சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 Hyundai Creta -வின் EX வேரியன்ட் 5 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

published on ஜனவரி 22, 2024 06:01 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் ஒன்-அபோவ்-பேஸ் EX வேரியன்ட் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா சமீபத்தில் புதிய அப்டேட்டை பெற்றது. இது காருக்கு ஒரு புதிய தோற்றத்தை மட்டும் கொடுக்கவில்லை, புதிய அம்சங்களையும் சேர்க்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்டை 7 வேரியன்ட்களில் வழங்குகிறது: E, EX, S, S(O), SX, SX டெக், மற்றும் SX(O). இந்தக் கட்டுரையில், 5 படங்களில் அப்டேட்டட் காம்பாக்ட் எஸ்யூவி -யின் ஒன்-அபோவ்-பேஸ் EX வேரியன்ட் பற்றிய விரிவான தகவல்களை நாங்கள் வழங்குகியுள்ளோம்.

முன்பக்கத்தில், 2024 ஹூண்டாய் கிரெட்டா EX வேரியன்ட் இன்வெர்டட் L-வடிவ LED DRLகள், ஒரு செவ்வக கிரில் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும், கனெக்டட் DRL -கள் இல்லை மற்றும் LED -களுக்குப் பதிலாக ஹாலோஜன் ஹெட்லைட்கள் ஆகியவை அதன் ஹையர்-ஸ்பெக் மாடல்களில் இருந்து இதை வேறுபடுத்தி காட்டுகின்றது. மேலும், DRL செட்டப்பில் இன்டெகிரேட்ட டர்ன் இன்டிகேட்டர்கள் செயல்பாடு கிடையாது.

பக்கத்திலிருந்து பார்க்கும்போது, ​​இந்த EX வேரியன்ட் மற்றும் ஹையர்-ஸ்பெக் மாடல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் மிகவும் தெளிவாகத் தெரியும். EX வேரியன்ட் 16-இன்ச் ஸ்டீல் வீல்களுடன் வீல் கவர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் சைடு இன்டிகேட்டர்கள் ORVM -களுக்கு பதிலாக பக்கவாட்டு ஃபெண்டரில் உள்ளன. இருப்பினும், கிரெட்டா EX ஆனது அதன் பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட்டுடன் கிடைக்காத சைடு கார்னிஷை பெறுகிறது.

இதையும் பார்க்கவும்: புதிய ஹூண்டாய் Hyundai Creta E Base வேரியன்ட்டை பற்றிய விவரங்களை 5 படங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்

பின்புறத்தில், கிரெட்டா EX ஆனது அடுத்த வேரியன்ட்டிலிருந்து வழங்கப்படும் LED டெயில் லைட்களை கொண்டிருக்கவில்லை. இருப்பினும், அதன் பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட் போலல்லாமல், கிரெட்டாவின் இந்த EX வேரியன்ட் ஒரு ஷார்க்-ஃபின் ஆண்டெனாவை பெறுகிறது. உயர் பொருத்தப்பட்ட LED ஸ்டாப் லைட் மற்றும் பின்புற பம்பரில் இன்டெகிரேட்டட் ஆக உள்ள சில்வர் ஸ்கிட் பிளேட் போன்ற பிற விவரங்கள் கிரெட்டாவின் மற்ற டிரிம்களை போலவே உள்ளன.

உட்புறத்தில், ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் ஒன்-அபோவ்-பேஸ் EX வேரியன்ட் சிறிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுகிறது, இது வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயை சப்போர்ட் செய்கின்றது, இது பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. லோவர்-ஸ்பெக் மாடல் என்பதால், இது ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உடன் வரவில்லை.

ஹூண்டாய் வென்யூ மற்றும் ஹூண்டாய் வெர்னாவில் காணப்படுவது போல, இந்த வேரியன்ட்டின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஒரு செமி-டிஜிட்டல் யூனிட் ஆக உள்ளது, அதே சமயம் டாப் வேரியன்ட் 10.25-இன்ச் முழு டிஜிட்டல் க்ளஸ்டரை கொண்டுள்ளது.

கிரெட்டா EX -ல் உள்ள மற்ற அம்சங்களில் நான்கு பவர் விண்டோஸ், உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுனர் இருக்கை, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் ஸ்டீயரிங் -கில் பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் கன்ட்ரோல்கள் ஆகியவை அடங்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறுகிறது. 2024 கிரெட்டாவின் இந்த வேரியன்ட் இன்னும் ரியர் வியூ கேமராவை பெறவில்லை.

இதையும் பார்க்கவும்: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டாவின் ஒவ்வொரு வேரியன்ட் கார்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

இன்ஜின் ஆப்ஷன்கள்

கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் EX வேரியன்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் (115 PS / 144 Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் யூனிட் (116 PS / 250 Nm), இவை இரண்டும் 6-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்மிஷன் மட்டுமே. பெட்ரோலுடன் CVT ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் யூனிட்டுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவை கிரெட்டாவின் மிட்-ஸ்பெக் S(O) வேரியன்ட்டிலிருந்து கிடைக்கின்றன.

2024 கிரெட்டாவின் டாப்-ஸ்பெக் SX(O) வேரியன்ட் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) மட்டும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெறுகிறது.

விலை போட்டியாளர்கள்

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா EX விலை ரூ. 12.18 லட்சத்தில் இருந்து ரூ. 13.68 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ்.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

shreyash

  • 49 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை