எக்ஸ் - ட்ரெயில் vs சிஆர் வி vs பஜேரோ: ஹைப்ரிட் தொழில்நுட்பம் புதிய ட்ரென்டாக உருவெடுக்குமா ?
நிஸ்ஸான் நிறுவனம் தங்களது SUV வாகனமான எக்ஸ் - ட்ரெயில் ஹைப்ரிட் வாகனத்தை சமீபத்தில் நடந்து முடிந்த 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தது. இதற்கு முன்னர் 2013 ல் நடந்த ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவிலும் இந்த வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்தியாவில் அறிமுகமாகும் போது அதன் பிரிவில் இந்த ஒரு வாகனம் தான் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட ஒரே வாகனமாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் பிரிவில் ஏற்கனவே உள்ள ஹோண்டா CR V மற்றும் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் கார்களுடன் இந்த புதிய எக்ஸ் - ட்ரெயில் போட்டியிடும் என்று தெரிகிறது. இந்த பிரிவு வாகனத்தை வாங்க நீங்கள் முடிவு செய்திருந்தால் , சரியான முடிவை எளிதாக நீங்கள் எடுக்க உதவும் வகையில் இந்த பிரிவில் உள்ள மூன்று வாகனங்களையும் ஒப்பிட்டு ஒரு தெளிவான ஒப்பீட்டை உங்களுக்கென அளிக்கின்றோம். இந்த எக்ஸ் - ட்ரெயில் ஹைப்ரிட் எத்தகைய விலையுடன் அறிமுகமாகும் என்பதை கணித்து அந்த விலைக்கு நெருக்கமாக உள்ள CR V, 2.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட வேரியன்ட் மற்றும் பஜேரோ ஸ்போர்ட் SUV வாகனங்களுடன் ஒப்பிட்டுளோம்.. படித்து பயன்பெறுங்கள்
ஆம். இந்த மூன்றுக்கும் இடையிலான போட்டி கடுமையாகத் தான் இருக்கிறது. CRV மற்றும் பஜேரோ வாகனங்கள் இந்திய சந்தையில் ஏற்கனவே சில ஆண்டுகளாக விற்பனை ஆகி வரும் நிலையில் நிஸ்ஸான் தனது எக்ஸ் - ட்ரெயில் வாகனத்தை அவ்வளவு சுலபத்தில் இந்த பிரிவில் நிலை நிறுத்தி விட முடியாது. அதே சமயம் பஜேரோ ஸ்போர்ட் கார்கள் SUV பிரியர்களை பெரிய அளவில் கவர்ந்திழுக்கவில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல் எக்ஸ் - ட்ரெயில் வாகனங்களும் இந்திய சந்தைக்கு புதிது இல்லை. பத்து வருடங்களுக்கு மேலாக எக்ஸ் - ட்ரெயில் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாங்கள் எதிர்பார்த்த அளவு இந்த வாகனங்கள் விற்பனை ஆகாத காரணத்தால் 2014 ஆம் ஆண்டு இந்த வாகன தயாரிப்பை இதன் தயாரிப்பாளர்கள் கைவிட்டனர்.
இப்போது இந்த எக்ஸ் - ட்ரெயில் வாகனத்தின் ஹைப்ரிட் வேரியன்டை நிஸ்ஸான் நிறுவனம் அறிமுகப்படுத்தும் போது அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது . மேலும் 40 bhp சக்தி மற்றும் 160 Nm அளவு டார்க் ஆகியவைகளை இந்த புதிய ஹைப்ரிட் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மில் மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிய வருகிறது. இதைத் தவிர மின்சார வாகனங்களுக்கே உரித்தான சிறந்த பிக் - அப், , குறைந்த அளவு எமிஷன் போன்ற அம்சங்கள் இந்த புதிய வாகனத்திலும் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். அதிக மைலேஜ் தருவதும் இந்த எக்ஸ் -ட்ரெயில் வாகனங்களின் இன்னொரு சிறப்பம்சம். இந்த அனைத்து சிறப்பம்சங்களையும் பார்க்கும் போது அறிமுகமான பின் இந்த எக்ஸ் - ட்ரெயில் ஹைப்ரிட் வாகனத்தை இதன் பிரிவில் உள்ள மற்ற வாகனங்கள் அவ்வளவு எளிதில் முந்திவிட முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் வாசிக்க நிஸ்ஸான் இந்தியாவின் புதிய விளம்பர தூதராக ஜான் ஆப்ரஹாம் நியமனம்