2016 ஹூண்டாய் எலைட் i20: ரூ.5.36 லட்சத்தில் அறிமுகம்
manish ஆல் பிப்ரவரி 01, 2016 02:24 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
ரூ.5.36 லட்சம் விலை நிர்ணயத்தில் தனது பிரிமியம் ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் எலைட் i20-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட காரில் குறைந்த அளவிலான மாற்றங்களையே கொண்டுள்ளது. கொரியன் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த புதுப்பிக்கும் நடவடிக்கையின் மூலம் அதன் சக்திவாய்ந்த போட்டியாளரான பெலினோவிற்கு எதிரான கடும் போட்டியை உண்டாக்கும் வகையில், தனது தயாரிப்பை தயார்ப்படுத்துவதே இதன் முக்கிய இலக்கு ஆகும்.
அடுத்து நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில், இந்த 2016 ஹூண்டாய் எலைட் i20-யும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதன்மூலம் தரம் உயர்த்தப்பட்ட இந்த எலைட் i20 உடன், இதன் உறவு முறையில் அமைந்த ஹூண்டாய் எலைட் i20 N ஹாட்-ஹேட்ச்-சும் எக்ஸ்போவில் சேர்ந்து கொள்கிறது. மாருதி தரப்பிலான பிரிமியம் ஹேட்ச்பேக்கின் அறிமுகத்திற்கு பிறகு, அதற்கு 70,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (புக்கிங்) கிடைத்ததால், எலைட் i20-யின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போதைய ஹூண்டாய் i20-யில் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், கார்னரிங் லைட்கள் மற்றும் ஆஸ்டா (O) மாடல்களில் உள்ளது போன்ற தரமான LED DRL-கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. எலைட் i20-யின் அழகியல் கூறுகளை போல, இயந்திரவியலில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், அப்படியே தொடர்ந்து செயல்படுகிறது. இதனால் 1.4-லிட்டர் U2 CRDi DOHC டீசல் மில் மூலம் 90PS-யையும், பெட்ரோல் வகைகளில் ஆற்றலகத்தின் பணி பொறுப்பை ஏற்றுள்ள 1.2-லிட்டர் காப்பா இரட்டை VVT யூனிட் மூலம் 83PS ஆற்றலையும் பெற முடிகிறது.
பெட்ரோல் ஆற்றல் வெளியீட்டின் அளவை பொறுத்த வரை, i20-யை பெலினோ பின்னுக்கு தள்ளுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு காரியமாகும். அதே நேரத்தில் கொரியன் வாகனத் தயாரிப்பாளரின் டீசல் மில்லின் முன், பெலினோ தடுமாறுகிறது. இந்நிலையில் இதற்கு கைகொடுத்து உதவும் ஒரே நம்பிக்கையான காரியம், அதன் எடைக்குறைந்த கட்டமைப்பு தன்மை (லைட்வெய்ட் கன்ஸ்ட்ரக்ஸன்) மட்டுமே. காரின் உட்புறத்திலும் புதுப்பிக்கப்பட்ட தன்மை தொடர்கிறது. i20-யின் உயர் மட்ட மாடல்களில், தரமான ஒரு ஆடியோ விஷூவல் நேவிகேஷன் (AVN) சிஸ்டம், ஒரு 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் USB, AUX மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகியவற்றை மேம்பாடுகளாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் துவக்க நிலை டிரிம்களில் ஒரு LCD இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனை கொண்டுள்ளது. காரின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் அதிகரிக்கும் வகையில், இரா-அஸ்டா(O) டிரிம் வகையில் உள்ள தரமான இரட்டை ஏர்பேக்குகளை, அதன் எல்லா வகைகளுக்கும் ஹூண்டாய் நிறுவனம் தற்போது அளித்துள்ளது.
மேலும் வாசிக்க2016 ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டு வரவுள்ள தயாரிப்பு வரிசையை ஹூண்டாய் வெளியிட்டது!