இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், 2016 ஆடி A4 காட்சிக்கு வைக்கப்படலாம்
ஆடி ஏ4 2015-2020 க்காக ஜனவரி 21, 2016 10:01 am அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
தனது நவீன தயாரிப்பான புதுப்பிக்கப்பட்ட ஆடி A4 சேடனை, ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் மூலம் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை கிரேய்ட்டர் நெய்டா பகுதியில் நடைபெற உள்ள எக்ஸ்போவில், இந்தியாவிற்கான ஒரு சிறப்பு தயாரிப்பாக இந்த சேடன் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. அதை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக, சில வதந்திகள் உலா வந்தாலும், வாகன தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிறுவனத்தின் MLB இவோ பிளாட்பாமை அடிப்படையாக கொண்ட இந்த சேடனின் பாடி ஷேல் மற்றும் பேனல்களில் எடைக் குறைந்த பொருட்களின் பயன்பாட்டை கொண்டிருக்கும். இதன் விளைவாக ஏறக்குறைய 120 கிலோ வரை கணிசமான எடைக் குறைவை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒட்டுமொத்த அழகியல் அம்சங்களின் மேம்பாடுகளாக, TT, R8 மற்றும் சமீபத்தில் அறிமுகமான Q7 ஆகிய மாடல்களில் காணக் கிடைக்கும் ஆடியின் நவீன வடிவமைப்பு தன்மையை (டிசைன் லேங்குவேஜ்), தனக்குள் வரிசைப்படுத்தி இருப்பதை காண முடிகிறது. இந்த மேம்பாடுகளில் ஒரு மறுசீரமைப்பு அடைந்த கிளெஸ்டர் மற்றும் மிகவும் நேர்த்தியான டெயில்-லெம்ப்கள் ஆகியவை உட்படுகின்றன.
அதிகம் கவனிக்கப்படாத சில நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், இந்த மேம்பாடு அடைந்த சேடனில், தற்போதைய மாடலில் காணப்படும் அதே ஆற்றலகமே தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா நிகழ்தகவுகளின்படி, இந்த காரில் 2.0-லிட்டர் டீசல் மற்றும் 1.8-லிட்டர் பெட்ரோல் என்று இவ்விரண்டு வகைகளும் கிடைக்கப் பெறும். இதில் டீசல் மில் மூலம் 174bhp ஆற்றலும், பெட்ரோல் யூனிட் மூலம் ஒப்பீட்டில் மிதமான 167bhp ஆற்றலும் பெறப்படும். மெர்சிடிஸ்-பென்ஸ் C220-ல் உள்ள யூனிட்டில் கிடைப்பதை விட மேற்கண்ட டீசல் ஆற்றலகம் சிறப்பாக செயல்படும். அதே நேரத்தில் BMW 320D உடன் ஒப்பிட்டால் சற்று குறைவாக காணப்படும். பெட்ரோல் ஆற்றலகத்தை பொறுத்த வரை, மேற்கண்ட மூன்றிலும் குறைவான வெளியீடு தான் கிடைக்கிறது.
இந்த காருக்கு ஏறக்குறைய ரூ.38 லட்சத்தை ஒட்டி, விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க