ஃபோக்ஸ்வேகன் டைகுன் புதிய GT வேரியன்ட் மற்றும் புதிய வண்ணங்களுடன் லிமிடெட் எடிஷன்களை பெறுகிறது
modified on ஜூன் 12, 2023 09:39 pm by rohit for வோல்க்ஸ்வேகன் டைய்கன்
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய வேரியன்ட்கள் மற்றும் விலைகளுடன், DSG ஆப்ஷன், லோயர் டிரிமில் அணுகக்கூடியதாக மாறியுள்ளது, அதே நேரத்தில் டாப்-ஸ்பெக் GT+ வேரியன்ட்டை மிகவும் விலை குறைவானதாக மாற்றுகிறது.
-
ஃபோக்ஸ்வேகன் ஏப்ரல் மாதம் நடந்த அதன் வருடாந்திர கூட்டத்தில் புதிய GT வேரியன்ட் மற்றும் சிறப்பு வண்ணங்களை அறிமுகப்படுத்தியது.
-
எஸ்யூவி -யின் லிமிடெட் எடிஷன்களை முன்பதிவுகளை அதன் இணையதளம் வழியாக மட்டுமே ஏற்றுக்கொள்கிறது.
-
GT DSG ஆனது GT MTக்கு மேலே இடம் பெற்றுள்ளது, GT பிளஸ் MT ஆனது GT பிளஸ் DSGக்கு கீழே இடம் பெற்று உள்ளது.
-
அனைத்து புதிய வேரியன்ட்களும் பெரிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.
-
லிமிடெட் எடிஷன்களுடன் புதிய வேரியன்ட்கள் புதிய டீப் பிளாக் பேர்ல் மற்றும் கார்பன் ஸ்டீல் கிரே மேட் ஷேடுகளில் கிடைக்கின்றன.
-
லிமிடெட் எடிஷன்களில் உள்ள சிறப்பம்சங்கள் உட்புறம் மற்றும் வெளிப்புறம் உள்ள ரெட் ஆக்ஸன்ட்கள் , மற்றும் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் ஆகியவை ஆகும்.
-
புதிய வேரியன்ட்களின் விலைகள் ரூ16.80 லட்சம் முதல் ரூ.19.46 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) நிர்ணயிக்கப்பட்டுள்ளன
-
லிமிடெட் எடிஷன் மாடல்களின் டெலிவரி 2023 ஜூலை மாதம் முதல் தொடங்கும்.
இந்த வருட ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற கார் தயாரிப்பு நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத் தில் அறிமுகப்படுத்தபட்டஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபெர்பாமன்ஸ் வரிசை கார்கள் இப்போது விற்பனைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி, எஸ்யூவி ஆனது 'GT எட்ஜ் லிமிடெட் கலெக்ஷனின்' ஒரு பகுதியாக இரண்டு புதிய லிமிடெட் எடிஷன்களையும் பெற்றுள்ளது, இதற்கான முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே திறந்திருக்கும்.
புதிய வேரியன்ட்கள் மற்றும் விலை
|
|
GT DCT |
|
GT+ MT |
|
|
|
|
|
|
|
|
|
குறிப்புக்காக, ஃபோக்ஸ்வேகன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் டைகனின் என்ட்ரி-லெவல் செயல்திறன் தயாரிப்பு GT கார்களை டிரிம் மட்டுமே வழங்கியது, அதே நேரத்தில் டாப்-ஸ்பெக் GT பிளஸ் ஆனது 7-ஸ்பீடு DSG (இரட்டை-கிளட்ச் ஆட்டோமெட்டிக்) மட்டுமே. கொண்டுள்ளது இப்போது, 150PS 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் இரண்டு GT வேரியன்ட்களும் இரண்டு டிரான்ஸ்மிஷன்களின் தேர்வைப் பெறுகின்றன.
புதிய GT DCT வேரியன்ட் GT MTக்கு மேல் இடம் பெற்று உள்ளது, இதன் விலை ரூ.16.26 லட்சம். மறுபுறம், GT+ MT ஆனது GT+ DCTக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.18.71 லட்சம். புதிய வேரியன்ட்களுடன், டாப்-ஸ்பெக் GT+ காரை மிகவும் மலிவானதாக மாற்றும் போது, லோயர் டிரிமில் DCT ஆப்ஷன் மிகவும் விலை குறைவானதாக மாற்றியுள்ளது.
டைகுன் சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் உடன் (6-ஸ்பீடு MT மற்றும் AT இரண்டையும் கொண்டது), டைனமிக் லைன் வேரியன்ட்களான கம்ஃபோர்ட்லைன், ஹைலைன் மற்றும் டாப்லைன் ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் டீப் பிளாக் பேர்ல் மற்றும் கார்பன் ஸ்டீல் கிரே மேட் ஷேடுகளில் டைகுனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். கார் தயாரிப்பு நிறுவனம் 2023 ஜூலை முதல் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை வழங்கத் தொடங்கும். இந்த GT எட்ஜ் வேரியன்ட்கள் முன்பதிவுகள், ஆர்டர்களுக்காக கட்டமைக்கப்பட்டவை ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்: A.I. இன் படி ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்தியாவில் உள்ள முதன்மையான 3 குடும்ப எஸ்யூவிகள் இதோ
டைகுன் GT எட்ஜ் வேரியன்ட்களில் என்ன புதிதாக உள்ளது?
டீப் பிளாக் பெர்ல் பதிப்பில், சிவப்பு பிரேக் காலிப்பர்கள், இருக்கைகளுக்கு சிவப்பு தையல் மற்றும் சிவப்பு சுற்றுப்புற விளக்குகள் உள்ளிட்ட வழக்கமான GT க்கான தனிப்பட்ட - மேம்பாடுகள் உடன் புதிய கிளாஸி பிளாக் எக்ஸ்டீரியர் ஆகியவையும் உள்ளன . மறுபுறம், மேட் எடிஷன் ORVM -கள், கதவு கைப்பிடிகள் மற்றும் பின்புற ஸ்பாய்லர் மற்றும் முன்புறம் மற்றும் பக்கங்களில் சிவப்பு தொடுகைகளுக்கு ஒரு கிளாஸ் பிளாக் ஃபினிஷை பெறுகிறது.
இது தவிர, எஸ்யூவி முன்பு இருந்த அதே உபகரணப் பட்டியலில் தொடர்கிறது. இதில் 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் (ஸ்டாண்டர்டு GT வேரியன்ட்களில் இன்னும் கிடைக்கவில்லை) ஆகியவை அடங்கும். இதன் பாதுகாப்பு கருவியில் அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், ரிவர்சிங் கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ISOFIX குழந்தை இருக்கைகள் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்கவும்: கார்பிளே மற்றும் மேப்ஸ் பயன்பாட்டிற்கான புத்தம் புதிய அம்சங்களை உள்ளடக்கிய ஆப்பிள் iOS 17
விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய லிமிடெட் எடிஷன் நிறங்கள் மட்டுமே GT பிளஸ் DSG வகைகளுக்கு பிரீமியம் சேர்க்கும் வகையில் டைகுன் ரூ.11.62 லட்சம் முதல் ரூ.19.06 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. அது டொயோட்டா ஹைரைடர், மாருதி கிரான்ட் விட்டாரா, கியா செல்டோஸ்,ஹூண்டாய் கிரெட்டா , எம்ஜி ஆஸ்டர் ஸ்கோடா குஷாக் மற்றும் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது .
மேலும் படிக்கவும்: ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஆன் ரோடு விலை