வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் எமிஷன் ஊழல் சம்மந்தமான அறிக்கையை நவம்பர் இறுதியில் சமர்பிக்க உள்ளது.
published on அக்டோபர் 30, 2015 05:37 pm by அபிஜித் for வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
உலக அளவில் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தை உலுக்கிய எமிஷன் ஊழல் விவகாரத்தின் பாதிப்புக்கள் இப்போது இந்தியாவிலும் தெரிய துவங்கியுள்ளது. வோல்க்ஸ்வேகன் இந்த பிரச்சனையை அணுகும் முறை மற்றும் விசாரணைகள் சம்மந்தப்பட்ட ஒரு அறிக்கையை இந்திய அரசிடம் நவம்பர் மாத இறுதிக்குள் சமர்பிக்க உள்ளது. மேலும் இந்த ஊழல் விவகாரத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கை, சமர்பிக்க பட உள்ள அறிக்கையில் கிடைக்கும் தகவல்களைப் பொறுத்தே அமையும் என்றும் வோல்க்ஸ்வேகன் கூறியுள்ளது.
இந்த எமிஷன் ஊழல் விவகாரத்தால் உலகம் முழுவதிலும் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் பல வித இடையூறுகளை சந்தித்து வரும் இந்நேரத்தில் அதன் பாதிப்பு இப்போது அவர்களின் இந்திய நிறுவனங்களிலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக எமிஷன் குளறுபடி காரணமாக சுமார் 1 லட்சம் வாகனங்களை வோல்க்ஸ்வேகன் திரும்ப பெற்றுக்கொள்ளும் என்பது போன்ற செய்தியும் வெளியாகி இருந்தது.
இதையும் படியுங்கள் : வோல்க்ஸ்வேகன் எமிஷன் ஊழலை திரைப்படமாக்கும் உரிமையை லியனார்டோ டி கேப்ரியோ தனதாக்கிக் கொண்டார்.
இன்னொரு முக்கிய நிகழ்வாக தற்போது நடைபெற்றுவரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் டொயோடா நிறுவனத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான அக்கியோ டொயோடா , வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அதிகப்படியான வாகனங்களை விற்பனை செய்து முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் டொயோடா நிறுவனமும் கடந்த காலத்தில் சில தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பெரிய அளவில் வாகனங்களை திரும்ப பெற்றுக் கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது என்றும் அதற்கு பின்னர் எண்ணிக்கையை விட தரத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கினோம் என்றும் கூறினார்.
மேலும் அவர், இந்த டீசல் ஊழல் விஷயம் 11 மில்லியன் வோல்க்ஸ்வேகன் கார்களை பாதித்திருந்தாலும் தற்போது தயாரிப்பில் உள்ள வோல்க்ஸ்வேகன் கார்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் கூறினார்.
நடைபெற்று வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் கடந்த புதனன்று வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய சிஇஒ நடந்துவிட்ட எமிஷன் ஊழலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த காலாண்டில் தான் நஷ்டத்தை தனது காலாண்டு அறிக்கையில் வோல்க்ஸ்வேகன் பதிவு செய்துள்ளது.
இதையும் படியுங்கள் : 'வோல்க்ஸ்பெஸ்ட்' என்ற பெயரில் அற்புதமான சலுகைகளை உள்ளடக்கிய திட்டத்துடன் வோல்க்ஸ்வேகன் பண்டிகை காலத்தை துவக்கியுள்ளது.
மேலும் சில நாட்களுக்கு முன் வோல்க்ஸ்வேகன் தனது போலோ கார்களின் விநியோகத்தை சில சிறிய காரணங்களுக்காக திடுதிப்பென்று நிறுத்தி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.