இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக, 2016 ஸ்கோடா சூப்பர்ப் டீஸர் வெளியிடப்பட்டது
published on பிப்ரவரி 03, 2016 06:01 pm by அபிஜித் for ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கோடாவின் முன்னணி காரான சூப்பர்ப்-ன் 2016 ஆம் ஆண்டு பதிப்பின் டீஸரை, அந்த தயாரிப்பாளரின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பாளர், சமீபத்தில் நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ள போவதில்லை. 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இந்த ஆடம்பர சேடன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இதற்கு ரூ.25 லட்சத்திற்கும் கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. டொயோட்டா காம்ரி மற்றும் வோல்க்ஸ்வேகன் பாஸ்அப் காரின் அடுத்த தலைமுறை (ஸ்கோடாவின் பராமரிப்பு நிறுவனம்) போன்ற கார்களுக்கு எதிராக இந்த கார் போட்டியிட உள்ளது.
இந்த காரின் உள்புறம் மற்றும் வெளிபுறம் ஆகிய இரண்டிலும், அழகியலில் மேம்பாடுகளை பெற்றுள்ளது. இப்போதைக்கு இன்டர்நெட்டில் உலவி வரும் படங்களை பார்க்கும் போது, காரின் மேற்புறத்தில் தடிமனான வரிகள் செல்வதை எளிதாக கண்டறிய முடிகிறது. தற்போதைய காருடன் ஒப்பிடும் போது, 2016 ஸ்கோடா சூப்பர்ப் அதிக தடித்த அமைப்பை கொண்டுள்ளது. ஆனால் குறியீட்டு கிரில் போன்ற காரியங்களில், அதனுடன் ஒத்துப் போகிறது. இதில் உள்ள கூர்மையான ஹெட்லெம்ப்களில், LED பிரஜெக்டர்களுடன் கூடிய புதிய DRL செட்அப்-பை பெறுகிறது. அதே நேரத்தில் டெயில்லெம்ப்களில் கூட இந்த கூர்மையான தீம்மை மனதில் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
இந்த காரின் உட்புறத்தில் ஒரு குறைந்தபட்ச டிசைன் அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது உள்ள சூப்பர்ப் காரை எடுத்து கொண்டால், விபரங்கள் மற்றும் தரம் ஆகியவற்றில் போட்டியிடும் வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டு, அது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை ஆதரிப்பதாக உள்ளது. இதில் உள்ள மியூசிக் சிஸ்டம் 12 ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே இதமான நிலையை உறுதி செய்யும் வகையில், 3 விதமான கிளைமேட் கன்ட்ரோல் நிலைகளை பெற்றுள்ளது.
என்ஜின்களை குறித்து பார்க்கும் போது, இந்த சூப்பர்ப் காரில் அதே 2.0-லிட்டர் TDI டீசல் மோட்டாரையே மீண்டும் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள என்ஜின் மூலம் 140 PS மற்றும் 320 Nm கிடைக்கும் நிலையில், இதை போல இல்லாமல், அதன்மூலம் 190 PS ஆற்றலையும், 400 Nm முடுக்குவிசையையும் வெளியிடாக பெற வாய்ப்புள்ளது. பெட்ரோல் மோட்டாரில் கூட, அதே 1.8-லிட்டர் TSI-யை கொண்டு, ஒரு 20PS-யை சேர்த்து, 180 PS ஆற்றலையும், 250 Nm முடுக்குவிசையை வெளியிடலாம்.