சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2020 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விலை ரூபாய் 57.06 லட்சத்திலிருந்து தொடங்குகின்றன

புதிய லேண்ட் ரோவர் எஸ்யூவியின் மிகப்பெரிய மாற்றங்கள் முன்பக்க கதவின் கீழும், காரின் உட்புற அமைவிலும் காணப்படுகின்றன

  • தற்போது ஜேஎல்ஆர் டீசல் வகை கார்களின் விலைகளை மட்டுமே வெளியிட்டுள்ளது.

  • தயாரிப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றன: எஸ் மற்றும் ஆர்-டைனமிக் எஸ்இ

  • 2.0-லிட்டர் டீசல் இயந்திரம் 180பி‌எஸ் / 430என்‌எம் ஐ உற்பத்தி செய்கிறது.

  • லேசான கலப்பின அமைப்புடன் கூடிய 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் 249பி‌எஸ் / 365என்‌எம் ஐ உருவாக்குகிறது.

  • 9-வேகத் தானியங்கி பற்சக்கர பெட்டி, அதன் வரம்பில் நிலையானதாக இருக்கும்.

  • போட்டிகளில் பிஎம்டபிள்யூ எக்ஸ்3, ஆடி கியூ5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மற்றும் வோல்வோ எக்ஸ்சி60 ஆகியவை அடங்கும்.

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான லேண்ட் ரோவர் புதிய 2020 டிஸ்கவர் ஸ்போர்ட்டை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடைய விலை ரூபாய் 57.06 லட்சம் முதல் ரூபாய் 60.89 லட்சம் வரை இருக்கும் (இரண்டும் எக்ஸ்-ஷோரூம் இந்தியா) மற்றும் முன்பக்க கதவின் கீழ் இருக்கின்ற இரண்டு புதிய பிஎஸ்6 இயந்திரங்களும், உட்புற அமைவிலுள்ள புதிய திரைகளும் இதில் காணப்படும் மிகப்பெரிய மாற்றங்களாகும்.

நாம் இயந்திரத்திலிருந்து தொடங்கலாம், முதலாவதாக 2.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மோட்டார் 48வி லேசான-கலப்பின அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் 249பி‌எஸ் ஆற்றல் மற்றும் 365என்‌எம் முறுக்குதிறன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 180பி‌எஸ் ஆற்றல் மற்றும் 430என்‌எம் முறுக்குத் திறனைத் தயாரிக்கின்ற 2.0-லிட்டர் டீசல் வகையும் இதில் உள்ளது. இரண்டு இயந்திரங்களும் 9-வேகத் தானியங்கி முறை பற்சக்கர பெட்டியுடன் மட்டுப்படுத்தப்படும். மேலே கொடுக்கப்பட்ட விலை டீசல் வகைகளுக்கு (எஸ் மற்றும் ஆர்-டைனமிக் எஸ்இ) மட்டுமே, ஏனெனில் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஏப்ரல் 2020 க்குள் பெட்ரோல் வகைகளுக்கான விலைகளை வெளியிடும்.

முன்பு போலவே, டிஸ்கவரி ஸ்போர்ட் லேண்ட் ரோவரின் ‘டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் 2' திட்டத்துடன் ஆல் வீல் டிரைவ் அமைப்பையும் பெறுகிறது. டிஸ்கவரி ஸ்போர்ட்டில் தண்ணீரில் செல்லக்கூடிய சிறப்பம்சம் உள்ளதா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அதற்கான பதிலை கேட்டால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். டிஸ்கவரி ஸ்போர்ட் மூலம் 600 மிமீ வரை நீரில் வசதியாக செல்ல முடியும்.

முந்தைய தலைமுறை டிஸ்கவரி ஸ்போர்ட்டை காட்டிலும் இதனுடைய வடிவமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் கிடையாது, எனினும், புதிய முகப்பு விளக்குகள், மாற்றம் செய்யப்பட்ட முன்பக்க பாதுகாப்பு சட்டகம், மோதுகைத் தாங்கிகளுக்கான வெவ்வேறு வடிவமைப்புகள் மற்றும் இதன் விளக்குகளுக்கான அனைத்து புதிய எல்இடி அமைப்பு ஆகியவற்றை பெறுகிறது. இதனால் டிஸ்கவரி ஸ்போர்ட் தற்போது முன்பை காட்டிலும் சிறந்ததாக உள்ளது.

உட்புற அமைப்பும் முன்பு இருந்ததை போன்றே உள்ளது, ஆனால் சிறிது மாற்றம் பெற்றுள்ளது. உட்புறத்தில் புதிய வித அனைத்து-டிஜிட்டல் கருவித் தொகுப்பு அமைப்பு மற்றும் முகப்பு பெட்டியின் நடுவில் புதிய 10.25-அங்குல தொடுதிரை இவையெல்லாம் இல்லை என்றால், உட்புற அமைவு முந்தைய மாதிரிக்கு ஒத்ததாக இருக்கும்.

முன்பக்க சிறப்பம்சங்களை பொறுத்தவரை, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கி முறை ஆதரவு, கம்பியில்லா மின்னேற்றம், 4ஜி வைஃபை ஹாட்ஸ்பாட், யூஎஸ்பி மின்னேற்றம் மற்றும் ஒவ்வொரு வரிசையிலும் 12 வோல்ட் புள்ளிகள், முன்பக்க இருக்கைகளுக்கான மசாஜ் விருப்பம், மின் முறையிலான பின்பக்க கதவுகள், 11-ஒலிப்பெருக்கி உடைய மெரிடியன் ஒலி அமைப்பு, ஐஆர்விஎம்லிருந்து திரை வரை திரும்பும் கிளியர்சைட் கேமரா மற்றும் வேகக் கட்டுப்பாடு போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியச் சந்தையில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, ஆடி க்யூ5 மற்றும் வோல்வோ எக்ஸ்சி60 போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கின்றது.

மேலும் படிக்க: டிஸ்கவரி தானியங்கி

d
வெளியிட்டவர்

dhruv

  • 27 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது Land Rover டிஸ்கவரி Sport 2015-2020

கம்மெண்ட்டை இட
2 கருத்துகள்
j
jia
Feb 13, 2020, 10:20:36 PM

nice car...

k
kia
Feb 13, 2020, 10:02:22 PM

nice information

Read Full News

explore மேலும் on லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் 2015-2020

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை