பிரேசிலில் வெளியிடப்பட்டது Volkswagen Tera: தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
வோல்க்ஸ்வேகன் tera க்காக மார்ச் 04, 2025 07:16 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் கொண்டு வரப்பட்டால் ஃபோக்ஸ்வேகன் போர்ட்ஃபோலியோவில் என்ட்ரி-லெவல் எஸ்யூவி -யாக டெரா இருக்கும்.
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் கடந்த 2024 -ம் ஆண்டில் சப்-4m பிரிவில் கைலாக் எஸ்யூவி -யை அறிமுகப்படுத்தியது. இருந்தாலும் கூட அந்த இடம் இன்னும் சரிவர ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தால் நிரப்பப்படவில்லை. இது சமீபத்தில் பிரேசிலிய சந்தையில் வெளியான எஸ்யூவி -யான டெரா அந்த வெற்றிடத்தை நிரப்ப சரியானதாக இருக்கும். ஃபோக்ஸ்வேகன் இந்தியா தனது வரவிருக்கும் இரண்டு மாடல்களை சமீபத்தில் உறுதிப்படுத்தியது ஆனால் அப்போது டெரா தற்போது இந்தியாவில் வெளியிடப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே:
ஒரு ஸ்போர்ட்டியரான வெளிப்புறம்
டெரா -வில் LED லைட்ஸ் மற்றும் ஃபுளோட்டிங் ரூஃப் -க்கான எஃபெக்ட்டை கொடுக்கும் பிளாக் ரூஃப் உள்ளிட்ட பல நவீன டிஸைன் எலமென்ட்களை இதில் பார்க்க முடிகிறது. இது ஸ்பிளிட்டட்-கிரில் வடிவமைப்புடன் வருகிறது. மேல் பகுதியில் LED DRL -கள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் லோகோவை இணைக்கும் குரோம் ஸ்ட்ரிப் உள்ளது. கீழே இது ஆக்ரோஷமாக வடிவமைக்கப்பட்ட பம்பர் மற்றும் ஃபாக் லேம்ப் ஹவுசிங்ஸ் மற்றும் பெரிய ஏர் டேம் -க்கான மெஷ் வடிவமைப்பு உள்ளது.
டூயல்-டோன் அலாய் வீல்கள், சாய்வான ரூஃப்லைன் மற்றும் ரூஃப் ரெயில்களுக்கான பிளாக் ஃபினிஷ் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. பின்புறத்தில் இது மினிமலிஸ்டிக் தோற்றத்தைக் கொண்டுள்ளது. மற்றும் பிளாக் பம்பர் உயரமான இடத்தில் உள்ளது. எல்இடி டெயில் லைட்ஸ் பிளாக் கலர் ஸ்ட்ரிப்பால் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் டெயில்கேட்டில் உள்ள ‘டெரா’ பேட்ஜும் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
ஒரு வழக்கமான கேபின்
டெராவின் உட்புறம் பழக்கமானதை போல பலருக்கு தோன்றலாம். காரணம் கேபின் வடிவமைப்பு ஸ்கோடா கைலாக் போலவே உள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பெரிய 10-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (கைலாக் 8-இன்ச் யூனிட்), டச்-இயக்கப்பட்ட காலநிலை கட்டுப்பாடு மற்றும் ஸ்கோடா எஸ்யூவி -யின் ஆட்டோமெட்டிக் பதிப்பில் காணப்பட்ட அதே கியர் ஷிஃப்டர் போன்ற அமைப்பை நீங்கள் கவனிக்கலாம். இது மற்ற ஃபோக்ஸ்வேகன் கார்களுடன் ஒப்பிடும் போது வழக்கமான 3-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் ஆல் பிளாக் கேபின் தீம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
வசதிகள் நிறைந்துள்ள எஸ்யூவி
ஃபோக்ஸ்வேகன் இன்னும் டெராவின் முழுமையான விவரங்கள் மற்றும் வசதிகள் பட்டியலை வெளியிடவில்லை. ஆனால் அதன் கேபினில் சில உபகரணங்களை பார்க்க முடிகிறது. இதில் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், 10 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும். ஃபோக்ஸ்வேகன் பிரேசில் பல ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவற்றுடன் டெராவில் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள்ளது.
மேலும் படிக்க: MY2025 Skoda Slavia மற்றும் Skoda Kushaq அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இன்ஜின் விவரங்கள்
ஃபோக்ஸ்வேகன் டெராவின் பவர்டிரெய்ன் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும் இது உலகளாவிய சந்தைகளில் டர்போ-பெட்ரோல் மற்றும் ஃப்ளெக்ஸ்-எரிபொருள் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இது இந்தியாவிற்கு வந்தால் அதே 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (115 PS/178 Nm) கைலாக்குடன் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கலாம். இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனுடன் வருகிறது.
ஃபோக்ஸ்வேகன் டெராவின் MQB A0 தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்ம் MQB A0 IN என அழைக்கப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்தே கைலாக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வருமா ?
இந்தியாவில் டெரா வெளியிடப்படுமா என்பதை ஃபோக்ஸ்வேகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. என்றாலும் என்ட்ரி லெவல் பிரிவில் உள்ள இடைவெளியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஸ்கோடாவை விட ஃபோக்ஸ்வேகன் -ன் பிரீமியமாக இருக்கும் என்ற நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு பார்க்கையில் டெரா -வின் விலை கைலாக் -கை விட சற்று அதிகமாக இருக்கலாம். இப்போது கைலாக் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை உள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). டெரா இந்தியாவுக்கு வந்தால் டாடா நெக்ஸான், ஸ்கோடா கைலாக், மாருதி பிரெஸ்ஸா, மற்றும் சோனெட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.