சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

வால்வோ C40 ரீசார்ஜ் EV கார் விலை ரூ.1.70 லட்சம் உயர்வு மேலும் ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளையும் பெற்றுள்ளது!

வோல்வோ சி40 ரீசார்ஜ் க்காக அக்டோபர் 13, 2023 07:32 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

வால்வோ C40 ரீசார்ஜ் ரூ.62.95 லட்சம் (எக்ஸ்ஷோரூம் இந்தியா முழுவதும்) விலையில் கிடைக்கிறது.

  • வால்வோ, C40 ரீசார்ஜ் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் 100 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.

  • இது XC40 ரீசார்ஜ் உடன் அதன் தளத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

  • C40 ரீசார்ஜ் 78kWh பேட்டரி பேக் உடன் வருகிறது அது WLTP கோரப்பட்ட 530km பயணதூர வரம்பைக் கொண்டுள்ளது.

  • இது 408PS மற்றும் 660Nm அவுட்புட் கொண்ட டூயல் மோட்டார், ஆல் வீல் டிரைவ் (AWD) செட்டப்பை பெறுகிறது.

  • வால்வோ C40 ரீசார்ஜ் காருக்கான முன்பதிவை ரூ.1 லட்சம் டோக்கன் தொகை செலுத்தி செய்து கொள்ளலாம் .

ஒரு மாதத்திற்கு முன்பு, வால்வோ C40 ரீசார்ஜ் இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது முழு-எலெக்ட்ரிக் மாடலாக ரூ. 61.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதும்) அறிமுக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து,C40 ரீசார்ஜ் 100 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. வால்வோ இப்போது அதன் முழுமையான எலெக்ட்ரிக் SUV-கூபேயின் விலையை ரூ.1.70 லட்சம் உயர்த்தியுள்ளது, மற்றும் அது இப்போது ரூ.62.95 லட்சம் விலையில் கிடைக்கிறது. வால்வோ C40 ரீசார்ஜ் என்ன வழங்குகிறது என்பதைப் பற்றிய விரைவான கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.

C40 ரீசார்ஜ் என்பது XC40 ரீசார்ஜின் கூபே ஸ்டைல்டு பதிப்பாகும், மேலும் இரண்டும் ஒரே மாதிரியான காம்பேக்ட் மாடுலர் ஆர்க்கிடெக்சர் (CMA) தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட பின்புற பிரிவைத் தவிர, C40 ரீசார்ஜ் கிட்டத்தட்ட அனைத்தையும் முழு மின்சார எஸ்யூவி பதிப்புடன் பகிர்ந்து கொள்கிறது.

உட்புறத்தில் உள்ள தொழில்நுட்பம்

வால்வோ SUV-கூபேயில் 9 இன்ச் வெர்டிகலி-ஓரியன்டட் டச் ஸ்கிரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வெப்பம் மற்றும் குளிரூட்டும் செயல்பாட்டுடன் பவர்டு முன்புறஇருக்கைகள், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 600W 13 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஏர் பியூரிஃபையர் மற்றும் பனோரமிக் கண்ணாடி கூரை போன்ற அம்சங்கள் உள்ளன.

ஏழு ஏர்பேக்குகள், ஹில்-அசிஸ்ட், 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், கொலிஷன் அவாய்டன்ஸ் மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் டிடெக்‌ஷன் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவற்றை C40 ரீசார்ஜ் பயணிகளின் பாதுகாப்பிற்காக கொடுத்துள்ளது.

பேட்டரி ரேன்ஜ்

வால்வோ C40 ரீசார்ஜ், XC40 ரீசார்ஜின் அதே 78kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது, ஆனால் XC40 ரீசார்ஜின் 418 கிமீ உரிமை கோரப்பட்ட பயணதூர வரம்போடு ஒப்பிடும்போது அதிக WLTP-உரிமை கோரப்பட்ட பயணதூர வரம்பை 530 கிமீ வழங்குகிறது. பேட்டரி பேக்கின் மேம்பட்ட ஆற்றல் செயல்திறன் மற்றும் C40 ரீசார்ஜின் அதிக ஏரோடைனமிக் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு காரணமாக இந்த மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த பேட்டரி பேக் 408PS மற்றும் 660Nm அவுட்புட்டை கொடுக்கும் ஆல் வீல் டிரைவ் (AWD) டூயல் மோட்டார் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அவுட்புட் உடன், C40 ரீசார்ஜ் 4.7 வினாடிகளில் 100 kmph வேகத்தை எட்டும்.

அது 27 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும்150kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. வால்வோ எஸ்யூவி-யில் 11kW AC சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரம் அறிந்து கொள்ளுங்கள் : 500கிமீ-க்கும் அதிகமான பயணதூரத்தைக் கோரும் இந்தியாவில் உள்ள இந்த 11 எலெக்ட்ரிக் கார்கள் !.

போட்டியாளர்கள்

BMW i4, ஹூண்டாய் அயோனிக் 5, கியா EV6 மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் போன்ற மாடல்களுக்கு மாற்றாக வால்வோ C40 ரீசார்ஜ் இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள: C40 ரீசார்ஜ் ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Volvo சி40 ரீசார்ஜ்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை