,2024 கியா கார்னிவல் மற்றும் பழைய கார்னிவல்: இரண்டுக்கும் இடையே உள்ள மாற்றங்கள்
published on அக்டோபர் 04, 2024 07:18 pm by ansh for க்யா கார்னிவல்
- 98 Views
- ஒரு கருத்தை எழுதுக
பழைய பதிப்புடன் ஒப்பிடுகையில் புதிய கார்னிவல் மிகவும் நவீன வடிவமைப்பு, பிரீமியம் உட்புறம் மற்றும் பல விஷயங்களை கொண்டுள்ளது.
2024 கியா கார்னிவல் ரூ.63.90 லட்சத்தில் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வெளியிடப்பட்டது. கடந்த வருடம் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட பின்னர் ஒரு வருடத்திற்குப் பிறகு இப்போது ஃபேஸ்லிஃப்டட் நான்காம் தலைமுறை காராக இந்திய சந்தைக்கு திரும்பியுள்ளது. ஜூலை 2023 வரை இந்தியாவில் விற்பனையில் இருந்த முந்தைய இரண்டாம் தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது புதிய தலைமுறை கார்னிவல் மிகவும் நவீன வடிவமைப்பு, அதிக பிரீமியம் தோற்றமுடைய கேபின் மற்றும் பல புதிய விஷயங்களை கொண்டுள்ளது. புதிய கார்னிவலை பழைய காருடன் ஒப்பிடும்போது எவ்வளவு வித்தியாசமானது என்பதை இங்கே பார்ப்போம்.
வடிவமைப்பு
கார்னிவலின் வடிவமைப்பு நிறைய வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் முன்பக்கத்தின் முக்கிய மாற்றம் என்னவென்றால், கடந்த இரண்டு தலைமுறைகளாக அது வளைவான தோற்றத்தில் இருந்து பாக்ஸியாக மாறியுள்ளது. நான்காவது தலைமுறை கார்னிவல் ஒரு ஸ்கொயர்-ஆஃப் முன்பக்கத்தை கொண்டுள்ளது. இது ஒரு பெரிய கிரில், வெர்டிகலான 4-பீஸ் LED ஹெட்லேம்ப்கள், ஒரு ஸ்லீக்கர் பம்பர் மற்றும் L-வடிவ எலமென்ட்களை கொண்ட LED DRL -கள் கிரில்லின் மையப்பகுதி வரை உள்ளது.
பக்கவாட்டில் இருந்து பார்த்தால் ஒட்டுமொத்த தோற்றமும் ஒரே மாதிரியே தெரிகிறது. ஆனால் A-பில்லர் இப்போது மிகவும் ரேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் 3வது வரிசை ஜன்னலும் பெரிதாக உள்ளது. சக்கரத்தின் அளவு இப்போதும் 18-இன்ச் ஆக உள்ளது. புதிய மாடல் சமீபத்திய வடிவமைப்புடன் செல்ல இப்போது மேலும் ஸ்டைலான அலாய்களை பெறுகிறது.
மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பின்னால் உள்ளது. நான்காவது தலைமுறையானது ஒரு பெரிய பம்பருடன் அதிக மஸ்குலர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் L-வடிவ லைட்டிங் எலமென்ட்களுடன் கனெக்டட் LED டெயில் லேம்ப் செட்டப்பை பெறுகிறது.
இன்ட்டீரியர்
கடந்த இரண்டு தலைமுறைகளில் கார்னிவல் கேபினில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரண்டுமே டூயல்-டோன் கேபினை கொண்டிருந்தாலும், புதியது பிளாக் மற்றும் பிரவுன் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டாஷ்போர்டு ஆல் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இருக்கைகள் பிரெளவுன் கலர் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியில் கவர் செய்யப்பட்டிருக்கும்.
கேபின் தளவமைப்பு மிகவும் மினிமலிஸ்டிக் ஆக உள்ளது. தட்டையான டாஷ்போர்டு மற்றும் அதன் அகலம் முழுமைக்கும் உள்ள ஆம்பியன்ட் லைட்டிங் ஸ்ட்ரிப். இது இரண்டாம் தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேபின் டிரைவரை மையமாகக் கொண்டது. ஸ்கிரீன்கள் மற்றும் ஏசி கன்ட்ரோல் இரண்டும் டிரைவரை நோக்கி உள்ளன.
மேலும் பார்க்க: இந்த விரிவான கேலரியில் புதிய கியா EV9 -யை பார்க்கலாம்
கேபினில் மிக முக்கியமான மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை கார்னிவல் பல இருக்கை தளவமைப்புகளில் கிடைத்தாலும் தற்போது 7 சீட் செட்டப்பில் மட்டுமே கிடைக்கும், இரண்டாவது வரிசையில் கேப்டன் சீட்கள் மற்றும் மூன்றாவது இடத்தில் ஒரு பெஞ்ச் சீட் உள்ளது.
வசதிகள்
நான்காம் தலைமுறை கார்னிவல் இந்தியாவில் விற்பனையில் இருந்த கடைசி பதிப்பை விட நிறைய புதிய வசதிகளுடன் வருகிறது. இது டூயல்-இன்டெகிரேட்டட் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே), 11-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, லும்பார் சப்போர்ட் உடன் 12-வே பவர்டு டிரைவர் சீட் மற்றும் 8-வே பவர்டு முன் பயணிகள் சீட் ஆகியவற்றுடன் வருகிறது..
இது ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட், டூயல் சிங்கிள்-பேன் சன்ரூஃப்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 12-ஸ்பீக்கர் BOSE சவுண்ட் சிஸ்டம் மற்றும் 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் பவர்டு இரண்டாவது வரிசை இருக்கைளுடன் வருகிறது.
பாதுகாப்புக்காக இது 8 ஏர்பேக்குகள், 4 டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளுடன் வருகிறது.
இரண்டாம் தலைமுறை கார்னிவல் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3-ஜோன் கிளைமேட கன்ட்ரோல், இரண்டு சிங்கிள்-பேன் சன்ரூஃப்கள், வென்டிலேட்டட் டிரைவர் சீட், 10-வே பவர்டு டிரைவர் சீட், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஒரு பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன.
பவர்டிரெய்ன்
அளவுகள் |
இரண்டாம் தலைமுறை கார்னிவல் |
நான்காம் தலைமுறை கார்னிவல் |
இன்ஜின் |
2.2 லிட்டர் டீசல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
200 PS |
193 PS |
டார்க் |
440 Nm |
441 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு AT |
8-ஸ்பீடு AT |
கியா நான்காவது தலைமுறை கார்னிவலை பழைய பதிப்பைப் போலவே 2.2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. ஆனால் புதிய கார்னிவலின் இன்ஜின் சற்றே குறைவான பவர் அவுட்புட்டை கொண்டுள்ளது. டார்க் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகியவை அப்படியே உள்ளன.
விலை & போட்டியாளர்கள்
கியா புதிய கார்னிவலின் விலையை ரூ. 63.90 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இரண்டாம் தலைமுறை மாடலின் கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை ரூ. 30.99 லட்சமாகவும் இருந்தது. அதன் விலை புள்ளியில் இருந்து பார்க்கும் போது இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகியவற்றுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும். மேலும் டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்ஸஸ் எல்எம் ஆகியவற்றுக்கு விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்.
விலை விவரங்கள் அனைத்தும், எக்ஸ்-ஷோரூம்-வுக்கானவை ( பான்-இந்தியா )
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: கியா கார்னிவல் டீசல்