ஆட்டோ எக்ஸ்போவின் மிகவும் விலை உயர்ந்த அறிமுகம் எது எனத் தெரிந்து கொள்ள ஆசையா? இதோ அதை இங்கே காணலாம்!
published on பிப்ரவரி 09, 2016 05:37 pm by sumit for ஆடி ஏ8 2014-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆமாம், உங்களின் அந்த யூகம் சரியானதே! அது, ஆடி A8L செக்யூரிட்டி தான். இந்த காரின் விலை ரூ.9.15 கோடியில் இருந்து துவங்குகிறது. 2016 பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்த மெகா-கண்காட்சியில் அந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸ்போ 2016-வில் நட்சத்திரம் பதிக்கப்பட்ட நிகழ்ச்சியில் ரூ.2.47 கோடி விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய R8-க்கு பிறகு, ஆடி நிறுவனத்தின் தலையில் மின்னும் மற்றொரு நட்சத்திரமாக மேற்கூறிய காரும் தற்போது இணைந்துள்ளது.
இதன் பெயருக்கு தகுந்தாற் போல, இந்த காரின் தனிப்பட்ட விற்பனை உத்தேசம், பாதுகாப்பு தொடர்பானது. இந்த வாகனத்தில் குண்டுகள் துளைக்காத தன்மை (புல்லட் ப்ரூஃப்), வெடிகுண்டு தடுப்பு (பாம்ப் ப்ரூஃப்) ஆகியவற்றை கொண்டுள்ளதோடு, ரசாயனத் தாக்குதலில் இருந்து கூட உங்களை பாதுகாக்கும் திறன் கொண்டது என்று உறுதி அளிக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பூட்டில், ஒரு துணை பேட்டரி உடன் கூடிய ஒரு கவசம் கொண்ட கம்யூனிகேஷன் பாக்ஸ் காணப்படுகிறது. வெளி உலகத்தோடு தொடர்புக் கொள்ளும் வகையில், கிரில்லின் பின்புறத்தில் ஸ்பீக்கர்களுடன் கூடிய அதற்கே சொந்தமான இன்டர்காமை கொண்டுள்ளது. இதை தவிர, எமர்ஜென்ஸி எக்சிஸ்ட் சிஸ்டம், தீ அணைப்பு அமைப்பு (ஃபையர் எக்ஸ்டின்கெஸ்ஷிங் சிஸ்டம்) மற்றும் ஒரு எமர்ஜென்ஸி ஃபிரஷ் ஏர் சிஸ்டம் ஆகிய அம்சங்களை தேர்விற்குட்பட்டதாக நுகர்வோர் பெற்றுக் கொள்ள முடியும்.
அராமைடு ஃபேப்ரிக், சிறப்பு அலாய்கள் மற்றும் ஸ்டீல் கவசம் ஆகியவை சேர்ந்த ஒரு கலவையாக இணைப்பதன் மூலம் இந்த நான்கு சக்கர வாகனத்தை ஜெர்மன் கார் தயாரிப்பாளர் கட்டியெழுப்பி உள்ளார். அதே நேரத்தில், இந்த பிரிவை சேர்ந்த கார்கள் சந்திக்கும் வழக்கமான பிரச்சனையான எடையையும், இந்த காரில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்நிறுவனத்தால் முடிந்துள்ளது. A8-ல் உள்ள எல்லா விதமான ஆடம்பர அம்சங்களையும், இந்த வாகனம் கொண்டுள்ளது.
இதில் 4.0 லிட்டர் V8 மற்றும் W12 என்ஜின் என்ற இரு வகையான என்ஜின் டியூன்களை கொண்டுள்ளது. இதில் முதலாவது என்ஜின் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றலான 429 bhp-யும், இரண்டாவது என்ஜின் மூலம் 493 குதிரை சக்தியையும் வெளியிடுகிறது. இந்த வாகனத்தின் அதிகபட்சமான வேகத்தை மின்னோட்ட முறையில் கட்டுப்படுத்தி, மணிக்கு 210 கி.மீ என்று அளிக்கிறது.
நீங்கள் விருப்பமில்லாத சாலைகளின் வழியாக பயணிக்க சலித்துக் கொள்வது மற்றும் அதிக பழக்கம் இல்லாத சில பாதுகாப்பற்ற சாலைகளின் வழியாக பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவற்றில் நீங்கள் இருப்பீர்களானால், உங்களுக்கு உற்றத் துணையாக இந்த A8L இருக்கும். வாகனத் தயாரிப்பாளரால் பாதுகாப்பு அம்சங்களை கொண்டு நிரப்பப்பட்டுள்ள இந்த கார் மூலம் நீங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே (ஒரு தெளிவான சிறந்த அனுபவத்தோடு கூட) இருக்க முடியும்.
மேலும் வாசிக்க : போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs BMW – 3 சீரிஸ்
0 out of 0 found this helpful