1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை நெருங்கும் 2024 Hyundai Creta கார்
published on ஜூலை 03, 2024 07:58 pm by ansh for ஹூண்டாய் கிரெட்டா
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
அப்டேட்டட் கிரெட்டா எஸ்யூவி 2024 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட கேபின் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டா அறிமுகமானது. இப்போது அது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 90,000 யூனிட்கள் என்ற விற்பனையை தாண்டியுள்ளது. 6 மாதங்களுக்குள், 91,348 காம்பாக்ட் எஸ்யூவி -கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம். ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டாவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
இன்ஜின் |
1.5 லிட்டர் பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
115 PS |
116 PS |
160 PS |
டார்க் |
144 Nm |
250 Nm |
253 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6MT, CVT |
6MT, 6AT |
7DCT |
1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஃபிரீ-பேஸ்லிஃப்ட் மாடலில் இருந்தவையாகும். அவை முன்பு இருந்த அதே அவுட்புட்டை கொண்டுள்ளன. இவை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கின்றன.
இருப்பினும் கியா நிறுவனம் புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை புதிதாக சேர்த்துள்ளார், இது அதன் பிரிவில் அதிக பவர் மற்றும் டார்க் அவுட்புட்டை கொடுக்கக்கூடியதாகும். இந்த இன்ஜின் பிரிவில் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டாவில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளது.
மேலும் பார்க்க: Hyundai Creta EV காரின் இன்ட்டீரியர் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது, இந்த முறை டூயல் ஸ்கிரீனை பார்க்க முடிகிறது
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) போன்ற லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
விலை & போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டாவின் விலையை ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.20.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. நீங்கள் ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய கிரெட்டாவை விரும்பினால் நீங்கள் ஹூண்டாய் கிரெட்டா N லைன் காரை பார்க்கலாம்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்களுக்கு கார்தேகோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful