முதல் பீட்டில் கார் வெளியிடப்பட்டு 70வது ஆண்டு நிறைவை வோல்க்ஸ்வேகன் விழாவாக கொண்டாடுகிறது
published on டிசம்பர் 31, 2015 03:22 pm by raunak for வோல்க்ஸ்வேகன் பீட்டில்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பாளர், உலகம் முழுவதும் 21 மில்லியன் பீட்டிலை விற்பனை செய்த நிலையில், கடந்த 2003 ஜூலை மாதம் முதல் தலைமுறை வாகனத்தின் உற்பத்தியை, மெக்ஸிகோவின் பியூப்லாவில் வைத்து நிறுத்தியது.
புதுடெல்லி:
ஜெர்மனியின் வோல்ப்ஸ்பெர்க்கில் முதல் பீட்டிலை தயாரிப்பு வரிசையில் களமிறக்கி, ஆட்டோமோட்டிவ் வரலாற்றிலேயே ஒரு உன்னதமான 70வது ஆண்டு விழாவை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் கொண்டாடுகிறது. ஏறக்குறைய இரண்டாம் உலகப்போரின் முடிவையொட்டி வந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் நேரத்தில் அதன் தயாரிப்பு தொடங்கப்பட்டது. கடந்த 1945 ஆம் ஆண்டின் முடிவில் ஏறக்குறைய 55 பீட்டில் யூனிட்களை தயாரிக்க முடிந்ததாக, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்தது. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், பொருட்களின் குறைப்பாடு காரணமாக ஒரு மாதத்தில் ஏறக்குறைய 1000 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து வோல்க்ஸ்வேகன் ஆக்டின்ஜிசெல்ஸ்சாஃப்ட் கார்ப்ரேட் வரலாறு துறையின் தலைவர் டாக்டர் மேன்ஃப்ரிட் கிரிஜெர் கூறுகையில், “ஆங்கிலேய இராணுவ அரசின் வலுவான குறிப்பிட்ட காரணத்திற்காக உதவி செய்ய துவங்கியது, வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு மிகவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதிலும் அந்நேரத்தில் தலைமை ஏற்க இவான் ஹெர்ஸ்ட் போன்றவர், தகுந்த மனிதராக கிடைத்தார். திறமை உடைய நடைமுறைவாதம், தொழிற்சாலை மற்றும் பணியாளர் குழுவிற்கு ஒரு லட்சியத்தை அளித்தது. ஆங்கிலேய இராணுவ பணியாளர்கள் மற்றும் ஜெர்மன் பணியாளர்களையும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து, செயல் இழந்த பணிகளை போல இல்லாமல் ஒரு வெற்றிகரமான சந்தையை இயக்கும் தொழிலாக அமைந்தது. வோல்க்ஸ்வேகன் தொழில்கூடத்தின் தரத்தை குறித்து அவர் அறிந்திருந்ததால், அதை சாலையில் உணர வைக்க முடிந்தது” என்றார்.
போருக்கு முன், ஹிட்லரின் ‘பிப்பில்ஸ் கார்’-ன் 630 யூனிட்கள் – ‘KdF-வேகன்’ (பீட்டில் போஸ்ட்-வார் என்ற அறியப்படும்) கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு யூனிட் ஆகியவை ஜெர்மனியின் போர் கால ஆயுத தளவாடங்கள் தொழிற்சாலையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அங்கு இராணுவ பொருட்களின் தயாரிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கடந்த 1945 ஏப்ரல் 11 ஆம் தேதி, இந்த இடத்தை அமெரிக்க இராணுவம் கைப்பற்றி, கடந்த 1945 ஜூன் மாதம், இந்த தொழிற்சாலையின் நம்பகத் தன்மையை ஆங்கிலேய இராணுவ அரசு ஏற்றுக் கொண்டது. கடந்த 1949 அக்டோபரில் இந்த வோல்க்ஸ்வேகன்வேர்க் GmbH-யை முடிவாக, ஜெர்மனியின் கரங்களில் திரும்ப அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கடந்த 1948 ஜூன் மாதம் ஏற்பட்ட நாணய சீர்த்திருத்தத்திற்கு (கரன்ஸி ரீஃபார்ம்) பிறகு, பீட்டிலின் தேவை குறிப்பிடத்தக்க வகையில் உயர ஆரம்பித்ததாக, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்தது. பீட்டிலின் கடைசிக்கட்ட தயாரிப்பு பணிகள், மெக்ஸிகோவின் பியூப்லா என்ற பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு 21 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் தயாரிக்கப்பட்டு, கடந்த 2003 ஜூலை மாதத்தோடு தயாரிப்பு கைவிடப்பட்டது.
மேலும் வாசிக்க : வோல்க்ஸ்வேகன் பீட்டில் சிற்றேடு, இணையதளத்தில் கசிந்தது
0 out of 0 found this helpful