• English
  • Login / Register

VW பீட்டில் இந்தியாவில் வெற்றி பெறுமா?

modified on டிசம்பர் 23, 2015 06:19 pm by manish for வோல்க்ஸ்வேகன் பீட்டில்

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உண்மைதான், வோக்ஸ்வேகன் பீட்டில் காரின் அடிப்படை விலை ரூ. 28.7 லட்சங்கள் (எக்ஸ்-ஷோரூம், புது டில்லி) என்று நிர்ணயிக்கப்பட்டு, இந்திய வாகன சந்தையில் மீண்டும் அடி எடுத்து வைத்துள்ளது. இதற்கு முன் இந்தியாவில் அறிமுகமான போது, இந்த கார் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பின், இந்த ஜெர்மானிய வாகன தயாரிப்பாளர் 21 –ஆம் நூற்றாண்டிற்கேற்ப இந்த காரை சற்றே மேம்படுத்தப்படுத்தி, அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய தனித்துவமான முறையில் தயாரித்து, தனது ஹாலோ காரை இந்தியாவில்  அறிமுகப்படுத்துவதன் மூலம், வாகன சந்தையில் தன்னை உறுதியாக நிலை   நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

வெளிப்புற அமைப்பு

ஹிட்லர் காலத்து வடிவமைப்பு நவீனப்படுத்தப்பட்டது போல இருக்கும் இந்த காரின் வடிவம், பகட்டான தோற்றம் தருவதாக உள்ளது. பீட்டிலின் தோற்றப் பொலிவை கூடுதலாக்கும் பொருட்டு, முன்புறத்தில் LED DRLகள் கொண்ட Bi-ஜெனான் ஹெட்லைட்கள் மட்டுமல்லாது, இரு ஓரங்களிலும் பனி விளக்குகள் நேர்த்தியாக பொறுத்தப்பட்டுள்ளன. பின்புறத்திலும், LED டெய்ல்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பிரபலமான வேல் டெய்ல் ஸ்பாய்லர் போன்ற தோற்றத்தில் ஒரு ஸ்பாய்லரும் பொருத்தப்பட்டுள்ளதால், பீட்டில் அற்புதமான பின்அழகைப் பெற்றுள்ளது.

உட்புற அமைப்பு

மொத்தம் 8 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட காம்போஸிஷன் மீடியா டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், பீட்டிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காரின் பாடி நிறத்திலேயே, டாஷ்போர்டும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, 3 ஆம்பியேண்ட் லைட்டிங் ஆப்ஷன்கள், ஸ்டியரிங் வீலில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவிகள், ஸ்டியரிங் வீல் முழுவதும் மூடும் லெதர் வேலைப்பாடு, லெதர் இருக்கைகள், ரெயின் சென்சார்கள், ஆட்டோமேடிக் ஹெட்லாம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரிஜெனெரெட்டிவ் பிரேகிங்க் அமைப்பு இணைக்கப்பட்ட ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் அமைப்பு போன்ற அம்ஸங்களையும் குறிப்பிட்டு கூறவேண்டும். எனவே, அடிப்படையில் உங்களது பணத்திற்கு ஏராளமான வசதிகள் இந்த வண்டியில் கிடைக்கிறது.

இஞ்ஜின் அமைப்பு

150 PS என்ற அளவில் சக்தியையும், 250 Nm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்யும் 1.4 லிட்டர் TSI பெட்ரோல் இஞ்ஜின், இந்த வோக்ஸ்வேகன் பீட்டில் மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. உயர்தரமான 7 ஸ்பீட் DSG ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் இந்த இஞ்ஜின் இணைக்கப்பட்டு வருகிறது. எனவே, 6.7 வினாடிகளுக்கும் குறைந்த நேரத்தில் 100 kmph வேகத்தை இந்த கார் எட்டிவிடும் வல்லமை பெற்றதாக இருக்கிறது. இந்தியாவில், பீட்டில் மாடலின் பரம போட்டியாளரான அபார்த் 595 காரை, இத்தகைய செயல்திறனைக் கொண்டு நிச்சயமாக மிஞ்சிவிடும்.

இறுதி வார்த்தைகள்:

பீட்டிலின் தனித்தன்மை மற்றும் இந்தியாவில் அதற்கு இருக்கும் போட்டியாளர்களை கருத்தில் கொள்ளும் போது, அபார்த் 595 காரின் விலையை விட பீட்டில் காரின் விலை ரூ. 1.1 லட்சம் குறைவாகவே உள்ளது. எனவே, தனது வெற்றிப் பாதையில் குறுக்கிடும் அனைத்து போட்டியாளர்களையும் நசுக்கி, இந்த கார் முதல் இடத்தைப் பிடிக்கும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கின்றன.

மேலும் வாசிக்க

வோல்க்ஸ்வேகன் பீட்டில் சிற்றேடு, இணையதளத்தில் கசிந்தது

was this article helpful ?

Write your Comment on Volkswagen பீட்டில்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • வாய்வே மொபிலிட்டி eva
    வாய்வே மொபிலிட்டி eva
    Rs.7 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience