மேம்படுத்தப்பட்ட 2015 மாருதி சுசூக்கி எர்டிகா அக்டோபர் 10 –ஆம் தேதி அறிமுகம்
published on செப் 29, 2015 01:39 pm by cardekho for மாருதி எர்டிகா 2015-2022
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவின் மிகப் பெரிய நான்கு சக்கர உற்பத்தியாளரான மாருதி நிறுவனம், தனது மாருதி சுசூக்கி எர்ட்டிகாவின் மேம்படுத்தப்பட்ட 2015 மாடலை, வரும் அக்டோபர் 10 –ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய இந்திய மாடல், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜைகிண்டோ இந்தோனேஷியா சர்வதேச வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியத்தைப் போலவே தோற்றமளிப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மூன்று வருடத்திற்கு முன், 2012 –ஆம் ஆண்டில், எர்டிகா MVP அறிமுகப்படுத்தப்பட்ட போது, இரண்டு மாதங்களுக்குள் எதிர்பார்த்ததை விட அதிகமான கார்கள் பதிவு செய்யப்பட்டன.
சமீபத்தில், Zigwheels வழியாக வந்த தகவலின் படி, புதிய எர்டிகா சில அழகிய வடிவமைப்பு மேம்பாடுகளையும், கூடுதல் அம்ஸங்களையும் பெற்று வரும் என்று தெரிகிறது. மேலும், இந்த தகவலின் படி, புதிய எர்டிகா MPV –க்கான அலுவல் முறைசாரா பதிவுகளை, ஏற்கனவே பல விநியோகிஸ்தர்கள் தொடங்கிவிட்டனர் என்று தெரிகிறது. தற்போதுள்ள எர்டிகா ஏற்கனவே முழுவதுமாக விற்றுவிட்டதாகவும், இந்த தகவல் குறிப்பிடுகிறது.
புதிய 2015 மாருதி எர்டிகாவில், குரோமியத்தில் செய்யப்பட்ட எடுப்பான மூன்று பட்டைகளுடன் கூடிய முன்புற கிரில், குரோமியம் சூழப்பட்ட பனி விளக்குகள் மற்றும் பின்புறத்தில் நம்பர் பிளேட்டின் மேற்புறத்தில், எர்டிகா என்று பெயர் பொரிக்கப்பட்ட கண்ணைக்கவரும் பெரிய குரோமிய பட்டையும் பொருத்தப்படும். இந்த காரில், கூடுதலாக வலுப்படுத்தப்பட்ட புதிய முட்டுத் தாங்கி (பம்பர்); மறுவடிவமைக்கப்பட்ட 10 கம்பிகளை உடைய 15 அங்குல அலாய் சக்கரங்கள்; மற்றும் அதிகமாக பிரதிபலிக்கக் கூடிய புதிய பின்புற விள்க்குகளும் பொருத்தப்பட்டு கம்பீரமாக வலம் வர இருக்கிறது.
2015 எர்டிகாவின் உட்புறத்தை பார்க்கும் போது, அது மேலும் பொலிவடைந்துள்ளதை நாம் அறியலாம். இஞ்ஜினை இயக்குவதற்கும் நிறுத்துவதற்கும் பிரத்தியேகமான பட்டன்; புதிய இருக்கை மற்றும் விதான மேல் உரைகள்; மின்சக்தி மூலம் மடங்கக் கூடிய கண்ணாடிகள்; சாவி இல்லாமல் காரின் உள்ளே செல்லக் கூடிய வசதி; ஸ்மார்ட் பிளே இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு; பின்புறம் சென்று நிறுத்த உதவும் காமிரா (ரியர் பார்க்கிங் காமிரா); புளு டூத் ஆடியோ; காரை நிறுத்தும் போது ஓட்டுனருக்கு உதவும் பார்க்கிங் சென்சார்கள்; பாதிப் பாதியாக பிரிக்கக் கூடிய மூன்றாவது வரிசை இருக்கை; மற்றும் பின்புறத்தில் உள்ள ஆக்சேசரி சாக்கெட் ஆகியவை நம் கண்ணுக்கு தெரிந்த புதுமையான சிறப்பம்ஸங்களாகும்.
புதிய எர்டிகா, பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் என இரண்டு விதமான விருப்ப தெரிவுகளில் வரும். பெட்ரோல் ரக கார்கள், 1.4 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு 95 PS குதிரைத் திறனையும், 130 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்கின்றன. இதன் டீசல் ரக கார்களோ, 1.3 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு 90 PS குதிரைத் திறனும், 200 Nm டார்க்கையும் தயாரிக்கக் கூடியதாக இருக்கின்றன. இதன் டீசல் ரக மாடலில் மாருதியின் பிரத்தியேக கலப்பின கார்களுக்கான SHVS தொழில்நுட்பம், சியாஸ் ஹைபிரிட் காரில் உள்ளதைப் போலவே, பொருத்தப்பட்டுள்ளது. இந்த SHSV தொழில்நுட்பம் உபயோகப் படுத்தப்பட்ட மின்சாரத்தை புதுப்பிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம், 2015 எர்ட்டிகாவில் உபயோகப் படுத்தப்பட்ட மின்சாரத்தை மீண்டும் சேமித்து வைக்க, ஒரு எலக்டிரிக்கல் அமைப்பிற்குள் அனுப்பபடுகிறது. கலப்பின அமைப்பின் கோட்பாடுகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு, தற்போது இந்தியா அரசாங்கம் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, மாருதி எர்டிகா SHVS -விற்கான சுங்க வரி முறையே குறைக்கப்படும். இத்தகைய சலுகைகள், எர்டிகா குறைந்த விலையில் வெளிவர வழி வகுக்கின்றன.
மேம்படுத்தப்பட்ட மாருதி எர்டிகாவின் ஷோரூம் விலை ரூபாய் 7 லட்சத்திலிருந்து 9 லட்சம் வரை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015 மாருதி எர்டிகா, ஸுபீரியர் வெண்மை, சில்கி வெள்ளி, கிரானைட் கிரே, செரீன் நீலம், பேர்ல் புளு பிளேஸ் மற்றும் ரேடியண்ட் பீஜ் போன்ற 6 விதமான வண்ணக் கலவைகளில் வரும்.
0 out of 0 found this helpful