியன்ட்களில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கியா செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பதிப்பு ஜூலை 2023 -ல் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் இப்போது மார்க்கெட் ஃபீட்பேக்கு -களை பின்பற்றி  2024 ஆம் ஆண்டிற்கான மாடல் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய மாற்றம் என்னவென்றால் மிட்-ஸ்பெக் HTK பிளஸ் வேரியன்ட்டுக்கு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே இப்போது விலை ஒரு லட்சத்துக்கும் கூடுதலாக விலை குறைவாக கிடைக்கும். குறைவாக. கூடுதலாக கியா செல்டோஸிற்கான வசதிகள் மற்றும் கலர் ஆப்ஷன்களையும் மாற்றியைத்துள்ளது. ஆகவே இது முன்பை விட மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைகிறது.

2024 கியா செல்டோஸ்: புதிய ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள்

முன்னதாக செல்டோஸிற்கான ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் HTX வேரியன்ட்டிலிருந்து வழங்கப்பட்டது. கியாவின் கூற்றுப்படி செல்டோஸ் காம்பாக்ட் எஸ்யூவி -க்கான மிகவும் பிரபலமான வேரியன்ட் HTK பிளஸ் ஆகும், இது பெட்ரோல்-மேனுவல் டீசல் மேனுவல் டீசல்-iMT மற்றும் டர்போ-பெட்ரோல் iMT பவர்டிரெய்ன்களுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

கியா இப்போது 1.5 லிட்டர் பெட்ரோல்-CVT மற்றும் 1.5 லிட்டர் டீசல்-AT பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை லோவர்-ஸ்பெக் HTK பிளஸ் டிரிமில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு HTK வேரியன்ட்டிலிருந்து மட்டுமே கிடைத்தது. இதன் விளைவாக செல்டோஸில் உள்ள ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் இப்போது 1.3 லட்சம் வரை குறைவாக விலையில் உள்ளது. இந்த அப்டேட் செல்டோஸின் அதிகம் விற்பனையாகும் வேரியன்ட் மீதுள்ள ஆர்வம் மேலும் அதிகரிக்கும்.

புதிய வேரியன்ட் விலை விவரங்களை இங்கே பார்க்கலாம்:

இன்ஜின் ஆப்ஷன்

HTX

HTK பிளஸ்

வித்தியாசம்

1.5 லிட்டர் பெட்ரோல் CVT

ரூ.16.72 லட்சம்

ரூ.15.42 லட்சம்

ரூ.1.3 லட்சம்

1.5 லிட்டர் டீசல் AT

ரூ.18.22 லட்சம்

ரூ.16.92 லட்சம்

ரூ.1.3 லட்சம்

2024 கியா செல்டோஸ்: மாற்றியமைக்கப்பட்ட வசதிகள்

கியா செல்டோஸின் வசதிகளின் தொகுப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வேரியன்ட் வசதிகள் இப்போது மிட்-ஸ்பெக் வேரியன்ட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படுகின்றன. HTK மற்றும் HTK பிளஸ் வேரியன்ட்களே அதிக எண்ணிக்கையிலான சேர்த்தல்களைப் பெறுகின்றன. இந்த மாற்றங்களின் அனைத்து விவரங்களையும் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்:

வேரியன்ட்கள்

புதிய வசதிகள் அறிமுகம்

HTK

  • LED DRLகள்

  • புஷ் பட்டன் ஸ்டார்ட் வித் கீலெஸ் என்ட்ரி

  • ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப்

  • கனெக்டட் LED டெயில் லைட்ஸ்

HTK+

  • LED ஃபாக் லைட்ஸ்

  • LED ரீடிங் லைட்ஸ்

  • டிரைவ் / டிராக்‌ஷன் மோட்கள் (AT மட்டும்)

  • பேடில் ஷிஃப்டர்கள் (AT மட்டும்)

  • பனோரமிக் சன்ரூஃப்

HTX முதல்

  • ஆட்டோ அப் / டவுன் செயல்பாட்டுடன் நான்கு பவர் விண்டோக்களும்

Kia Seltos panoramic sunroof

HTK பிளஸ் ஏற்கனவே பனோரமிக் சன்ரூஃப் மற்றும் LED கேபின் விளக்குகளின் ஆப்ஷன்களை பெற்றிருந்தாலும் அவை முன்பு டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தன. இந்த மாற்றங்கள் கியா செல்டோஸிற்கான புதிய மற்றும் மாற்றியமைக்கப்பட்ட விலை ஆகியவை முக்கியமான விஷயங்கள் உள்ளன.

தொடர்புடையது: 2023 கியா செல்டோஸ் விமர்சனம்: பெஞ்ச்மார்க்கை அமைக்கவா?

2024 கியா செல்டோஸ்: மாற்றியமைக்கப்பட்ட கலர் ஆப்ஷன்கள்

முன்னதாக கியா செல்டோஸின் பேஸ் வேரியன்ட் இரண்டு வண்ணங்களுடன் வழங்கப்பட்டது: ஸ்பார்க்லிங் சில்வர் மற்றும் கிளியர் ஒயிட். அதை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் முயற்சியில் அடிப்படை HTE மற்றும் மிட்-ஸ்பெக் HTK பிளஸ் வேரியன்ட்கள் இப்போது செல்டோஸ் கலர் ஆப்ஷன்களை பெறுகின்றன அவற்றின் விவரங்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்:

வேரியன்ட்கள்

புதிய நிறங்கள்

HTE

  • அரோரா பிளாக் பேர்ல்

  • கிராவிட்டி கிரே

  • டார்க் ரெட்

  • பியூட்டர் ஆலிவ்

  • இம்பீரியல் ப்ளூ

HTK+

  • அரோரா பிளாக் பேர்ல்

2024 கியா செல்டோஸ்: போட்டியாளர்கள்

Kia Seltos rear

இந்த அப்டேட்கள் கியா செல்டோஸ் தொகுப்பின் மேலே உள்ள ஒட்டுமொத்த ஆர்வத்தை அதிகப்படுதுகின்றது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காம்பாக்ட் எஸ்யூவி பற்றிய எங்கள் நிறைய விவரங்களை நீங்கள் எங்கள் ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். 2024 கியா செல்டோஸ் காருக்கு போட்டியாளர்களாக ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா,ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்கள் இருக்கின்றன.

மேலும் படிக்க: கியா செல்டோஸ் டீசல்

was this article helpful ?

Write your Comment on Kia Seltos

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience