அதிக வசதிகளுடன்கூடிய மாருதியின் புதிய எஸ்-கிராஸ்: ஒரு விரைவு கண்ணோட்டம்

published on ஜூலை 22, 2015 01:44 pm by sourabh for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020

மாருதி சுசூகி நிறுவனம்,  சமீபத்தில் மலேஷியாவில் நடந்த 2015 IIFA விருதுகள் வழங்கும் விழாவில் புதிய சிறிய ரக மாறுபட்ட கண்கவர் தோற்றமுடைய எஸ் கிராஸ் காரை  காட்சிக்கு வைத்தது. அனைவரின் கவனத்தைகக் கவர்ந்த எஸ் கிராஸை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. முன்னமே அறிவித்தபடி, மாருதி சுசூகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சந்தைக்கு வந்ததும் ஏற்கனவே வாகன சந்தையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ரெனால்ட் டஸ்ட்டர்,  ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட்  மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஹூண்டாய் கிரேட்டா ஆகிய கார்களின் மேல் மக்களுக்கு உள்ள அதீத விருப்பத்தைத் தனது பக்கமாக இழுக்கும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.  

மாருதி சுசூகி நிறுவனம் சிறப்பு ஊடக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து எஸ்-கிராஸ் காரின் சிறப்பான மாறுபட்ட அம்சங்களை தெரியப்படுத்தவுள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் எஸ்-கிராஸின் இரண்டு டீசல் ரகத்தை டெல்டா, ஆல்பா, சிக்மா மற்றும் சிக்மா(ஓ) ஆகிய வேறுபட்ட வேரியன்ட்களில் வழங்கள்ளது.

மாருதி சுசூகி எஸ்-கிராஸ்: ஒரு விரைவு கண்ணோட்டம் 

வெளிப்புறத்தோற்றம்:

  • மாருதி எஸ்-கிராஸ் காரின் புத்துணர்ச்சி ஊட்டகூடிய முன்புற தோற்றம்  1,590 மிமீ உயரமும், 1,765 மிமீ அகலமும், 4,300 மிமீ நீளமும் கொண்டதாகவுள்ளது. அது 180mm கிரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டு 16 அங்குல ரேடியல் மீது கம்பீரமாக நிற்கிறது.
  • 2,600mm சக்கர அகலத்துடன் கூடிய மாருதி எஸ்-கிராஸ் பூட்டில் 430-லிட்டர் கொள்ளளவும், மேலும் அதனை அதிகரித்து கொள்ள பின்புற இருக்கையை நகர்த்தி கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
  • எப்போதும் உள்ள வெளிப்புற அம்சங்களான, கார் வண்ணத்திலேயே உள்ள ORVMs, கதவுக் கைப்பிடிகள், வெள்ளி சறுக்கல் தகடுகள் மற்றும் எஃகு விளிம்புகள் ஆகியனவும் இந்தக் காரில் உள்ளன. 
  • ப்ரொஜெக்டர் விளக்குகள், அலாய் வீல், பக்கவாட்டில் அணைந்து எரியும் விளக்குடன் கூடிய ORVMs மற்றும் LED  நிலை நிறுத்த விளக்குகள் ஆகியவற்றை விருப்பம்போல் தேர்ந்தெடுக்கும் வசதியானது மேம்பட்ட வேரியன்ட்களில் (மடல்களில்) வழங்கப்படும்.

உட்புறத்தோற்றம் 

  • உட்புறத்தோற்றம் அனைத்தும் மென்மையான கருப்பு நிறத்தில் அலங்கரிக்கபட்டு, ஏ‌சி லூவர்ஸில் குரோமிய முலாம் பூச்சு கொடுத்து மெருகேற்றியுள்ளனர்.. 
  • அடிப்படை வகை கார்களில் துணியால் ஆன மேற்கூரையும், உயர்தர வகைகளில் மெருகூட்டிய தோலினால் ஆன மேற்கூரையும் வடிவமைத்துள்ளனர்.
  • ஒருமித்த பூட்டும், சாவியில்லாமல் உள்ளே செல்லும் முறையும், பொத்தான் மூலம் இயக்கபடும் சன்னல்கள்; மற்றும் மின்திறனால் மாற்றத்தக்க ORVMs  ஆகிய பொதுவான அம்சங்கள் கொண்ட எஸ்-க்ராஸில் தானியங்கி  காற்றுப்பதனம், குரூயிஸ் கட்டுப்பாடு மற்றும் முன்னால் அமைந்த சாய்வான கை தாங்கியும் பயணத்தை இதமாக்குகிறது. 


பிற வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

  • பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காரின் முன்புறத்தில் நடுத்தர கார் வகையில் எப்போதும் உள்ள ஓட்டுனருக்குரிய காற்றுப்பையும்(ஏர் பேக்), உயர்தர கார் வகையில் இரண்டு காற்றுப்பைகளும் இணைக்கபட்டுள்ளன. 
  • முன், பின் சக்கர டிஸ்க் பிரேக்குகளுக்கு எ.பி.எஸ் முறையிலான கட்டுபாடு வழங்கபட்டுள்ளது. 
  • ஸ்டியரிங் கட்டுப்பாடு, பயண முறை வழிகாட்டு சாதனம் மற்றும் 7 அங்குல தொடுதிரை ஸ்மார்ட் பிளே  இன்போடெயின்மென்ட் சாதனம் வழங்கபட்டுள்ளது.
  • ப்ளூடூத் மற்றும் USB இணைப்பு ஆகிய அனைத்தும் உயர்தர மாடல்களில் வழங்கப்படுகிறன.

மாருதி எஸ்-கிராஸ் இஞ்ஜின் வகைகளை பற்றிய 5 முக்கியமான குறிப்புகள்:

சந்தையில் இரண்டு வகை டீசல் இஞ்ஜின் கிடைக்கிறது, ஆனால் பெட்ரோல் இஞ்ஜின் இல்லை.

  • 1.6 லிட்டர் DDiS  மற்றும் 1.3 லிட்டர் DDiS  ஆகிய இரு மாறுபட்ட திறன்களுடைய டீசல் இஞ்ஜின்கள் உள்ளன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெட்ரோல் இஞ்ஜின் மாடல் அறிமுகபடுத்தபடவில்லை.
  • இதன் பெப்பியேர் 1.6 லிட்டர் இஞ்ஜின் .3,750 ஆர்பிஎம் @ 120PS திறனை வெளியீடுகிறது. மேலும், இது அதிகபட்சமாக 1,750 ஆர்பிஎம் @ 320 முறுக்குவிசையை கொடுக்கிறது.
  • ஃபியட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட சிறிய 1.3 லிட்டர் மல்டிஜெட்டை வாங்கி, இங்கு DDiS200 என பெயரிடபட்டு (Ciaz மாடலில் உள்ளதை போல) பொருத்தப்பட்டுள்ளது. இது 90, PS @ 4000 ஆர்பிஎம் திறனையும், 200 Nm கொண்டு 1750 ஆர்பிஎம் உச்சபட்ச முறுக்கு விசையையும் கொடுக்கிறது.
  • 1.6-லிட்டர் இஞ்ஜினில் 6 வேக கைகளால் இயக்கபடும் கியர் பெட்டியும் 1.3-லிட்டர் இஞ்ஜினில் 5-வேக கைகளால் இயக்கபடும் கியர் பெட்டியும் பொருத்தப்பட்டுள்ளது.
  • எந்தவித தானியங்கி மற்றும் AWD மாடலும் இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.  

வேரியன்ட்களின் சிறப்பு அம்சங்கள் : 

  • மாருதி எஸ்-கிராஸ் 1.3லிட்டர்  டெல்டா மற்றும் 1.6லிட்டர் டெல்டா மாடலில் கட்டுபாடு பொத்தான்களுடன் கூடிய ஸ்டீயரிங், ப்ளூடூத் இணைப்பு சாதனம்,  கணினி திரையுடன் கூடிய பின்நோக்கு பார்க்கிங் சென்சார்,  கருப்பு மற்றும் சில்வர் மேற்கூரை அமைப்புகள் ,  முழுமையான சக்கர கவர்கள், முழுமையான குரோமிய கதவு கைப்பிடிகள்,  திருட்டை தடுக்கும் பாதுகாப்பு சாதனம் ஆகிய அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன.
  • எஸ்-கிராஸ் 1.3லிட்டர்  ஜீட்டா  மற்றும் 1.6லிட்டர் ஜீட்டா மாடலில்களில் ஸ்மார்ட்பிளே இன்போடெயின்மென்ட் கணினி மற்றும் புஷ்-பொத்தானை விசையூட்ட/ நிறுத்த பயன்படுத்தும் தொடு-பொத்தான் (1.3லிட்டர் மாடலில்  மட்டும்), மின்விசையால் மடக்க கூடிய ORVMs,  சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப தானியங்கும் கட்டுப்பாடு, பின் இருக்கைக்களுக்கு நடுவில் கை தாங்கி மற்றும் பொருட்கள் வைக்க வசதியான ட்ரேயும் பொருத்தப்பட்டுள்ளன.
  • எஸ்-கிராஸ் 1.3லிட்டர் ஆல்ஃபா மற்றும் 1.6லிட்டர்  ஆல்ஃபா மாடலில்களில் 16-அங்குல அலாய் சக்கரங்கள் மற்றும் மெருகூட்டிய தோலிலாலான மேற்கூரை, குரூயிஸ் கட்டுப்பாடு,  மழை நீரை துடைக்கும் வைப்பர்கள் மற்றும் தானியங்கி ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் உள்ளன.
  • எஸ்-கிராஸ் 1.3லிட்டர்  சிக்மா மற்றும் சிக்மா (ஓ) மாடலில்களில் காரின் நிற கதவு கைப்பிடிகள், வெள்ளி சறுக்கல் தகடுகள், எஃகு விளிம்புகள் மற்றும் உயர்தர துணியால் அமைக்கப்பட்ட மேற்கூரை, மேலும் இரண்டு காற்றுபைகள், அனைத்து சக்கர டிஸ்க் பிரேக்குகள், ABS மற்றும் 4 ஒலிப்பெட்டிகள் ஆகிய அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன.
வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி S-Cross 2017-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience