• English
    • Login / Register

    Volkswagen Taigun & Virtus டீப் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடு வேரியன்ட்களின் விலை இப்போது குறைந்துள்ளது

    வோல்க்ஸ்வேகன் விர்டஸ் க்காக டிசம்பர் 05, 2023 09:00 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 41 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    எக்ஸ்ட்டீரியர் ஷேடு வேரியன்ட் டைகுன் மற்றும் விர்ட்டஸின் 1.5 லிட்டர் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

    Volkswagen Virtus and Volkswagen Taigun Deep Black Pearl

    • டீப் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடு இப்போது டைகுன் மற்றும் விர்ட்டஸ் -ன் டாப்லைன் வேரியன்ட்களுடன் கிடைக்கிறது.

    • டாப்-ஸ்பெக் 1-லிட்டர் ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸின் டீப் பிளாக் பேர்ல் எக்ஸ்டீரியர் ஷேடிற்கு வாடிக்கையாளர்கள் ரூ.32,000 வரை அதிகமாக செலவிட வேண்டும்.

    • டீப் பிளாக் பெர்ல் ஷேடில் உள்ள டைகுன் -ன் டாப்-ஸ்பெக் 1-லிட்டர் வேரியன்ட்டுக்கு, நீங்கள் ரூ.25,000 வரை அதிகமாகச் செலுத்த வேண்டும்.

    • இரண்டு மாடல்களின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களுடன் இந்த நிறத்தை பெறலாம்.

    ஜூன் 2023 -ல்,  ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஆகியவற்றின் GT லைன் வேரியன்ட்களுடன் டீப் பிளாக் பேர்ல் எக்ஸ்ட்டீரியர் ஷேடு கிடைத்தது. இப்போது, ஃபோக்ஸ்வேகன் இந்த வண்ண விருப்பத்தை இரண்டு மாடல்களின் 1-லிட்டர் பதிப்புகளுக்கும் நீட்டித்துள்ளது. இருப்பினும், இந்த ஷேடு இன்னும் சில கூடுதல் அம்சங்களுடன் வரும் டைகுன் மற்றும் விர்ட்டஸ் ஆகிய கார்களின் டாப்லைன் வேரியன்ட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவற்றின் விலையை இங்கே பார்ப்போம்.

    மாடல்

    வழக்கமான டாப்லைன்

    டீப் பிளாக் பெர்லுடன் டாப்லைன் (கூடுதல் அம்சங்களுடன்)

    வித்தியாசம்

    ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் 1-லிட்டர் MT

    ரூ.14.90 லட்சம்

    ரூ.15.22 லட்சம்

    + ரூ. 32,000

    ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் 1-லிட்டர் AT

    ரூ.16.20 லட்சம்

    ரூ.16.47 லட்சம்

    + ரூ 27,000

    வோக்ஸ்வேகன் டைகுன் 1-லிட்டர் MT

    ரூ.15.84 லட்சம்

    ரூ.16.03 லட்சம்

    + ரூ 19,000

    வோக்ஸ்வேகன் டைகுன் 1-லிட்டர் MT

    ரூ.17.35 லட்சம்

    ரூ.17.60 லட்சம்

    + ரூ 25,000

    ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸின் டீப் பிளாக் பெர்ல் வேரியன்ட்க்கு, வாடிக்கையாளர்கள் ரூ. 32,000 வரை அதிகமாக செலுத்த வேண்டும், அதே சமயம் டைகுன் டீப் பிளாக் பெர்ல் நிறத்திற்கு ரூ. 25,000 வரை கூடுதல் செலவாகும். குறிப்புக்கு, விர்ட்டஸ் மற்றும் டைகுன் -ன் 1-லிட்டர் டீப் பிளாக் பேர்ல் வேரியன்ட்கள் அவற்றின் 1.5-லிட்டர் மாடல்களை விட ரூ.2.2 லட்சம் வரை குறைவாகத் தொடங்குகின்றன.

    இதையும் பார்க்கவும்: ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா எலிகன்ஸ் எடிஷன்கள் அறிமுகம்… விலை ரூ. 18.31 லட்சத்தில் இருந்து தொடக்கம்

    சிறப்பம்சங்கள்

    Volkswagen Virtus Interior

    விர்ட்டஸ் மற்றும் டைகுன் இரண்டின் டாப்லைன் டிரிம்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 -இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப், பவர்டு முன் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் இல்லுமினேட்டட் ஃபுட்வெல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த மாடல்களின் பாதுகாப்பு 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரியர் வியூ கேமரா மற்றும் அனைத்து பயணிகளுக்கும் 3 -பாயின்ட் சீட் பெல்ட்கள் ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது.

    இதையும் பார்க்கவும்: சன்ரூஃப் கொண்ட சிஎன்ஜி கார் வேண்டுமா? இதோ உங்களுக்கான ஆப்ஷன்கள்

    பவர்டிரெயின் விவரங்கள்

    Volkswagen Virtus 1-litre Engine

    இரண்டு கார்களும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 115 PS மற்றும் 178 Nm அவுட்புட்டை கொடுக்கின்றன, இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றின் GT வேரியன்ட்களுடன் அதிக சக்திவாய்ந்த 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (150 PS / 250 Nm) ஆப்ஷனையும் பெறுகின்றன. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

    போட்டியாளர்கள்

    ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஹோண்டாசிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா, மற்றும் மாருதி சியாஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரானது ஸ்கோடா குஷாக், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

    மேலும் படிக்க: விர்ட்டஸ் ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Volkswagen விர்டஸ்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் சேடன் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience